கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பிரபாஸ் உடபட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கல்கி 2898 AD என்ற பிரமாண்ட திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார். படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அந்தப் படம் குறித்து கவனத்தை ஈர்த்திருப்பது இவர்களில் படத்தில் வரும் ஹைடெக் ரோபோகார் புஜ்ஜி தான். அதன் பிரமிக்க வைக்கும் டிசைன் அனைவரையும் கவர்ந்துள்ளது. சென்னையில் இந்த காரை அறிமுகம் செய்தபோது கார் பந்தய வீரர் நரேன் சாலையில் ஓட்டிக் காண்பித்தார்.. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு திரைப்படத்திற்காக இந்த கார் மஹிந்திரா கம்பெனியால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் படக்குழுவினர் முதன் முதலாக இப்படி ஒரு முயற்சியில் இறங்கியிருப்பதாக பெருமிதம் பொங்க கூறி வருகிறார்கள். இதற்கு முன்பும் இப்படி ஒரு காரையும் வாகனத்தையும் தயார் செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த சாதனையை ஏவி.எம். நிறுவனம் செய்திருக்கிறது. 1988ம் ஆண்டி வெளியான பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் ஒரு காரை இதே போல வடிவமைத்து படத்தில் நடிக்க வைத்தனர். ராஜசேகர் இயக்கிய இந்த படம் நகைச்சுவை கதையாக இருந்ததால் காரும் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.
ஏவி,எம். நிறுவனத்தின் இந்த புதுமையான யோசனையை ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் பார்த்து அந்த யோசனையைத்தான் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தனர். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்படும் கார்களில் இதுவரைக்கும் உலகத்தில் வெளிவராத தற்போது தயார் நிலையில் இருக்கும் தொழில் நுட்படங்களை முதலில் தங்கள் திரைப்படத்தில்தான் பயனப்டுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு படத்தில் பயன்படுத்தினார்கள். அப்படித்தான் பஞ்சரானாலும் தானாக சரி செய்து கொள்ளும் கார், துப்பாக்கி சுடும் கார். தண்ணீர் மேல் பறக்கும் ஜெட் என்று வித்தியாசமான இயந்திரங்களை படத்தில் பயன்ப்டுத்தினார்கள். இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு ஜேம்ஸ் பாண்ட் என்ற பாத்திரத்திற்கு தங்கள் மனதில் தனி இடம் கொடுத்து ரசித்தனர். மொழி பேதம் இல்லாமல் ரசித்து மகிழ்ந்தனர்.
இந்த யோசனையைத்தான் 1986ம் ஆண்டில் வெளியான கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்திலும் செய்தார்கள் ஒரு ஏவுகனையை கடத்தும் காட்சிக்காக ஏவுகனை போ்ன்று ஒரு செட் போடப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது பொம்மையாகத்தான் இருந்தது. இந்த படத்திற்கும் இயக்குனர் ராஜசேகர்தான். பின்னாளில் அவரே பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படத்தில் வித்தியாசமான காரை பயன்படுத்தினார்.
இந்த நிலையில் ஏவி.எம். நிறுவனம் தற்போது படப்பிடிப்பு தளங்களை மூடி விட்ட போதிலும் இதுவரைக்கும் தங்கள் படங்களில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து அதை வைத்து அருங்காட்சியகமாக வைக்க திட்டமிட்டு, அதையும் செய்து முடித்தனர். ஏவி.எம். வளாகத்தில் அந்த பிரமாண்டமான அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. இதில் கருப்பு வெள்ளை காலத்தில் தொடங்கி இப்போது வரைக்கும் சினிமாவில் பயன்படுத்திய பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். அதில பாயும்புலி படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய வித்தியாசமான பைக், சிவாஜி படத்தில் ஸ்ரேயா அமர்ந்து வந்த பல்லக்கு என்று இரண்டு அரங்க முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. இது பார்க்கவே வியப்பாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்க வந்த ரஜினிகாந்த் தான் 1983ம் ஆண்டில் பாயும் புலி திரைப்படத்தில் ஓட்டிய பைக்கை மெல்ல ஓட்டிப் பார்த்து சிலிரித்துப் போனார். இதில் முக்கியமான விஷயம். இந்த கண்காட்சியில் இருக்கும் வாகனங்கள் அனைத்தும் நல்ல நிலையில் தற்போதும் ஓடக்கூடிய அளவுக்கு தயார் செய்துதான் வைத்திருக்கிறார்கள். ரஜினி ஓட்டிய பைக்கை சிலர் பார்த்து விட்டு அதே மாடலில் புதிதாக வண்டியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி விட்டனர். ஆனால் ஏவி.எம். நிறுவனம் தாங்கள் பயன்படுத்தியது போன்ற பொரு:ளை யாரும் உருவாக்கக்கூடாது என்று முடிவு செய்து தற்போது வீடியோ எடுக்க அனுமதிப்பதில்லை.