No menu items!

கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer – ஹாலிவுட் விமர்சகர்கள் பார்வையில்

கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer – ஹாலிவுட் விமர்சகர்கள் பார்வையில்

Oppenheimer: Based on a biography – American Prometheus by Kai Bird and Martin J. Sherwin

தமிழில்: ஜெகநாத் நடராஜன்


பிரமீதியஸ் குறித்து ஜெர்மன் எழுத்தாளர் காஃப்கா எழுதிய நான்கு கதைகள் உள்ளன. முதலில் அதை சொல்லிவிடுகிறோம்…

முதல் கதைப்படி: தெய்வங்களின் ரகசியமான நெருப்பை அவர் மனிதர்களுக்குக் காட்டிக் கொடுத்ததால் காகசின் பாறை ஒன்றில் அவர் கட்டப்பட்டார். அவருடைய இரைப்பையை உண்ண தெய்வங்கள் கழுகுகளை அனுப்பின. உண்ணப்படும் இரைப்பைகள் உடனே புதுப்பித்துக் கொண்டன.

இரண்டாவது கதைப்படி: கிழித்து குதறும் அலகுகளால் குத்திக் குதறப் பட்ட பிரமீதியஸ் பாறையோடு பாறையாக ஒட்டிக்கொண்டு, இறுதியில் தானும் பாறையாகிவிட்டார்.

மூன்றாவது கதைப்படி: ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த காலப்போக்கில், அவரது துரோகம் தெய்வங்களாலும் அவராலும் மறக்கப்பட்டு விட்டது.

நான்காவது கதைப்படி: அர்த்தமற்ற இவ்விவகாரம் குறித்து ஒவ்வொருவரும் சலிப்புற்றனர். தெய்வங்கள் சலிப்புற்றன. ரணமும் சலிப்புற்று மூடிக் கொண்டது.

இனி கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓபன்ஹெய்மர்’…

‘ஓபன்ஹெய்மர்’ பட வெளியீட்டுக்கு முன்னர் வெளியான தகவல்களின் படி அனலாக் முறையில் காவியம் போல உருவாக்கப்படும் இந்தப் படம், முதல் அணுகுண்டு வெடிப்பின் அவலங்களை மீளுருவாக்கம் செய்யும் என்பதே. ஆனால், இதில் காண்பிக்கப்பட்ட கண்கவரும் அம்சம் வேறொன்று: மனித மனம் மற்றும் முகம்.

முதல் அணுகுண்டின் வெடிப்பை மீண்டும் உருவாக்கும் என்பது பற்றிய அனைத்து முன்வெளியீட்டு ஊகங்களுக்கும் கற்பனைகளுக்கும் மாற்றாக படத்தின் மிக அற்புதமான ஈர்ப்பாக வேறொன்றாக அது மாறியிருக்கிறது. இதில் காண்பிக்கப்பட்டிருப்பது அசல் மனித மனம்.

ஜே. ராபர்ட் ஓபன்ஹெய்மர் (சிலியன் மர்பி) வாழ்க்கை வரலாறு, அசலாக சில மனித மனங்கள் பற்றிய மூன்று மணிநேர திரைப்படம் ஆகியிருக்கிறது. மனிதர்கள் நிறைய பேசுகிறார்கள், மற்றவர்கள் பேசுவதைக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் நல்ல அல்லது கெட்ட செய்திகளுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் தங்கள் சொந்த சிந்தனையில் தொலைந்து போகிறார்கள்.

இப்படத்தின் தலைப்புக்குச் சொந்தக்காரர் லாஸ் அலமோஸில் உள்ள அணு ஆயுதக் குழுவின் மேற்பார்வையாளர். எதிர்கால உலக அழிவிற்கான இந்த இயற்பியலாளரின் பங்களிப்பு அவருக்கு அமெரிக்கன் பிராமிதியஸ் என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தது. (கை பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே. ஷெர்மன் எழுதிய ஜே. ராபர்ட் ஓபன்ஹெய்மர் வாழ்க்கை வரலாற்று நுலின் தலைப்பு இது).

இயக்குநர் நோலன், ஒளிப்பதிவாளர் ஹொய்டே வான் ஹொய்டெமா இருவரும் நியூ மெக்சிகோ பாலைவனத்தின் அகன்ற அழகைப் படம்பிடிப்பதற்காக மட்டும் பெரிய வடிவிலான ஐமாக்ஸ் திரைப்பட அமைப்பைப் பயன்படுத்தவில்லை. அதன் வழி, சிறந்த கணிதவியலாளரும் தனிப்பட்ட முறையில் தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்ளாத, ஆனால், அணு சக்தி அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஆபன்ஹீமரின் முக அமைதியையும் உள்ளக் கொந்தளிப்பையும் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். மனக்கிளர்ச்சி மற்றும் தீராத பாலியல் வேட்கை அவரது தனிப்பட்ட வாழ்வின் பேரழிவிற்கு காரணமாக இருந்தது. அவரை மாற்றியது.

