No menu items!

சுற்றுச்சூழலைக் கெடுத்தாரா தனுஷ்?

சுற்றுச்சூழலைக் கெடுத்தாரா தனுஷ்?

‘திருச்சிற்றம்பலம்’ படம் பெரிய வெற்றியைப் பெற, உற்சாகத்தில் இருந்தார் தனுஷ். ஆனால் அடுத்து வந்த ‘வாத்தி’ பாஸ் மார்க் வாங்காமல் இழுத்துப் போர்த்தி படுத்து கொண்டது.

தமிழில் ’வாத்தி’ பட தோல்வியினால் தனுஷூக்கு வருத்தம்தான். இதனால் அடுத்து நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ படத்தை எப்படியாவது ஹிட் படமாக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். இப்பட ததில் தனுஷூக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் போன்ற நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘கேப்டன் மில்லர்’ படம் 1940-களில் நடக்கும் கதை. அதுவும் காட்டுப்பகுதியில் நடக்கும் காட்சிகள் அதிக இடம்பெற்றிருக்கிறதாம். இதனால் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஷூட் செய்து வருகிறார்கள். இங்கு பெரிய செட் ஒன்றையும் எழுப்பி இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் இறுதி வரை இங்கு ஷூட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் வனத்துறை வசம் உள்ள காட்டுக்குள் ஷூட் செய்த போது, குண்டு வெடிப்பது போன்ற காட்சிகளையும் எடுத்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த காட்சியை யாரோ மொபைல் போனில் எடுத்து வெளியிட, இப்போது தனுஷூக்கு சிக்கல் ஆரம்பமாகி இருக்கிறது.

ஷூட் செய்த பகுதியில் இருக்கும் கால்வாயை ஷூட்டிங்கின் போது ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவினர் உடைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

செங்குளம் கால்வாய் என்பது அந்தப்பகுதியில் 15 நீர்நிலைகளுக்கான ஆதாரமாக இருந்து வருகிறது, இங்கு வனத்துறை அனுமதி பெறாமல் மரப்பாலம் ஒன்றை செட்டாக அமைத்திருப்பதாகவும், அங்குள்ள மண் அதில் கலந்து நீர்நிலை கெட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் ஷூட்டிங்கிற்காக லைட்களை பயன்படுத்துவதால் அங்குள்ள வனவிலங்குகளுக்கு அது இடைஞ்சலாகவும் இருப்பதாகவும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் அப்பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் ;பகுதியில் விதிகளை மீறி ஷுட்டிங் நடத்துவதாக ’கேப்டன் மில்லர்’ படக்குழுவினர் மீதும் தனுஷ் மீதும் தென்காசி நிர்வாக அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாக ஒரு பேச்சு அடிப்படுகிறது.

கொஞ்சம் தாமதாக சுதாரித்து கொண்ட ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவினர் சார்பாக இயக்குநர் ‘சாணி காயிதம்’ புகழ் அருண் மாதேஸ்வரன் ‘ஷூட்டிங் குற்றச்சாட்டில் குறிப்பிட்டது போல் காட்டுப்பகுதிக்குள் நடக்கவில்லை.

தனியாருக்குச் சொந்தமான ஒரு பகுதியில்தான் ஷூட்டிங் நடந்து வருகிறது. அதற்கு அவசியமான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருக்கிறோம். இரண்டரை மாதங்களாக இங்கேதான் ஷூட் செய்து கொண்டிருக்கிறோம். மாவட்ட நிர்வாகம், இந்தப் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் பெரிய செட்களை போட அனுமதிப்பது இல்லை. தயாரிப்பு நிறுவனம் இந்த பிரச்சினை கையாண்டு வருகிறது. நாங்கள் ஷுட் செய்து கொண்டிருக்கிறோம். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று இந்தப் பிரச்சினைக்கு தற்காலிமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...