No menu items!

இஸ்ரேலுக்கு யூனிஃபார்ம் நோ! – கேரள நிறுவனம் அதிரடி!

இஸ்ரேலுக்கு யூனிஃபார்ம் நோ! – கேரள நிறுவனம் அதிரடி!

காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிவதற்கு எதிராக நம் நாட்டின் கேரள மாநிலம் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல் ஒரு பெரிய சக்தியாயிற்றே… அதற்கு எதிராக இந்தியாவே ஒன்றும் செய்யாதபோது, கேரளா எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறீர்களா…? படியுங்கள்…

கடந்த 2015-ம் ஆண்டுமுதல் இஸ்ரேலில் உள்ள போலீஸாருக்கு கேரள மாநிலத்தில் இருந்துதான் சீருடைகள் போகின்றன. இம்மாநிலத்தில் உள்ள கன்ணூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மறயன் ஆப்பரல் பிரைவெட் லிமிட்ட் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 1,500 ஊழியர்கள் இந்த போலீஸாருக்கான சீருடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நீல நிறத்தில் பேண்ட், இள நீல வண்ணத்தில் 2 புறமும் பேக்கட்கள் மற்றும் இஸ்ரேல் காவல்துறையின் லச்சினைகளைக் கொண்ட முழுக்கை சட்டைகள் இந்த போலீஸாருக்கு சீருடையாக தைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனத்தின் உரிமையாளரான தாமஸ் ஒலிக்கல் இதைப்பற்றி சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறும்போது, “கடந்த 2015-ம் ஆண்டுமுதல் இஸ்ரேல் காவல்துறை எங்களிடம் இருந்துதான் சீருடைகளை கொள்முதல் செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் அவர்களுக்கு எத்தனை சீருடைகள் தேவைப்படும் என்ற விவரத்தையும், அந்த சீருடைகளுக்கான அளவுகளையும் எங்களுக்கு அனுப்புவார்கல். அதை வைத்து நாங்கள் சீருடைகளை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பிவைப்போம். இந்த ஆண்டுகூட ஹமாசுக்கு எதிரான போரைத் தொடங்கிய பிறகு, சில புதிய ஆடைகளுக்கான ஆர்டரை எங்களுக்கு தந்திருக்கிறார்கள். உலகின் முன்னணி காவல்துறைகளில் ஒன்றான இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடைகளை தைத்துக் கொடுப்பதை பெருமையாக கருதுகிறோம். இஸ்ரேல் மட்டுமின்றி உலகின் பல்வேரு நாடுகளுக்கும் நாங்கள் உடைகளை தயாரித்து வழங்கி வருகிறோம். ஒரு சில நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கான பள்ளிச் சீருடைகளைகூட நாங்கள் தயாரித்து வழங்கி வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பான செய்தி கேரளாவில் உள்ள பத்திரிகைகளில் வெளியானதும், அங்குள்ள ஒரு பிரிவு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். மனித உரிமைகளுக்கு எதிராக காசாவில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நட்த்திவரும் இஸ்ரேலுக்கு கேரளாவில் இருந்து போலீஸாருக்கான உடைகளை தைத்து அனுப்புவதா என்று சில இடங்களில் போராட்டங்கள்கூட நடந்தன. கேரள அரசியல்வாதிகள்கூட இதற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு இருந்தன.

இந்த சூழலில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி திரும்பும் வரை இஸ்ரேல் போலீஸாருக்கு சீருடைகளை தைத்து அனுப்புவதில்லை என்று மறயன் ஆப்பரல் பிரைவெட் லிமிடட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதைப்பற்றி கேரள தொழில்துறை அமைச்சர் ராஜீவுக்கும் செய்தி அனுப்பியுள்ளது.

இதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கேரள தொழில்துறை அமைச்சர் ராஜீவ், “அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவம் மற்றும் போலீஸாருக்கு எதிரான கருத்து மக்களிடையே நிலவுவதால், இனியும் இஸ்ரேலிய போலீஸாருக்கு சீருடைகளை அனுப்புவதில்லை என்று மறயன் ஆப்பரல் பிரைவெட் லிமிட்ட் நிறுவனத்தின் உரிமையாளர் என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். காசா பகுதியில் அமைதி நிலவும்வரை இந்த நிலை தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சொந்த லாபத்தைவிட அப்பாவி மக்களின் உயிர்தான் முக்கியம் என்று அதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்ட மறயன் ஆப்பரல் பிரைவெட் லிமிட்ட் நிறுவனத்தை பாராட்டுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...