No menu items!

Costly சிங்கப்பூர் Cheap சென்னை –உலகப் பட்டியல் Report

Costly சிங்கப்பூர் Cheap சென்னை –உலகப் பட்டியல் Report

உலகில் பல நகரங்கள் அந்த இடங்களுக்கு நாம் டூர் போக வேண்டும், அங்கு வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டுவதாக இருக்கும். ஆனால், அன்றாட செலவுகள் என்று வரும்போது அழ வைக்கும். அப்படிப்பட்ட நகரங்கள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் இருக்கிறது, சிங்கப்பூர். சென்னையும் இந்த பட்டியலில் இருக்கிறது.

விரிவாக பார்ப்போம்.

லண்டனை தலைமையிடமாக கொண்ட ‘எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு, உலகளவில் ஒவ்வொரு நகரங்களின் வாழ்க்கை செலவீனம் குறித்து ஆண்டு தோறும் ஆய்வு செய்து அறிக்கை (Economist Intelligence Unit’s Worldwide Cost of Living Report) வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் 172 நகரங்களை தேர்வு செய்து, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், செலவு ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டாப்-10 நகரங்கள்

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் நகரங்கள்…

1 & 2 – சிங்கப்பூர் (சிங்கப்பூர்) & நியூயார்க் (அமெரிக்கா) – சமம்

3 – டெல் அவிவ் (இஸ்ரேல்)

4 & 5 – ஹாங்காங் (சீனா) & லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) – சமம்

6 – சூரிச் (சுவிட்சர்லாந்து)

7 – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)

8 – சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா)

9 – பாரிஸ் (பிரான்ஸ்) 10 – கோபன்ஹெகன் (டென்மார்க்) & சிட்னி (ஆஸ்திரேலியா) – சமம்

இதில் முதல் இடத்தை, வாழ்க்கைச் செலவு சம அளவில் இருக்கும் சிங்கப்பூரும் அமெரிக்காவின் நியூயார்க்கும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் நியூயார்க் முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், சிங்கப்பூர் இந்த ஆண்டு மட்டுமல்ல, தொடர்ந்து பல ஆண்டுகளாகவே வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. அதற்குக் காரணம் இது உலகளாவிய நிதி மையமாகவும் திகழ்வதுதான். சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று. ஆங்கிலம், மலாய், மாண்டரின் ஆகிவற்றுடன் தமிழும் இங்கு அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க், அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் உள்ளது. சென்னை என்ற ஒரு முழுமையான மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு பகுதிகள் கொண்டது சென்னை என்றால் ஐந்து முழு மாவட்டங்களை உள்ளடக்கியது நியூயார்க். புரூக்ளின் (கிங்ஸ் கவுண்டி), குயின்ஸ் (குயின்ஸ் கவுண்டி), மன்ஹாட்டன் (நியூயார்க் கவுண்டி), பிராங்க்ஸ் (ப்ராங்க்ஸ் கவுண்டி), ஸ்டேட்டன் தீவு (ரிச்மண்ட் கவுண்டி) இந்த ஐந்துமே ஐந்து பெருநகரங்கள். இவை எல்லாம் சேர்ந்ததுதான் நியூயார்க். எனவே, ‘தி பிக் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும்கூட. இன்னொரு பக்கம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

நியூயார்க்கைத் தவிர அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள டெல் அவிவ், இஸ்ரேலிய மத்திய தரைக்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது. இது 2021 பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. இதன் கலாச்சாரத்திற்கும் செழிப்பான இரவு வாழ்க்கைக்கும் இந்த நகரம் பிரபலமானது.

லீஸ்ட் 10

இப்பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ள நகரங்கள், மக்கள் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. அதன்படி, இந்தப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் சிரியாவின் டமாஸ்கஸும் லிபியாவின் திரிபோலியும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் சென்னை, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னை (164), அகமதாபாத் (165) இரண்டும் கடைசி 10இல் உள்ளன. பெங்களூருக்கு 161ஆவது இடத்தில் உள்ளது.

ஏன் இவ்வளவு செலவு?

இந்த ஆய்வு குறித்து ‘எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்’ அதிகாரி உபாசனா தத், “எங்கள் கணக்கெடுப்பில் 172 நகரங்களில் சராசரி விலைவாசி உயர்வு கடந்த 20 ஆண்டுகளில் பார்த்திராத அளவில் மிக உயர்ந்துள்ளது. நகரங்களில் வாழ்க்கைக் செலவு அதிகரிப்பதற்கு பெட்ரோல் விலை உயர்வு முக்கிய காரணமாக உள்ளது. உணவு, வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் நகரவாசிகளுக்கு அதிக விலைக்கு வருகின்றன, இதுவும் செலவு அதிகரிக்க காரணம்.

உக்ரைன் போர், ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள், சீனாவின் ஜீரோ-கோவிட் கொள்கை ஆகியவை விநியோகச் சங்கிலித் தொடரில் ஏற்படுத்தியுள்ள சிக்கல்கள் இதற்கு முக்கிய காரணம். இதனுடன், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், நாணய பரிமாற்ற விகித மாறுபாடு ஆகியவையும் சேர்ந்து உலகம் முழுவதும் வாழ்க்கைச் செலவை மிக அதிகரித்துள்ளன’’ என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வறிக்கை படி 2021-ஐவிட 2022-இல் உலகளவில் நகரங்களின் வாழ்வாதாரச் செலவு சராசரியாக 8.1% அதிகரித்துள்ளது. ஆனால், இதில் நாம் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள். ஆசியாவில் சராசரியாக 4.5% மட்டுமே உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...