No menu items!

ஐபிஎல் ஏலம்! – சிஎஸ்கே வாங்க விரும்பும் வீர்ர்கள்

ஐபிஎல் ஏலம்! – சிஎஸ்கே வாங்க விரும்பும் வீர்ர்கள்

அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிக்கான வீர்ர்களை வாங்குவதற்கான ஏலம் 19-ம் தேதி நடக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல்லில் ஆடிய வீர்ர்களில் பென் ஸ்டோக்ஸ், அம்பட்டி ராயுடு போன்ற வீர்ர்கள் விலகிய நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். விலகிய வீர்ர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே நிர்வாகத்தால் பிரிட்டோரியஸ், ஜெமிசன், சேனாபதி உள்ளிட்ட சில வீர்ர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். இந்த சூழலில் 31.4 கோடி ரூபாயுடன் இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரையெல்லாம் குறிவைத்து வாங்கும் என்ற விவாதங்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே நடைபெற்று வருகின்றன. இதில் சிஎஸ்கே நிர்வாகிகளின் மனநிலை என்ன என்பதுபற்றி அணித்தரப்பில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் சிஎஸ்கே வாங்க முயற்சி செய்யும் சில வீர்ர்கள்…

ரச்சின் ரவீந்திரா (அடிப்படை விலை ரூ.50 லட்சம்):

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் நியூஸிலாந்து வீர்ரான ரச்சின் ரவீந்திரா. இந்த தொடரில் 578 ரன்களைக் குவித்த ரச்சின் ரவீந்திரா, 5 விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதால் உள்ளூர் ரசிகர்களும் அவருக்கு ஏராளமாக உள்ளனர். அதனால் அவரை வாங்குவதில் சிஎஸ்கே நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டுகிறது.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அவரை வாங்குவது பந்துவீச்சை வலுப்படுத்தும் என்று தோனி நம்புவதாக கூறப்படுகிறது. அவரைப் போலவே அணியின் பயிற்சியாளரான பிளம்மிங்கும் தனது ஊரான நியூஸிலாந்தைச் சேர்ந்த சிறந்த வீர்ர் சிஎஸ்கே அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணியின் முக்கிய டார்கெட்டாக ரச்சின் ரவீந்திரா இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

பாட் கம்மின்ஸ் (அடிப்படை விலை ரூ.2 கோடி):

சிஎஸ்கே அணியின் முக்கிய குறைகளில் ஒன்று சரியான வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது. அந்த குறையை சரிசெய்ய இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸை வாங்க சிஎஸ்கே அணி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

அவரை வாங்கினால் சிஎஸ்கே அணிக்கு 2 நன்மைகள் உள்ளன. முதல் நன்மை அவர் வேகப்பந்து வீச்சாளர் என்பதுடன் பேட்டிங்கில் சிறந்த பினிஷராகவும் இருப்பார் என்பது. இரண்டாவது நன்மை, ஏதாவது கட்டத்தில் தோனி ஆட முடியாமல் போனால், அவருக்கு பதிலாக அணியை தலைமையேற்று நடத்தும் ஆற்றல் பாட் கம்மிஸுக்கு இருக்கிறது. ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை அவரது தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.

கம்மின்ஸை வாங்க முடியாமல் போனால் மேற்கிந்திய பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசில்வுட் ஆக்யோரில் ஒருவரை வாங்க சிஎஸ்கே முயற்சிக்கலாம்.

ஷாரூக் கான் (அடிப்படை விலை ரூ.50 லட்சம்)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது சொல்லப்படும் முக்கிய குற்றச்சாட்டு, அந்த அணியில் ஒரு தமிழக வீர்ர்கூட இல்லை என்பது. அந்த குற்றச்சாட்டை பொய்யாக்க, இந்த முறை ஷாரூக் கானை வாங்குவதில் சிஎஸ்கே நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய ஷாரூக் கான், பெரிய அளவில் எதையும் செய்யாத்தால் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் கடந்த ஐபிஎல் போட்டியை மட்டும் வைத்து அவரை எடை போட்டுவிடக் கூடாது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய அளவிலான டி20 தொடர்களில் பல போட்டிகளில் சிறப்பான பினிஷிங்கை கொடுத்து தமிழக அணியை வெற்றிபெற வைத்தவர் ஷாரூக் கான். அத்துடன் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் அவர் இருக்கிறார். அதனால் அவரை வாங்குவது 2 விஷயங்களில் அணிக்கு கைகொடுக்கும் என்று சிஎஸ்கே நிர்வாகிகளும், தோனியும் யோசிக்கிறார்கள்.

மணிஷ் பாண்டே (அடிப்படை விலை ரூ.50 லட்சம்)

அதிரடி வீர்ர்கள் நிறைந்திருக்கும் சிஎஸ்கே அணியில், மிடில் ஆர்டரில் நிறுத்தி நிதானமாக ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு குறை இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் இந்த பணியை ராயுடு செய்து வந்தார். ஆனால் இந்த ஐபிஎல்லில் ராயுடு இல்லாததால், அவருக்கு மாற்றாக ஒரு இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார்.

இப்போதைய சூழலில் சிஎஸ்கேவின் இந்த தேடலுக்கான விடையாக மணிஷ் பாண்டே இருக்கிறார். ஐபிஎல் தொடர்களில் பல ஆண்டுகள் ஆடி அனுபவம் பெற்ற வீர்ரான மணிஷ் பாண்டே, இந்திய அணிக்காகவும் பல போட்டிகளில் ஆடி இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிகாக ஆடினார். ஆனால் அவரால் கடந்த ஐபிஎல்லில் பெரிதாக சாதிக்க முடியாததால், அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
இப்படி மற்ற அணிகளால் கழற்றி விடப்பட்ட ராயுடு, ரஹானே, உத்தப்பா போன்ற அனுபவம் வாய்ந்த வீர்ர்களை குறைந்த விலைக்கு வாங்கி, அவர்களை நட்சத்திர வீர்ர்களாக்கிய பெருமை சிஎஸ்கேவுக்கு உண்டு. அதே ரூட்டில் சிஎஸ்கே இந்த ஆண்டு பணிஷ் பாண்டேவை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிஷ் பாண்டேவை வாங்காவிட்டால் கருண் நாயரையாவது சிஎஸ்கே வாங்கும் என்று கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...