No menu items!

ஐபிஎல் வரலாறு – இவைதான் டாப் டென்!

ஐபிஎல் வரலாறு – இவைதான் டாப் டென்!

1995-ம் ஆண்டில் 50 ஓவர் போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அப்போது அது நிராகரிக்கப்பட்டது.

2007-ம் ஆண்டில் ஜீ தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஐசிஎல் கிரிக்கெட் தொடருக்கு மாற்றாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து  இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அப்போதைய துணைத் தலைவரான லலித் மோடி ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உருவம் கொடுத்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இம்பாக்ட் பிளேயர் என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி டாஸின்போது அறிவிக்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியல் உடன் நான்கு சப்ஸ்டிட்டியூட் வீரர்களின் பெயரையும் ஐபிஎல் அணிகள் அறிவிக்க வேண்டும். அந்த நால்வரில் யாரேனும் ஒருவரை அணிகள் டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் வீரராக தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு இன்னிங்ஸின் 14-வது ஓவர் முடிவுக்குள் அந்த வீரரை களம் இறக்கலாம்.  இதன் மூலம் அணிகள் கூடுதலாக ஒரு பவுலர் அல்லது பேட்ஸ்மேனை பயன்படுத்திக் கொள்ள முடியும். விடுவிக்கப்பட்ட வீரர் மீண்டும் களம் காண முடியாது.

கிரிக்கெட் போட்டிகளில் பொதுவாக டாஸ் போடுவதற்கு முன்பே அதில் ஆடும் வீரர்களின் பட்டியலை கேப்டன் வழங்கவேண்டும். ஆனால் இந்த ஐபிஎல்லில் அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. டாஸ் போட்ட பிறகு கேப்டன்கள் அணியை அறிவிக்கலாம். இதனால் தாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோமா அல்லது பீல்டிங் செய்யப்போகிறோமோ என்பதை அறிந்து அதற்கு ஏற்ப கேப்டன்கள் அணியை தேர்ந்த்தெடுத்துக்கொள்ளலாம். இதனால் போட்டிகளில் டாஸின் முக்கியத்துவம் குறைகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பந்தை வீசியவர் பிரவீன் குமார். அந்த பந்தை எதிர்கொண்டு ஆடிய பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி.

ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு நீண்ட நாள் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமை தோனிக்கு உள்ளது. ஐபிஎல் தொடங்கிய காலம் முதல் 2021-ம் ஆண்டுவரை சிஎஸ்கே அணிக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். 2022-ம் ஆண்டில் அவர் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவியை அளித்தபோதிலும், சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளால் அவர் மாற்றப்பட்டு மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணி, அதிகபட்சமாக 5  முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி மிக அதிகபட்சமாக 14 முறை தங்களின் கேப்டனை மாற்றியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமை கிறிஸ் கெயிலுக்கு உள்ளது. அவர் 139 இன்னிங்ஸ்களில் 357 சிக்சர்களை அடித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிகமான விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை இங்கிலாந்தின் சாம் கரணுக்கு உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியுள்ளது.

அதிக மெய்டன் ஓவர்களை வீசிய வீரர் பிரவீன் குமார். இவர் மொத்தம் 14 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.

ஹர்பஜன் சிங், பார்த்தீவ் படேல் ஆகியோர் ஐபிஎல் தொடரில் அதிக முறை (13) டக் அவுட் ஆகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...