No menu items!

Akash Madhwal: ஐபிஎல் தொடரின் புதிய ஹீரோ

Akash Madhwal: ஐபிஎல் தொடரின் புதிய ஹீரோ

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ப்ளே ஆஃப் சுற்று போட்டியில் 5 விக்கெட்களை எடுத்து அசத்தியிருக்கிறார் ஆகாஷ் மாத்வால். நேற்றையை போட்டியில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மாத்வால் 5 விக்கெட்களை வீழ்த்தியது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. யார் இந்த மாத்வால் என்ற கேள்வியை கிரிக்கெட் உலகில் எழுப்பியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கி பகுதியைச் சேர்ந்தவர்தான் ஆகாஷ் மாத்வால். இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த்தும், ஆகாஷ் மாத்வாலும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். சிறுவயதில் அவதார் சிங் என்ற ஒரே பயிற்சியாளரிடம்தான் இருவரும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

ரிஷப் பந்த்தைப் போலவே சிறு வயதில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், மேற்கொண்டு பயிற்சி பெற இவரிடம் வசதி இல்லை. ஒரு கட்டத்தில் உயர்தர கிரிக்கெட் பயிற்சிக்காக பந்த் டெல்லிக்குப் போக, உள்ளூரிலேயே இஞ்ஜினீயரிங் படிக்கச் சென்றுவிட்டார் மாத்வால். இருந்தாலும் அவ்வப்போது பொழுதுபோக்குக்காக டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்திருக்கிறார்.

24 வயது வரை டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்திருக்கிறார் ஆகாஷ் மாத்வால். 24 வயதில் ஒரு போட்டியின்போது முன்னாள் வீரர் வாசிம் ஜாபரின் பார்வையில் பட்டிருக்கிறார். பார்த்த மாத்திரத்திலேயே அவரது பந்துவீசும் திறமை பிடித்துப் போக, மேற்கொண்டு பயிற்சி பெற உதவியிருக்கிறார். லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக கிரிக்கெட் உலகில் நுழைந்த மாத்வால் 2022/23 சீசனில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

2021-ம் ஆண்டில் முதலாவது ஆர்சிபி அணிக்கு இவரை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் ஆடுவதற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. 2022-ல் இவரை யாரும் வாங்காத நிலையில் அத்தொடரின் பாதியில் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட, அவருக்கு பதிலாக ஆகாஷ் மாத்வால் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் மீண்டுவந்தாலும், பும்ராவின் காயத்தால் இவரை மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்தது.

பும்ரா, ஆர்ச்சர் போன்ற பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் போன்ற பல இளம் வீரர்களை அணியில் சேர்த்துப் பார்த்து, அனைவரும் சொதப்பிய நிலையில்தான் ஆகாஷ் மாத்வாலுக்கு மும்பை இந்தியன்ஸ் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சிக்கென்று பிடித்த மாத்வால், 7 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி அணியில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.

பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த வீரராக இவர் இருப்பார் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...