No menu items!

சென்னை அதிர்ச்சி – பாலியல் தொழிலில் என்ஜினியரிங் மாணவி!

சென்னை அதிர்ச்சி – பாலியல் தொழிலில் என்ஜினியரிங் மாணவி!

ஷாக்கடிக்கும் செய்தி இது.

சென்னையில் கல்லூரி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

என்ன நடந்தது?

சில நாட்களுக்கு முன் எழும்பூர் பகுதியிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் வந்திருக்கிறது. அந்த ஒட்டலை தொடர்ந்து கண்கானித்திருக்கிறார்கள். அங்கே பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டதும் காவல்துறையினர் விரைந்து சென்றிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட அறையை தட்டி திறக்க வைத்திருக்கிறார்கள். உள்ளே மூன்று இளம் பெண்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்தார்கள். மூவரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை ஒப்புக் கொண்டார்கள்.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் பிடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

பிடிபட்டவர்களில் ஒரு பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். பொறியியல் படிக்கும் மாணவி பாலியல் தொழிலில் ஈடுப்பட்டது காவல்துறையினருக்கு மட்டுமல்ல, இந்த செய்தியை பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சிதான்.

பிடிபட்ட மாணவியின் பெயர் ஜெயபிரதா. எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். பகுதி நேரமாக பாலியல் தொழிலுக்கு கல்லூரிப் பெண்களை பிடித்துக் கொடுக்கும் தரகர் வேலையும் செய்கிறார் என்கிறது போலீஸ் தரப்பு. விபச்சாரத் தொழில் தடை சட்டத்தில் தமிழ்நாட்டில் கைது செய்யப்படும் முதல் பொறியியல் கல்லூரி மாணவி இவர்தான். அவருக்கு துணையாக அவரது ஆண் நண்பர் பிரேம்தாஸ். இவர்தான் ஜெயபிரதாவை பாலியல் வலையில் வீழ்த்தியது.

ஜெயபிரதா பாண்டிச்சேரியை சேர்ந்தவர். சென்னியில் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியிருக்கிறார் பிரேம்தாஸ். அறிமுகம், நட்பாகி, காதலாகி காமத்தில் முடிந்திருக்கிறது. அவருடன் பல இடங்களுக்கு சென்றிருக்கிறார். ஆடம்பர வாழ்க்கை, கை நிறைய பணம் இதுதான் இந்த ஜோடிக்கு தேவையாக இருந்திருக்கிறது. அதை சம்பாதிக்க எளிய வழி பாலியல் தொழில் என்று அதை செயல்படுத்த தொடங்கியிருக்கிறது இந்த ஜோடி. இவர்களுக்கு வழிகாட்டியாக ஒருவர் இருந்திருக்கிறார். அவரை காவல்துறை இப்போது தேடி வருகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை கல்லூரி படிப்பு. சனி, ஞாயிறுகளில் பாலியல் தொழில். இதுதான் அவர்கள் நடைமுறை. தனக்குத் தெரிந்த பல இளம் கல்லூரி மாணவிகளை வீக் எண்ட் பார்ட்டி, கொண்டாட்டம் அழைத்துச் சென்று அவர்களை மெல்ல பாலியல் தொழிலுக்குள் இழுத்து விட்டிருக்கிறார்கள். பணத்துக்காகவும் கொண்டாட்ட வாழ்க்கைக்காகவும் இளம் கல்லூரிப் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

இந்தத் தொழிலில் கரன்சி மழை கொட்டொ கொட்டோ என்று கொட்டுகிறது. இளம் கல்லூரிப் பெண்கள் என்றால் அவர்களுக்கான விலையே பல ஆயிரங்களைத் தாண்டும். கிடைக்கும் பல்லாயிரக் கணக்கான ரூபாயில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை அந்தப் பெண்களுக்கு செல்லும். மீது பணம் அனைத்தும் ஜெயபிரதா, பிரேம்தாசுக்குதான். இவர்களுக்கு குறைந்தது 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய்வரை லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆண்களை கவர்ந்து இழுப்பதற்கு பல டேட்டிங் ஆப் (Dating App)களை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆப்கள் மூலமாகதான் ஆண்களுக்கு வலை விரிக்கப்பட்டு படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள். அதையும் காவல் துறை கண்டுபிடித்திருக்கிறது.

இரவு பார்ட்டி, விருந்து, கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக இருக்க சில வாரங்கள் இவர்களுடன் செல்லும் கல்லூரி மாணவிகள் இறுதியில் ஓட்டல் ரூம்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அந்தப் பெண்களும் தங்களை அறியாமல் இவர்கள் வலையில் விழுந்து வெளியில் வர வழி தெரியாமல் தத்தளிக்கிறார்கள். இந்த ஜோடியின் முக்கிய குறி ஏழ்மையில் இருக்கும் பெண்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்கள். இப்படி போலீஸ் வட்டாரங்கள் இந்தக் கைது குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களைச் சொல்லுகிறார்கள்.

இப்போது இந்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த நெட்வொர்க் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் இது போன்று சென்னையில் வேறு செக்ஸ் நெட்வொர்க் இருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு காவல்துறை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ஏ2வாக ஜெயபிரதா சேர்க்கப்பட்டிருக்கிறார். ஏ3ஆக பிரேம்தாஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவின் மூளையாக செயல்படுபவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஏ1 ஆக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் விபச்சாரத் தடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் பேசினோம். ‘தப்பியோடிய பிரேம்தாசை பிடிப்பதற்கான முயற்சிகளில் இருக்கிறோம். வழக்கு விசாரணையில் இருப்பதால் வேறு எதுவும் பேசக் கூடாது’ என்று முடித்துக் கொண்டார்.

கல்லூரிப் பெண்களும் பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டிய காலக் கட்டமிது என்பது மட்டும் இந்த சம்பவத்திலிருந்து தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...