No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

மார்க் ஆண்டனி (தமிழ்) அமேசான் ப்ரைம்

100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த விஷாலின் முதல் படம் என்ற பெருமை மார்க் ஆண்டனிக்கு உண்டு. தியேட்டர்களில் பெரும் வெற்றிபெற்ற இப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டைம் டிராவல் கதையை அடிப்படையாக கொண்ட படம்தான் மார்க் ஆண்டனி. 1975-ல் செல்வராகவனால் கண்டுபிடிக்கப்பட்ட டைம் டிராவல் போன் 1995-ல் விஷாலின் (மார்க்) கையில் கிடைக்கிறது. அதை வைத்து தன் தந்தை ஆண்டனியால் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மாற்றி அமைக்க முயல்கிறார். அதன் பிறகு என்ன நடந்த்து? இதில் ஆண்டனியின் நண்பரான கேங்ஸ்டர் ஜாக்கியின் பங்கு என்ன என்பதுதான் மார்க் ஆண்டனி படத்தின் கதை.

நாயகன் விஷாலாக இருந்தாலும், பல இடங்களில் நடிப்பால் அவரை ஓவர்டேக் செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

கடார் 2 ( Gadar 2 – இந்தி) – ஜீ5

அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல், அமிஷா படேல் உள்ளிட்டோர் நடிக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் கடார் 2. 600 கோடி ரூபாய் வசூலித்து, பெரும் சாதனை படைத்த இப்படம் இப்போது ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள தன் தந்தையை மீட்க அந்நாட்டுக்கு செல்கிறார் ஜீத். அவரால் தன் முயற்சியில் வென்று அப்பாவை மீட்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால் மக்கள் மனதில் இன்னும் ஆறாமல் இருக்கும் காயங்களை இப்படம் சொல்கிறது.

மத்தகம் சீசன் 2 (தமிழ் வெப்சீரிஸ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்

மத்தகம்’ வெப் சீரிஸின் முதலாவது பாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த்து. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது சீசன் இப்போது வெளியாகி உள்ளது. பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் அதர்வா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிக மோசமான டானான மணிகண்டனுக்கும், நேர்மையான காவல்துறை அதிகாரியான அதர்வாவுக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் இத்தொடரின் மையக் கரு.

போலீஸ் ஸ்டோரியை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ஏற்ற தொடர் இது.

83 (இந்தி) – நெட்பிளிக்ஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்திய அணி முதல் முறையாக 1983-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையை வென்றது எப்படி என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் நெட்பிளிக்ஸில் உள்ள 83 பட்த்தை பார்க்கலாம்.

கபீர் கான் இயக்கியுள்ள இந்த படத்தில், ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலகக் கோப்பையின்போது இந்திய அணி இங்கிலாந்தில் எதிர்கொண்ட சவால்கள், அந்த சவால்களை அவர்கள் சமாளித்த விதம் ஆகியவற்றை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கபீர் கான்.

இந்த படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங்கும், ஸ்ரீகாந்த்தாக ஜீவாவும் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...