No menu items!

பயங்கரவாத அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா உள்ளது – மோடி

பயங்கரவாத அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா உள்ளது – மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் பிரச்சினை காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இன்று 4 -வது நாளாகவும் இரு அவைகளும் முடங்கியது. முன்னதாக இன்று காலை பா.ஜனதா நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, “எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணி நீண்டநாட்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர். அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது. இதுபோன்ற ஒரு குறிக்கோள் அற்ற எதிர்க்கட்சிகளை பார்த்ததே இல்லை. அவர்கள் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்துள்ளனர். ஆனால், பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரிலும் , கிழக்கிந்தியா கம்பெனி என்ற பெயரிலும் “இந்தியா” உள்ளது.

மக்களை தவறாக வழிநடத்துவதற்கு நாட்டின் பெயரைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. குறிக்கோளற்ற எதிர்க்கட்சிகளை பொருட்படுத்தவே தேவையில்லை. அதேவேளையில் நாம் இன்னும் ஒரு ஆண்டில் நடப்பு ஆட்சியை பூர்த்தி செய்யவுள்ளோம். எனவே மீண்டும் நாம் புத்துணர்வுடன் எழுச்சியுடன் செயல்பட்டு அடுத்த தேர்தலை சந்திக்க நம்மை கட்டமைக்க வேண்டும். 2024 தேர்தலுக்குப் பிறகு மக்கள் ஆதரவுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும். தனது அடுத்த ஆட்சிக்காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்” என கூறினார்.

பேசச் சொல்வது மணிப்பூர் பற்றி, பேசுவதோ கிழக்கிந்திய கம்பெனி குறித்து: மோடிக்கு கார்கே பதில்

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அவையில் பேசுகையில், “இப்போது மணிப்பூர் பற்றி எரிகிறது. நாங்கள் அதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். ஆனால், பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார்” என்று கார்கே பேசினார். இதனைத் தொடர்ந்து, நிலவிய அமளியால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் ராகுல் காந்தி இட்ட பதிவில், “நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி. ஆனால், நாங்கள் இண்டியா தான். நாங்கள் மணிப்பூரின் காயங்கள் ஆற உதவுவோம். நாங்கள் மணிப்பூர் பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைப்போம். நாங்கள் மணிப்பூரின் அனைத்து மக்களுக்கும் அன்பையும், சமாதானத்தையும் மீட்டுக் கொடுப்போம். இந்தியா என்பதன் கருத்தியலை நாங்கள் மணிப்பூரில் மீள்கட்டமைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு முடித்துவைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் நிஷா பானு , பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அமலாக்கப்பிரிவு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் என்.ஆர் இளங்கோ ஆஜரானார். அபபோது, “நான் என்னுடைய தீர்ப்பில் உறுதியாக உள்ளேன்.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு சென்றுவிட்டதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. இந்த வழக்கை முடித்து வைத்து விடுகிறோம்” என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். மேலும் அமலாக்கத்துறை காவல் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருவுற்ற மைனர் பெண்: டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்த அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். அதில், “என் அம்மாவின் சகோதரியின் (சித்தி) கணவர் யாரும் இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் என்னை காதலிப்பதாக கூறினார். தன்னுடன் உடலுறவு கொள்ளவில்லையென்றால் என்னை வயிற்றில் கத்தியால் குத்திக்கொன்று விடுவேன் என்று சொல்லி எனது விருப்பத்திற்கு மாறாக உடல் உறவில் ஈடுபடவைத்தார். அதற்குப் பிறகு நான் என் மாமா வீட்டில் இருந்தபோதும் என் சித்தியின் கணவர் அங்கு வந்து என் விருப்பத்திற்கு மாறாக என்னுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார். நான் பயம் காரணமாக இந்த சம்பவத்தை வீட்டில் யாரிடமும் கூறவில்லை. எனக்கு மாதவிடாய் வரவில்லை என்று என் அம்மா மற்றும் பாட்டியிடம் பின்னர் நான் சொன்னேன். இதற்குப் பிறகு மூன்று மாதங்கள் மாதவிடாய்க்காக காத்திருந்தேன். என் சித்தியின் கணவர் என்னுடன் இரண்டு முறை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக என் அம்மாவிடம் நான் சொன்னேன். என் அம்மாவின் யோசனைப்படி வீட்டில் கர்ப்ப பரிசோதனை கிட் மூலம் சோதனை செய்தபோது நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது” என்று கூறியிருந்தார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. பரிசோதனைக்காக அவரது டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், சில நாட்களுக்குப் பிறகு ஒரு துணை அறிக்கையை அந்த பெண் தாக்கல் செய்தார். அதில், தனது சொந்த அண்ணன் கட்டாயப்படுத்தி தன்னுடன் உடல் உறவில் ஈடுபட்ட வைத்ததாக குற்றம்சாட்டினார். “கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் என் சகோதரனுடன் வீட்டிற்கு வந்திருந்தேன். அன்று என் அண்ணன் என் விருப்பத்திற்கு மாறாக தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தினான். நான் 10 நாட்கள் வீட்டில் இருந்தபோது என் அண்ணன் அவ்வப்போது என்னுடன் உடல் உறவில் ஈடுபட்டு வந்தார். அதன் பிறகு என் சகோதரர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு சோனோகிராபி செய்யப்பட்டது. நான் 4 மாத கர்ப்பமாக உள்ளேன் என்று கூறப்பட்டது. உன்னால்தான் இதெல்லாம் நடந்தது என்று வீட்டுக்கு வந்து அண்ணனிடம் சொன்னேன். நீ வேறு ஒருவரின் பெயரை சொல்லிவிடு என்று அண்ணன் சொன்னார். தன்னுடைய பெயரை யாரிடமாவது சொன்னால் நான் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் என்று மிரட்டினார். அதனால்தான் இதுவரை யாரிடமும் அவரது பெயரைச் நான் சொல்லவில்லை” என்று கூறியிருந்தார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் வளரும் கரு அவரது சகோதரருடையது என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...