No menu items!

தல தோனிக்கு Good Bye?

தல தோனிக்கு Good Bye?

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு சில விஷயங்கள் முடிவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் தோனியின் ஓய்வு.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தாலும், தமிழ் நாட்டின் செல்லப்பிள்ளை அவர். ஒரு காலத்தில் சினிமா நடிகர்களுக்கு மட்டுமே விசிலடித்துக்கொண்டிருந்த மக்களை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விசிலடிக்க வைத்தவர். அந்த அளவுக்கு தமிழ் நாட்டு மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் தல தோனிக்கு இன்று நடக்கும் போட்டிதான் சேப்பாக்கத்தில் நடக்கும் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படித்தான் கடந்த 2 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கடைசி போட்டிக்கு பிறகு ஓய்வு பற்றிய கேள்விக்கு ‘டெபனட்லி நாட்’ என்று சொல்லி அடுத்த ஆண்டில் ஆடப்போவதை உறுதி செய்வார் தோனி. அது இந்த ஆண்டிலும் நடக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.

அவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தோனிக்கு 41 வயதாகிறது. இந்த வயதில் ஒரு வீரர் கடைசி 2 ஓவர்களில் வந்து பேட்டை சுழற்றி சிக்சர்கள் விளாசுவது சுலபம். ஆனால் வேகமாக சிங்கிள் எடுக்கவோ, 20 நீண்ட ஓவர்கள் முழுவதும் கால் முட்டியை மடக்கி நின்றுகொண்டே விக்கெட் கீப்பிங் செய்யவோ 41 வயது அனுமதிக்காது. வேகப் பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை டைவ் அடித்து பிடிப்பது சிரமமாக இருக்கும். இதுதான் யதார்த்தம்.

இந்த ஐபிஎல்லில் இதைத்தான் நாம் பார்த்தோம் முன்பைப்போல முழுநேரம் பேட்டிங் செய்ய முடியாவிட்டாலும், ரசிகர்களின் விருப்பத்துக்காக கடைசி சில பந்துகளில் வந்து சிக்சர்களைப் பறக்கவிட்டார் தோனி. ஆனால் கீப்பிங்கிலும், சிங்கிள்ஸ் எடுப்பதிலும் அவரால் பழைய வேகத்தைக் காட்ட முடியவில்லை “தோனியின் ஸ்டம்பிங் வேகம் அரை நொடி” என்று wow tamizhaa youtube chanellக்கு அளித்த பேட்டியில் சிஎஸ்கே அணியின் ஃபிட்னஸ் டிரயினராக இருந்த ராம்ஜி ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த ஐபிஎல்லில் அந்த அரை நொடி வேகம் மிஸ்ஸிங்.

மைதானத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவதை வழக்கமாகக் கொண்ட தோனிக்கு, இந்த 2 விஷயங்களும் நிச்சயம் உறுத்தியிருக்கும். இந்த இயலாமையால்தான் வழக்கத்தைவிட அதிகமாக இந்த ஐபிஎல்லில் அதிகம் சிடுசிடுத்தார்.

பந்துவீச்சாளர்கள் அதிகமாக No Ball வீசியபோது, “இனியும் இப்படி No Ball வீசினால் அடுத்த போட்டியில் புதிய கேப்டனின் கீழ் ஆடவேண்டி இருக்கும்” என்று வெளிப்படையாக எச்சரித்தார். இது தோனியின் ஸ்டைல் அல்ல. பந்துவீச்சாளர்கள் தவறு செய்தால், அவர்கள் காதில் கிசிகிசுத்து தவறை புரியவைப்பதுதான் Dhonism. அது இந்த முறை மிஸ்ஸிங்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு கேமராக்கள் முன்பு ஜடேஜாவிடம் சிடுசிடுத்ததும், தீபக் சாஹரை அறைவதுபோல் வேகமாக திட்டியதும்கூட தோனியிசம் இல்லை. இதெல்லாம் இதுவரை ‘கேப்டன் கூல்’ என்ற தோனியின் அகராதியிலேயே இல்லாத விஷயங்கள். அவையெல்லாம் இந்த ஐபிஎல்லில் மீறப்பட்டுள்ளன. முன்போலச் செயல்பட முடியவில்லையே என்ற தோனியின் ஆதங்கம்கூட இதற்கு காரணமாக இருக்கும். அதனால் இந்த ஐபிஎல்லுடன் ஓய்வை அறிவிப்பதுதான் தோனிக்கும், சிஎஸ்கேவுக்கும் நல்லது. ஒரு சிறந்த கேப்டனின் மூளை அடுத்த ஐபிஎல்லில் ஒரு சிறந்த மெண்டாராக, பயிற்சியாளராக சிஎஸ்கே அணிக்கு பயன்படட்டும்.

ஃபார்மின் உச்சகட்டத்தில் இருக்கும்போது, ஒரு மாபெரும் வெற்றிக்கு பிறகு ஓய்வை அறிவிப்பது எல்லோருக்கும் கைவராத விஷயம். டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து மிகச் சரியான நேரத்தில், இன்னும் கொஞ்ச காலம் ஆடியிருக்கலாமே என்று எல்லோரும் ஏங்கும்போதே ஓய்வை அறிவித்தார் தோனி. அதுதான் அவரது சக்சஸ். ஸ்டைல்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையுடன் அவர் ஓய்வு பெற வேண்டும் என்பதுதான் தோனியின் உண்மையான ரசிகர்களின் கனவாக இருக்க முடியும்.

கோப்பையுடன் விடை பெறுவாரா தோனி? இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...