No menu items!

மிஷ்கினை நடிக்கக் கூப்பிட்டேன், ஓடிட்டான் – தங்கர்பச்சான் பேட்டி | 1

மிஷ்கினை நடிக்கக் கூப்பிட்டேன், ஓடிட்டான் – தங்கர்பச்சான் பேட்டி | 1

தமிழின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரும் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவருமான தங்கர்பச்சான், ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற புதிய படத்துடன் மீண்டும் வருகிறார். இதனை முன்னிட்டு ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு தங்கர்பச்சான் அளித்த பேட்டி இது.

முதலில் உங்கள் படத்தின் தலைப்பில் இருந்தே தொடங்கலாம். ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘களவாடிய பொழுதுகள்’, ‘அம்மாவின் கைப்பேசி’… இப்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’. எல்லாமே அழகான, கவித்துவமான தமிழ் தலைப்புகள். உங்கள் படங்களுக்கான தலைப்புகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

தமிழராக இருப்பதால், தமிழிலேயே சிந்திப்பதால் தமிழில் தலைப்பு வைக்கிறேன். தமிழ் படம்தானே எடுக்கிறோம். அதன் தலைப்புக்கு எதற்கு வேற்று மொழியிடம் கடன் வாங்கணும். நமக்கு ஒரு கடமையும் இருக்கு, இல்லையா?

ஆனால், இப்பலாம் படத்தின் தலைப்புகள் ‘காஃபி வித் காதல்’, ‘பீஸ்ட்’, ‘லவ் டூடே’ மாதிரி ஆங்கிலத்தைக் கலந்து வைக்கப்படுகின்றன. அது போன்ற சூழலில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ போன்ற தூய தமிழ் தலைப்பு எடுபடும் என்று கருதுகிறீர்களா?

நமக்கென்று ஒரு அடையாளம் இருக்கணும். அந்த பொறுப்பு இல்லாமல் இருப்பதன் வெளிப்பாடுகள்தான் நீங்கள் சொன்ன தலைப்புகள் எல்லாமே. அவங்களுக்கும் ஒரு கடிவாளம் போட்டால் வழிக்கு வந்துடுவாங்க. வரிச்சலுகை வேண்டுமானால் தமிழில்தான் தலைப்பு வைக்கணும் என்று மறுபடியும் சொல்லிப் பாருங்க, எல்லோரும் ஓடி வந்துடுவாங்க.

‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் முழுவதுமே ‘அன்பு தேடலு’க்கான படம் என்று சொல்லியிருந்தீங்க. எப்படி என்று விவரிக்க முடியுமா?

இன்று நம்ம எல்லோருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கு, ஒரு தவிப்பு இருக்கு. நம்ம உறவுகளோடு நேரடியா பேசுறது, அவங்களோட உரையாடுறது, அவங்களோட இருப்பது எல்லாமே குறைஞ்சி போச்சு. கால ஓட்டத்துல எல்லாமே குறையுது. அடுத்த அறையில இருப்பவங்களோட தொலைப்பேசியில பேசிக்கிட்டு இருக்கோம், குறுஞ்செய்தி அனுப்பிகிட்டு இருக்கோம். அன்பு, கோபம், காதல்னு உணர்ச்சிகள எல்லோமே இன்னைக்கு கருவிகளோடதான் காட்டிகிட்டு இருக்கோம். அன்ப நாம விட்டுட்டோம். உறவுகள போற்ற மறந்துட்டோம். எல்லாமே இன்னைக்கி பெயரளவுக்குதான் நடக்குது; குறுஞ்செய்தியில அன்ப காட்டுறது, ஒரு கேக் வெட்டி பிறந்த நாள கொண்டாடிட்டு சரி பண்ணிக்கிறது. இப்படியாயிடுச்சி வாழ்க்கை. எல்லோரும் சேர்ந்திருந்து வாழ்க்கைய அனுபவிக்கிறதெல்லாம் போயிடுச்சு. அதைப் பற்றிதான் இந்த படம் பேசுது.

இதில் யோகிபாபு நடித்துள்ளார். யோகிபாபு தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரமாய் இன்று மாறியிருக்கிறார். இந்த படத்தில் அவரை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

அவர் நல்ல நடிகர். இதுவரை அவரை சரியா பயன்படுத்தலை. அவர மட்டுமில்ல இங்க இருக்கக்கூடிய பல நல்ல நடிகர்கள நாம சரியா பயன்படுத்தல. மிக அபூர்வமான, சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய முக அமைப்பு யோகிபாபுக்கு. அந்த முகமும் அவரது உடல் மொழியும் இந்த பாத்திரத்துக்கு ஏற்புடையதா இருந்துச்சு. இந்த கதைய தேர்வு பண்ணது யோகிபாபுதான். அவர் இல்லன்னா நான் வேற ஒரு படத்தத்தான் எடுத்திருப்பேன். ரெண்டு கதை சொன்னன். சரி சார் செய்வோம்னார். ஆனால், முழு நிறைவு அவர் மனசுல இல்லன்னை பட்டுச்சு.

இன்னொரு கதை இருக்கு, அனா அது கொஞ்சம் தீவிரமான கதை. நீங்க எதிர்பார்க்கிறது எல்லாம் இருக்காது. அதனால நீங்க அதை செய்யமாட்டீங்கன்னு சொன்னேன். சொல்லுங்க சார் அப்படின்னார். கதைய கேட்ட உடனே சார் இதைத்தான் சார் பண்ணனும். நான் தேதி தர்றேன், நீங்க பண்ணுங்க சார்னார். எனக்கு வியப்பா இருந்துச்சி. ஒரு வாழ்வியல் தொடர்பான கதைய அவ்வளவு எளிதா உள்வாங்கிட்டார். அவரால் அதன்பிறகு கொஞ்சம் பெரியதாக திட்டமிட்டு இந்தப் படத்தை பண்ணினோம். இன்னும் ஐந்து நாட்கள் வந்து நடிச்சி கொடுத்திருந்தார்னா இன்னும் சிறப்பா இருந்திருக்கும். ஆனா, அவருக்கு நேரம் இல்லை. ஆனாலும், பிரச்சினையில்லை படம் நல்லா வந்திருக்கு.

தொடர்ச்சியை படிக்க க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...