No menu items!

பொன்னியின் செல்வன் 2 – யார் இந்த சாரா அர்ஜூன்?

பொன்னியின் செல்வன் 2 – யார் இந்த சாரா அர்ஜூன்?

’பொன்னியின் செல்வன் -2’ படம் பார்த்தவர்களில் குறைந்தபட்சம் 90% கேட்ட கேள்வி ‘யார் இந்தப் பொண்ணு?’

இப்படியொரு கேள்வியைக் கேட்க தூண்டியவர் சிறுவயது நந்தினியாக, அதாவது சிறு வயது ஐஸ்வர்யா ராய் ஆக நடித்த சாரா அர்ஜூன்.

இணையத்தில் கூட கடந்த சில நாட்களில் அதிகம் தேடப்பட்டு வரும் திடீர் பிரபலமாகி இருக்கிறார் இந்த சாரா அர்ஜூன்.

பாலிவுட் நடிகரான ராஜ் அர்ஜூனின் மகள்தான் இவர். இப்படி சொன்னால் பலருக்கு புரியாமல் கூட போகலாம். அதனால் 2011-ல் வெளியான ‘தெய்வத்திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக நடித்த அதே சுட்டிப் பெண் இந்த சாரா அர்ஜுன்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளப் படங்களில் நடித்திருக்கும் சாரா அர்ஜூன், சமீபத்தில் ‘நிலாவில் இருந்து நந்தினிக்கு’ [From Nila to Nandhini..] என்று ஸ்டேட்டஸ் ஒன்றை விக்ரமை டேக் செய்து தட்டிவிட்டார்.

இதற்கு ‘Rock on lil Brat!! So proud of you’ என்று விக்ரமும் பதில் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

சுட்டிப் பெண், குட்டிப் பெண்ணாக திரையில் தோன்றியிருக்கிறாரே அடுத்து ஹீரோயின்தானா என்று நாம் யோசிப்பதற்குள், அதற்கான அஸ்திவாரத்தை அசால்ட்டாக போட்டு வைத்திருக்கிறார் சாரா அர்ஜூன்.

’கொட்டேஷன் கேங்க்’ [‘Quotation Gang’] படத்தில் ஜாக்கி ஷெராஃப், சன்னிலியோனி, ப்ரியாமணியுடன் சாரா அர்ஜூனும் நடிக்கிறார். ஆனால் ’பொன்னியின் செல்வன் -2’ படத்தில் வருவதுபோல் அல்ல. பந்தாவா சிகரெட் புகைத்தப்படி, ஆக்‌ஷனில் அதிர வைத்திருக்கிறார்.

இந்த ட்ரெய்லரை பார்த்த நம்மூர் படைப்பாளிகள் இப்பொழுதே சாரா அர்ஜூன் கால்ஷீட்டுக்காக கிளம்பியிருப்பார்கள்.


கர்ப்பமான வயிற்றைக் காட்டிய இலியானா!

“Coming soon. Can’t wait to meet you my little darling.” இப்படியொரு கமெண்ட்டை சமூக ஊடகமொன்றில் போட்டு, பரபரக்கும் தொலைக்காட்சிகளின் விவாத மேடை போல், ரசிகர்களை ரொம்பவே விவாதிக்க வைத்துவிட்டார் இலியானா.

இலியானாவுக்கு எப்பொது கல்யாணம் ஆனது? இந்த குழந்தைக்கு அப்பா யார்? இந்த இரண்டு கேள்விகளை ரசிகர்கள் பலமுறை கேட்டும், இலியானா எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை.

இதற்கு பிறகு கொஞ்ச நாட்களில் இந்த விஷயம் ஒரு வழியாக செட்டிலான சமயத்தில் இப்போது இன்னும் இரண்டு புகைப்படங்களைத் தட்டிவிட்டிருக்கிறார் இலியானா.

ஒரு கட்டிலில் அமர்ந்து கொண்டு, கையில் ஒரு காபி கோப்பையைப் பிடித்தபடியே, கர்ப்பமான வயிற்றைக் காட்டும் புகைப்படமொன்றை வெளியிட்டு இருக்கிறார். ஒரு அதேபோல் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் படமொன்றை போட்ட இலியானா, எனது தங்கை செய்த கேக். கர்ப்ப காலத்தில் சாப்பிட ஆசையா இருந்துச்சு’ என்றும் மற்றுமொரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

காத்ரீனா கைஃப்பின் தம்பி செபாஸ்டின் லாரெண்ட் மைக்கேலும், இலியானாவும் நெருக்கமான உறவில் இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியானாலும் இந்த இருவரும் இதை மறுக்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை.

ஆனால் கடந்த வருடம் டிசம்பர் மாதம், இலியானா ஒரு ஐவிஎஃப் மருத்துவமனைக்கு சென்று வந்ததை பேப்பராசிகள் கண்டுபிடித்துவிட்டனர். ஆனாலும் இதுவரை குழந்தையின் அப்பா யார், கர்ப்பம் தரித்தது எப்படி, இயற்கையாகவா அல்லது செயற்கை முறையிலா என்பது குறித்தும் இலியானா ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...