No menu items!

விஜய் – அஜித் மீண்டும் மோதல்!

விஜய் – அஜித் மீண்டும் மோதல்!

அஜித் அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ‘விடாமுயற்சி’யின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.

மே மாதம் 29-ம் தேதி ஷூட்டிங் தொடங்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் அமலாக்கத்துறையானது, அஜித்தின் படத்தை தயாரிக்க இருக்கும் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் அலுவலகங்கள், அந்நிறுவன நிர்வாகிகளின் இல்லங்களில் சோதனையை மேற்கொண்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் போது பல முக்கிய் ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறுகிறார்கள். இதனால் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங் திட்டமிட்ட நாளில் தொடங்குமா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

தங்கள் நிறுவனம் மீது எந்தவித தவறும் இல்லை. சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுப்படவும் இல்லை என்பதை உணர்த்துவதற்காக லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கை விரைவிலேயே தொடங்கும் என்றும் கோலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது.

மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் ஆரம்பிக்கும்பட்சத்தில், அடுத்த வருடம் பொங்கல் அல்லது கோடை விடுமுறையைக் குறிவைத்து அஜித்தின் படம் வெளியாகும் என்கிறார்கள்.

இந்நிலையில் விஜயும் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்புக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

’லியோ’ படத்திற்கு பிறகு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விஜயின் மக்கள் மன்றம் களமிறங்க இருப்பதால், அவர் சினிமாவுக்கு ஒரு தற்காலிக ப்ரேக் எடுக்கப் போகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டது.

ஆனால் இப்பொழுது ஏஜிஎஸ் நிறுவனம், வெங்கட் பிரபு இயக்கத்தில் தங்களது அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. விஜய் – வெங்கட்பிரபு – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் விஜய்68 படம் உறுதியாகிவிட்டது.

’லியோ’ பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு விஜய், லண்டனுக்கு செல்லவிருக்கிறார். அவரது லண்டன் டூர் முடிந்த பிறகே விஜய்68 ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.

வெங்கட்பிரபு திரைக்கதையை முடிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். இதனால் இப்படத்தின் ஷூட்டிங் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விஜய்68 படமும் அடுத்தப் பொங்கல் அல்லது கோடைவிடுமுறைக்கு வெளியாகலாம் என தெரிகிறது. இத்தகைய சூழலால் விஜயின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ நேரடியாக மோதியது போல், ‘விஜய்68’ மற்றும் ‘விடாமுயற்சி’ இரண்டும் நேரடியாக மோதும் வகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அழ வைக்கும் நயன்தாரா. கோபத்தில் பெற்றோர்கள்.

நயன்தாரா வாடகைத்தாய் மூலம் உயிர் – உலக் என்ற இரட்டையர்களுக்கு தாயாகி இருக்கிறார். ஷாரூக்கானுடன் நடித்துவரும் ‘ஜவான்’ ஷூட்டிங்கில் ப்ரேக் விட்டால் சென்னைக்கு வந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

நடிப்பில் வெளுத்து வாங்கும் நயன்தாரா, பாசத்திலும் வெளுத்து வாங்குவார். ஒருத்தரைப் பிடித்துவிட்டால் அவர்கள் மீது அளவுக்கடந்த அன்பையும், வெறுத்துவிட்டால் எல்லையில்லா கோபத்தையும் காட்டுவது நயன்தாராவின் வழக்கம்.

அதேபோல் நயன்தாராவுக்கு குழந்தைகள் என்றால் அலாதிப்ரியம். குழந்தைகளைக் கொஞ்சுவதிலு நயன்தாரா கஞ்சம் காட்டுவதில்லை.

இதுதான் இப்போது பிரச்சினையாகி இருக்கிறது.

குழந்தைகளைப் பார்த்துவிட்டால், அவர்களது கன்னங்களைப் பிடித்து கொஞ்ச ஆரம்பித்துவிடுகிறார். கொஞ்சும் போது குழந்தைகள் அழுதாலும் கூட அவர் விடுவதில்லையாம். ‘தங்கம்’, ’ஸ்வீட்’. ’க்யூட்டி’ என கொஞ்சுவதை நிறுத்துவதில்லை.

குழந்தைகளைக் கொஞ்சுவது தவறில்லைதான். ஆனால் குழந்தைகள் அழும் போது அதன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் பதட்டமாகி விடுவதைதான் நயன் கண்டுக்கொள்வதே இல்லை என்கிறார்கள்.


30 கோடி நஷ்டமானாலும் வாயை மூடமாட்டேன்!

அதிரடியாக பேசுவதிலும், மனதில் பட்டதை பட்டென்று சொல்வதிலும் கங்கனா ரனவத்துக்கு இணை வேறெந்த நடிகையும் இங்கில்லை.

பாலிவுட் நடிகையாக கங்கனா, ஜெயம் ரவியுடன் ‘தாம்தூம்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்போது ‘சந்திரமுகி 2’-ல் நடித்து வருகிறார்.

’அரசியல், அரசியல்வாதிகள், தேசவிரோத செயல்கள் பற்றி அடிக்கடி கருத்துகளைச் சொல்வதால்ன் கடந்த சில வருடங்களில் மட்டும் 25 ப்ராண்ட்களின் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.
இந்த ப்ராண்ட் விளம்பரங்களில் நடித்திருந்தால் வருடத்திற்கு 30 முதல் 40 கோடிவரை சம்பாதித்து இருக்கமுடியும்.’’ என்கிறார் கங்கனா ரனவத்.

’எனக்கு மடியில் கனமில்லை. அதனால் பயமில்லை. தப்பு நடந்தால் அதைப் பார்த்துவிட்டு வாயை முடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. மனதில் பட்டதை வெளிப்படையாக நான் கூறிவருவதால், பிரபலமான ப்ராண்ட்கள் அவர்களது விளம்பரங்களில் நடிக்க இருந்த என்னை ஒரே ராத்திரியில் என்னை கழற்றிவிட்டுவிட்டன. இதனால் எனக்கு வருடத்திற்கு 30 கோடி வருமானம் வராமல் நஷ்டமாகி இருக்கிறது. எத்தனை கோடி போனாலும் நான் வாயை மூடிக்கொண்டு இருக்கமாட்டேன்.’ என்று கூறி அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறார் கங்கனா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...