No menu items!

திருமணத்துக்கு தயங்கும் ஜப்பானியர்கள்

திருமணத்துக்கு தயங்கும் ஜப்பானியர்கள்

ஜப்பானியர்களின் மிகப்பெரிய பிரச்சினையாக திருமணம் உருவெடுத்து வருகிறது. அந்நாட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 17.3 சதவீதத்தினரும், பெண்களில் 14.6 சதவீதத்தினரும் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லாதவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

திருமணம் செய்வதில் இளசுகள் காட்டும் தயக்கத்தால் அந்நாட்டின் மக்கள்தொகையும் வேகமாக குறைந்து வருகிறதாம். கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-ம் ஆண்டில் அந்நாட்டின் மக்கள்தொகை 3.5 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஓராண்டில் மட்டும் ஜப்பானின் மக்கள்தொகையில் 6.44 லட்சம் குறைந்துள்ளது.

திருமணம் செய்துகொண்டால் தங்களின் சுதந்திரம் பறிபோய்விடும் என்று இளம் தலைமுறையினர் கருதுவதே அங்கு திருமணங்கள் குறைந்துபோனதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மக்களுக்கு திருமணத்தில் ஆர்வத்தை உருவாக்க என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது ஜப்பானிய அரசு.

63 வயதில் 53 திருமணங்கள்!

ஒரு திருமணம் செய்வதற்கே ஜப்பானியர்கள் யோசிக்கும் நேரத்தில் இதுவரை 53 திருமணங்களை செய்து வினோதமான சாதனையை(!) படைத்துள்ளார் சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபு அப்துல்லா. தனது 63-வது வயதில் சமீபத்தில் 53-வது பெண்ணை இவர் திருமணம் செய்திருப்பதுதான் சவுதி அரேபியாவில் இப்போது பரபரப்பான செய்தி.

“என் முதல் திருமணத்துக்கு பிறகு மனைவியுடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அதனால் அவரது சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். ஆனால் அதன் பிறகு அந்த 2 மனைவிகளுக்கும் இடையே வீட்டில் அடிக்கடி சண்டைகள் நடந்ததால், அவர்கள் இருவரையும் விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவதாக ஒரு திருமணம் செய்துகொண்டேன்.

ஆனால் அந்த திருமணமும், அதன்பிறகு நான் செய்த மற்ற சில திருமணங்களும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் அப்போதைய துணைகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள புதிய திருமணங்களை செய்துகொண்டேன். என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் மனைவியை நான் தேடிக்கொண்டே இருக்கிறேன். அப்படிப்பட்டவர் கிடைக்காததால் என் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

நான் சில சமயம் வெளிநாடுகளில் 4 அல்லது 5 மாதங்கள் தங்க வேண்டியிருக்கும். அப்போது தனிமையைப் போக்கிக்கொள்வதற்காகவும் சில திருமணங்களை செய்துள்ளேன்” என்று தனது திருமணங்களுக்கு காரணம் கூறுகிறார் அபு அப்துல்லா. தனது திருமணங்களில் ஒன்று ஒரே இரவில் முறிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது திருமணங்கள் தொடர்பாக அவர் கொடுத்துள்ள வீடியோ பேட்டி தற்போது சவுதி அரேபியாவில் வைரலாகி இருக்கிறது. லட்சக்கணக்கானோர் இந்த வீடியோக்களை பார்த்துள்ளனர். அதேநேரத்தில் இந்த வீடியோக்களை பார்த்த அனைவரும், அவருக்கு எதிரான விமர்சனங்களையும் பதிவிட்டுள்ளனர்.

மிதக்கும் அப்பார்ட்மெண்ட்

தரையில் வாழ்ந்து போரடித்துவிட்ட மக்களுக்காக ஒரு புதிய விஷயத்தைச் செய்திருக்கிறார்கள் ஸ்டோரிலைன்ஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தினர். இந்த நிறுவனத்தினர் புதிதாக MV Narrative என்ற பெயரில் ஒரு கப்பலைக் கட்டி வருகிறார்கள்.

பொதுவாக கப்பலைக் கட்டுபவர்கள் அதை பயணிகள் கப்பலாகவோ அல்லது சுற்றுலா கப்பலாகவோ மாற்றுவார்கள். ஆனால் இந்தக் கப்பல் அப்படியில்லை. மாறாக ஒரு மிதக்கும் அப்பார்ட்மெண்டாக இந்த கப்பல் இருக்கப்போகிறது. இந்த கப்பலில் உள்ள ஸ்டுடியோ பிளாட்கள் 237 சதுரடியில் அமைக்கப்படுகின்றன.

இதில் ஒரு அபார்ட்மெண்டின் விலை 10 லட்சம் டாலர்கள். இந்த குட்டி அபார்ட்மெண்ட்களைத் தவிர 1,970 சதுரடி பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட பிளாட்களும் இந்த கப்பலில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிளாட்களின் விலை 80 லட்சம் அமெரிக்க டாலர்கள்.

ஆக இனி பணம் இருந்தால் தண்ணீரில் மிதக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...