No menu items!

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?


Bambai Meri Jan (பம்பாய் மேரி ஜான் –இந்தி வெப் சீரிஸ்) – அமேசான் ப்ரைம்

மும்பை நிழல் உலகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தி வெப் சீரிஸான ‘பம்பாய் மேரி ஜான்’, அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஹாஜி மஸ்தான், அண்ணா, பதான் ஆகிய 3 நிழல் உலக தாதாக்களை மீறி தாரா காத்ரி என்ற இளைஞன் எப்படி மும்பை நிழல் உலகின் முடிசூடா மன்னனாக உருவெடுக்கிறான் என்பதுதான் இந்த வெப் சீரிஸின் கதை. இந்தியாவின் பிரபல நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் அப்பா ஒரு போலீஸ்காரர்.

தேபோல் இந்த தொடரில் வரும் நாயகனின் அப்பாவும் ஒரு போலீஸ்காரர். அதேபோல் தாவூத் எப்படி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்றானோ, அதேபோல் இத்தொடரின் நாயகன் தாராவும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் செல்கிறான். இதுபோன்ற தாவூத் இப்ராஹிமின் வாழ்க்கைச் சம்பவங்கள் பல இத்தொடரில் இருப்பதால், இது அவரது நிஜக் கதையோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் படக்குழுவினர் அதை மறுத்துள்ளனர்.

நிழலுலக கதை என்பதாலோ என்னவோ இந்த தொடரை முழுக்க பழைய ‘நாயகன்’ பட்த்தைப் போல் மங்கிய வெளிச்சத்தில் எடுத்துள்ளனர். அதனால் கண் வலிப்பது மட்டும்தான் ஒரு பிரச்சினை. மற்றபடி தொடர் முழுவதும் லோகேஷ் கனகராஜின் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.

லவ் (தமிழ்) – ஆஹா

சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான த்ரில்லர் படம்தான் லவ். பரத், வாணி போஜன் ராதாரவி, விவேக் பிரசன்னா நடிக்க இப்படத்தை தமிழில் எடுத்திருக்கிறார்கள்.

காதலித்து திருமணம் செய்துகொள்ளும் பரத்துக்கும், வாணி போஜனுக்கும் இடையே நாளடையில் உறவுச் சிக்கல் ஏற்படுகிறது. பின்னர் அது கொலையில் முடிகிறது. யார் யாரைக் கொன்றார்கள்? அந்த கொலையை எப்படி மறைக்கிறார்கள் என்பதை பல திருப்பங்களுடன் கூடிய கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அர்.பி.பாலா.

படத்தின் தலைப்பில் மட்டும்தான் லவ் இருக்கிறது. மற்றபடி படம் முழுக்க கொலை வாசனைதான் அடிக்கிறது.

Jaane jaan (ஜானே ஜான்– இந்தி) – நெட்பிளிக்ஸ்

கமல் நடித்த பாபநாசம் பாணி படம் இது, ஒரே ஒரு வித்தியாசம்… பாபநாசத்தில் கமல் கொலையை மறைக்க தான் பார்த்த திரைப்படங்களின் காட்சிகளை பயன்படுத்துகிறார். இதில் நாயகன் ஒரு கணக்கு வாத்தியார். கணக்கில் உள்ள ஃபார்முலாக்களை பயன்படுத்தி கொலையை மறைக்கிறார்.

கணவரைப் பிரிந்து தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார் கரீனா கபூர். அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு கணக்கு வாத்தியார் அவரை ஒருதலையாக காதலிக்கிறார். இந்த சூழலில் 14 ஆண்டுகள் கழித்து கரீனாவை தேடி அவரது கணவர் வருகிறார். மகளையும் கரீனாவையும் அவர் கொடுமைப்படுத்துகிறார். அப்போது ஏற்படும் ஒரு கைகலப்பில் மகளுடன் சேர்ந்து கரீனா கபூர் தன் கணவரை கொல்கிறார். இந்த கொலையை மறைக்க கணக்கு வாத்தியார் உதவுகிறார். அவர்களால் கொலையை மறைக்க முடிந்ததா என்பதுதான் கதை.

ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பாக செல்கிறது இப்படம்.

வாய்ஸ் ஆஃப் சத்யநாதன் (Voice of Sathyanathan – மலையாளம்) – மனோரமா மேக்ஸ்

திலிப் நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பின் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய வாய்ஸ் ஆஃப் சத்யநாதன் இப்போது மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

தன் வாயால் வம்பை விலைகொடுத்து வாங்கும் வழக்கம் உள்ளவர் திலிப். அந்த வகையில் அவர் செய்த ஒரு செயல், இந்திய ஜனாதிபதிக்கு எதிராக அவர் சதி செய்கிராரோ என்ற சந்தேகத்தை போலீஸாருக்கு ஏற்படுத்துகிறது. இதனால் அவரது ஊருக்குள் ஜனாதிபதி வரும்போது அவரை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சிறையில் அடைக்கிறார்கள். அங்கு மரணதண்டனை கைதியான ஜோஜு ஜார்ஜை திலிப் சந்திக்கிறார். செய்யாத கொலை வழக்குகளுக்காக மரண தண்டனையை எதிர்கொள்ளும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். இதை அவர் நிறைவேற்றினாரா என்பதுதான் கதை.

சீரியஸான கதையாக இருந்தாலும், இதை சிரிக்கச் சிரிக்க சொல்லி இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...