No menu items!

உயிரைக் குடிக்கும் Shawarma: என்ன பிரச்சினை?

உயிரைக் குடிக்கும் Shawarma: என்ன பிரச்சினை?

பிரியாணி, பீட்சாவைக் கடந்து தமிழக மக்கள் மத்தியில் மிக வேகமாக புகழ்பெற்ற உணவு ஷவர்மா. பிஸியான நகரப்பகுதிகளில் ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு ஷவர்மா கடையைப் பார்க்க முடிகிறது. மக்கள் மத்தியில் எத்தனை வேகத்தில் புகழ்பெற்றதோ, அத்தனை வேகத்தில் உடலுக்கு தீங்கையும் ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் கடந்த ஆண்டில் ஒரு உயிரை பலிவாங்கிய ஷவர்மா, 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் ஒரு உயிரை பலிவாங்கி இருக்கிறது.

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்தவர் தவக்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 16-ம் தேதி இரவு பரமத்தி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலுக்கு உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டதுடன் ஷவர்மா உள்ளிட்ட சில உணவுகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். அந்த உணவை அனைவரும் சாப்பிட்ட நிலையில் அவரது மகள் கலையரசியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் நாமக்கல்லிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 17-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

கலையரசியுடன் சேர்த்து ஷவர்மா சாப்பிட்ட அவரது தாய், மாமா, அத்தை அனைவரும் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க, அதே ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்ட சுமார் 43 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, அந்த ஹோட்டலுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் உமா, அங்கு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அது என்ன ஷவர்மா? தடை விதிக்கப்படும் அளவுக்கு அது மோசமான உணவா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்…

ஒரு நீண்ட கம்பியில் கூம்பு வடிவில் பதப்படுத்தப்பட்ட சிக்கன் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பின்புறம் நெருப்பு. அந்த சூட்டில் சிக்கன் வேக, கேட்பவர்களுக்கு அங்கிருந்து சிக்கன் சுரண்டி எடுத்து அதனுடன் கொஞ்சம் மையோனைஸ், கொஞ்சம் கோஸ், கொஞ்சம் தக்காளி என கலந்து கொத்தி சப்பாத்தி போன்ற குபூஸில் வைத்து சுருட்டித் தருகிறார்கள். வாய்க்குள் ருசியாக போகிறது. இதையே 2 குபூஸ்களின் நடுவில் சிக்கன் கலவையை நிரவித் தருவதை பிளேட் ஷவர்மா என்கிறார்கள்.

ஷவர்மாவின் துவக்கம் துருக்கி அங்கிருந்து பெய்ரூட், மெக்சிகோ என்று பரவி இப்போது தமிழ்நாட்டு வீதிகளில் மூலைக்கு மூலை இருக்கிறது.

“ஷவர்மாவுக்கு பயன்படுத்தப்படும் சிக்கனை ஒரு சில கடைகளில் நன்றாக வேகவைப்பதில்லை. அது மட்டுமில்லாமல் சில கடைகளில் முதல் நாள் விற்பனையாகாத சிக்கன் கறியை அப்படியே ஃப்ரீசரில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவை ஜீரணமாவதில் பிரச்சினைகள் ஏற்படும்” என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஷவர்மாவை தொடர்ந்து சாப்பிடும் இளம் பருவத்தினரின் எடை கூடுவது போன்ற பிரச்சினைகளும் இதனால் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே ஷவர்மா சாப்பிடுவதாக இருந்தால், அது நிறைய விற்பனையாகும் கடைகளில் சாப்பிடுங்கள். அவர்களிடம் பழையது இருக்காது.

சுத்தமான கடைகளில் சாப்பிடுங்கள். அங்கே சுகாதார சிக்கல் இருக்காது

குறைவாக சாப்பிடுங்கள். உங்கள் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...