உலக நாகரீகத்திற்கு அவரது மிகப்பெரிய பங்களிப்பு என்பது உலக நாகரீகத்தை அழிக்கக்கூடிய ஆயுதம்.

க்ளோஸ்-அப் ஷாட்கள், நடிகர் சிலியன் மர்பியின் முகத்தை நடுத்தரத் தூரத்திலும் ஓரத்திலும் சில சமயங்களில் நேரடியாக கேமரா லென்சை பார்த்துக் கொண்டிருப்பதையும் காட்டும். அதே சமயத்தில் ஆபன்ஹீமர் விருப்பமற்ற தொடர்புகளிலிருந்து விலகியிருக்கிறார். அல்லது பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கிறார். சமயங்களில் அதீத கற்பனை அல்லது விழித்திருந்தபடியே காணும் கனவுகளுக்குள் தொலைந்துபோகிறார்.

பெரிய குளோஸப் மூலம் உணர்ந்தது என்னவெனில் பிடிமானம் கொண்ட முகங்களில் அவர்கள் யார் மற்றும் அவர்களை யார் என்று முடிவு செய்த மற்றவர்கள் யார் என்பதையும், அவர்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதையும் தான்.

சில சமயங்களில் மனித முகங்களின் நெருக்கமான குளோஸ் அப் ஷாட்கள், நிகழாத அல்லது ஏற்கனவே நிகழ்ந்த காட்சிகளின் ஃபிளாஷ்-கட்களால் குறுக்கிடப்படுகின்றன.

மீண்டும் மீண்டும் சங்கிலித்தொடர் போல அவர்கள் நினைவிற்கு வரும் தீப்பிழம்பு, வெடித்துச் சிதறிய கற்குப்பைகள், பட்டாசுச் சரங்கள் போன்ற தொடர் வரிசையில் இன்னும் தீப்பற்றாத, பேரழிவைத் தூண்டும் உருவங்களும் இருக்கின்றன.

இந்தப் படத்தில் படிப்படியாக விரிவடையும் பிளாஷ் பேக் காட்சிகள் இருக்கின்றன. நீங்கள் முதலில் எதோ ஒன்றைப் பார்க்கிறீர்கள். அதன் பின் கொஞ்சம் முழுமையாக அனைத்தையும் பார்க்கிறீர்கள். ஆனால் இவை, ஆபன்ஹீமர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலைவனத்தில் வெடிக்க நினைக்கும் பெரிய அணுகுண்டோடும் அல்லது அவரது வாழ்வில் தொடர்ச்சியாக வெடித்த சம்பவங்களோடும் தொடர்புபடுத்திப் பார்க்கத்தக்கவை அல்ல. சில சமயங்களில் தனிப்பட்ட முறையில் கோபம், பெருமை மற்றும் காமம் போன்றவற்றின் பெரிய சிவப்பு பொத்தானில் கை வைக்கிறார். பல சமயங்களில் அவர் ஒரு அப்பாவியாக அல்லது சிந்தனையற்ற முறையில் செய்த தவறுகளால் யாரையாவது கோபப்பட வைக்கிறார். அவர்கள் பதிலுக்கு கால நேரம் தாமதமாகி வெடிக்கும் குண்டுகளால் சமமான பதிலடி கொடுக்கிறார்கள்.

‘fissil’ என்ற பிளவுபடும் பதத்தை இயற்பியலிலிருந்து கடன் வாங்கித்தான் இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். தனிப்பட்ட முடிவுகளால் உருவாகும் செயலும், அதன் விளைவாக நிகழும் சங்கிலித்தொடர் போன்ற எதிர் வினைகளின் உருவகமே ‘டொமினோ விளைவு’ என்பதாகும். இந்த அடிப்படையில் நீரில் எழும்பும் சிற்றலைகள் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. நீர்ப்பரப்பில் தொடர்ந்து வட்டமாக நகர்ந்துகொண்டே இருக்கும் நீரலைகளின் மீது மழைத்துளிகள் தொடர்ச்சியாக நிதானமாக விழுவதால், காணாமல் போகும் சிற்றலைகள் மிக நெருக்கமான ஷாட்களால் காண்பிக்கப்படும்போது அரசாங்க ஆலோசகராக, பொதுவான மனிதராக, லாஸ் அலமாஸில் முதல் அணுகுண்டு சோதனை நிகழக் காரணமாக இருந்த ஓபன்ஹெய்மரின் முடிவை முன்னறிவிக்கிறது. பார்வையாளராகிய நாம் அந்த மோசமான தாக்கத்தின் ஆரம்பத்தைப் பார்க்கிறோம், கேட்கிறோம், கடைசியாகத்தான் அதனை உணர்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...