No menu items!

இலியானாவின் புதிய காதலர்

இலியானாவின் புதிய காதலர்

மெல்லிய இடையில் கிறங்கடிக்கும் இலியானாவை ஞாபகம் இருக்கிறதா?

விஜயுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்தார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு தமிழிலும், தெலுங்கிலும் வாய்ப்புகள் இல்லை, அவர் பெரிதும் நம்பிய பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனால் கட்டாய ஓய்வில் இருந்தவர், தற்போது காதல் வலையில் விழுந்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.

இலியானாவின் இடையழகில் சறுக்கி இருப்பவர், பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டின் லாரென்ட் மைக்கேல் என்கிறார்கள்.

சமீபத்தில் காத்ரீனா கைஃப் தனது 39-வது பிறந்த நாளை தனது கணவரும் பாலிவுட் நடிகருமான விக்கி கெளஷாலுடன் கொண்டாடினார். இந்த விழாவில் காத்ரீனாவின் மச்சான் சன்னி கெளஷல் மற்றும் அவருடைய தோழி ஷர்வாரி வாக், நண்பர்கள் மின் மாதூர் ஆகியோர் மாலத்தீவில் ’மிதந்தபடியே’ கொண்டாடி இருக்கிறார்கள்.

ஆனால் காத்ரீனா கைஃப் வெளிட்ட பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களில் இலியானாவும் உற்சாகமாக சிரித்தபடி இருக்கிறார். இதுதான் அனைவரது கண்களையும் உறுத்தியிருக்கிறது. இதை வைத்து இலியானாவுக்கும், செபாஸ்டினுக்கு ஒரு இது இருக்கிறது என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. இல்லையென்றால் காத்ரீனை கைஃப்பின் பிறந்த நாளுக்கு இலியானா ஏன் மாலத்தீவிற்குப் போகவேண்டும் என்று கேள்வியையும் எழுப்புகிறார்கள்.

செபாஸ்டின், லண்டன்வாசி. ஃபேஷன் உலகின் மாடலாக இருக்கும் இவருக்கும் இலியானாவுக்கும் கடந்த 6 மாதங்களாக நட்பு நிலவுகிறதாம். காத்ரீனாவிற்கு மும்பை பாந்தராவில் இருக்கும் பழைய அபார்ட்மெண்ட்டில் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வதாகவும், இலியான அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.வ்

இலியானா இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ க்னீடோனுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். இவர்களிடையே இருந்த உறவு ஏதோ ஒரு காரணத்தினால் முறிந்து போனது, இதனால் மன அழுத்தத்தில் இருந்த இலியானா அதற்கான தெரபியை மேற்கொண்டார் என்பது பழைய கதை.

2023-ல் காஜல் அகர்வால் ரீ-எண்ட்ரி

திருமணம், குழந்தை என பிஸியாக இருக்கும் காஜல் அகர்வாலை, அவர் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமான ‘இந்தியன் -2’ படத்திலிருந்து தூக்கிவிட்டார்கள். ஆனால் காஜல் அகர்வால் இதற்காக கவலைப்படுவதாக தெரியவில்லை. காரணம் சமீபத்தில் அவருக்கு பிறந்த குழந்தை. எனக்கு திருமண வாழ்க்கை மிகவும் முக்கியம் என்று ஒரே வரியில் வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

இதனால் இதுவரையில் அவர் சார்பாக எந்த புதிய படங்களிலும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் ஒரு வருடம் கழிந்ததும் மீண்டும் நடிக்க வரலாம் என்ற திட்டத்தில் காஜல் அகர்வால் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

மும்பையில் மகனுடன் பொழுதைக் கழித்துவரும் காஜல் அகர்வால் இன்னும் ஆறேழு மாதங்கள் கழித்து கதை கேட்க இருக்கிறாராம். இதனால் 2023-ம் ஆண்டில் காஜல் அகர்வாலை மீண்டும் திரையில் காணலாம் என்கிறது அவரது மேனேஜர் வட்டாரம்.

ராஜமெளலிக்கு வலைவீசும் நெட்ஃப்ளிக்ஸ்

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களின் மூலம் இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ராஜமெளலியை தன் பக்கம் இழுக்க ஒடிடி நிறுவனங்கள் போட்டிப் போட்டுகொண்டு இருக்கின்றன.

இதில் நெட்ஃப்ளிக்ஸ் கொஞ்சம் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. பாகுபலி கதையை வைத்து ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸ் தயாரிக்க நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால் ராஜமெளலி பிடிக்கொடுக்காமலேயே இருந்திருக்கிறார்.

தற்போது ஒடிடி-க்கான வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இந்திய கலாச்சாரத்தை, இங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் ரசனையை மையப்படுத்திய கதைகளில் ஒரிஜினல்களை வெளியிட்டதால்தான் சந்தையில் தங்களது இருப்பை வலுப்படுத்த முடியுமென்பதால் அனைத்து ஒடிடி நிறுவனங்களும் இங்குள்ள முன்னணி இயக்குநர்களை தங்கள் பக்கம் வளைத்துப் போடும் முயற்சிகளில் மும்முரமாக இருக்கின்றன.

ராஜமெளலியை எப்படியாவது இழுத்துவிட வேண்டுமென எல்லா ஒடிடி நிறுவனங்களும் தூதுவிட, அவரோ அடுத்து வழக்கம் போல் அப்பா விஜயேந்திர பிரசாத்தின் கதையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் பட வேலைகளில் மூழ்கிவிட்டார். இதையும் பான் – இந்தியா படமாக எடுக்கும் திட்டம் இருக்கிறதாம், இம்முறை இப்படத்தில் தமிழ், ஹிந்தி நட்சத்திரங்கள் அதிக எண்ணிக்கையில் கமிட் செய்யப்படுவார்கள் என்று இப்பொழுதே பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...