கோவிட் பாதிப்பிற்கு பிறகு திரைப்பட ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த படம் விஜயும், லோகேஷ் கனகராஜூம் இணைந்த ‘மாஸ்டர்’.
அடுத்து லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய ’விக்ரம்’ எதிர்பார்த்திராத ப்ளாக் பஸ்டராக கமல் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.
இதனால் விஜயும், லோகேஷ் கனகராஜூம் மீண்டும் இணையும் ‘லியோ’ படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்பு.
படம் பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே ஒடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமைகள் என இப்படத்தின் வியாபாரம் நூறு கோடிகளுக்கும் மேல் சூடுப்பிடித்திருக்கிறது.
வழக்கம் போல் லோகேஷ் கனகராஜ் இப்படத்திலும் கேங்க்ஸ்டர் கதையைதான் எடுக்க இருக்கிறார் என்று பேச்சு அடிப்பட்டது. லோகேஷூக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, அவர்கள் சொன்ன கதை வேறுமாதிரியான ரகமாக இருக்கிறது.
லியோ படத்தின் கதை இதுதான்.
’ஸ்பிளிட் பர்ஸனாலிட்டி’.தான் லியோவின் கான்செப்ட். ’அந்நியன்’ படத்தில் விக்ரம், அம்பி, ரெமோ என இரு வேறு கதாபாத்திரங்களில் விக்ரம் மிரட்டியிருப்பார். அதேபோன்ற ஸ்பிளிட் பர்சனாலிட்டி பாதிப்பு உள்ளவராக விஜய் நடிக்கிறார்.
அந்நியன் படத்தில் வருவதைப் போலவே, லியோவில். விஜய்க்கும் இரண்டு கேரக்டர்கள். சாக்லேட் ஃபேக்டரியில் அமைதியாக இருக்கும் ஸ்வீட் விஜய் ஒரு கேரக்டர். கொஞ்சம் உரசினால் பட்டென பற்றிக்கொள்ளும் ப்ளடி டேஞ்சர் விஜய் இன்னொரு கேரக்டர்.
இந்த இரு கதாபாத்திரங்களையும் ஒரு குறியீடாக காட்டும் வகையில் ’ப்ளடி ஸ்வீட்’ என்று டீசரில் காட்டியிருக்கிறார்கள்
சஞ்சய்தத், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான் என லியோவில் ஒரு பெரிய வில்லன்கள் டீமே இருந்தாலும் விஜய்க்கு வில்லன் யார் என்பதுதான் லியோ படத்தின் ஹைலைட். கதையில் விஜய்க்கு வில்லன் விஜய்தானாம்.