No menu items!

நண்பனை கொன்ற சிறுவன் – என்ன காரணம்?

நண்பனை கொன்ற சிறுவன் – என்ன காரணம்?

கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவனை சக மாணவனே வெட்டி கொலை செய்திருக்கிறான். தனது உடல் குறித்து தொடர்ந்து கிண்டலும் கேலியும் செய்ததால் கொன்றதாக கூறி திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் சரணடந்திருக்கிறான் அந்த மாணவன்.

காவல் நிலையத்தில் சரணடைந்த மாணவன் சற்று பருமனாக இருப்பதால் சக மாணவனின் தொடர் கேலிக்கு ஆளாகியிருக்கிறான். வார்த்தைகளினால் மட்டுமில்லாமல் உடல் ரீதியாகவும் சீண்டல்கள் நடந்ததாக சரணடைந்த மாணவன் குறிப்பிட்டிருக்கிறான். அவனை மார்பிலும் தொடைகளிலும் தகாத முறையில் தொட்டு சீண்டியதாக தெரிவித்திருக்கிறான்.

இந்த சீண்டல்கள், கேலி கிண்டல்கள் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால் அந்த மாணவன் தன்னுடைய கிண்டல், கேலி, தகாத சீண்டல்களை நிறுத்தவில்லை.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் அவனை தனியே அழைத்துச் சென்று கொன்றதாக அந்த மாணவன் ஒப்புக்கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கொலை செய்த மாணவனும் கொலையான மாணவனும் நெருங்கிய நண்பர்களாகதான் பழகியிருக்கிறார்கள். ஆனால் நாளடைவில் இந்த வக்கிர செய்கைகளால் அவர்கள் நட்பு உடைந்திருக்கிறது. நட்பு உடைந்தது மட்டுமில்லாமல் கொலை வரை சென்றிருக்கிறது. இது குறித்து மனநல ஆலோசகர் திரு.ஆனந்த்திடம் பேசினோம்.

வாவ் தமிழா : உடல் குறித்து கேலி செய்தல் கொலை செய்யும் அளவுக்கு மனதில் பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆனந்த்: டீன் ஏஜில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் உடல் குறித்த கவனம் அதிகமாக இருக்கும். இந்த சிறுவனுக்கு தன்னை பற்றிய தாழ்வு மனப்பான்மை இருப்பதாகத்தான் தெரிகிறது. இந்த நிலையில் அவரை குறித்து கேலி செய்யும்போது அவரது கோபம் தூண்டப்படுகிறது. கோபத்தில் செய்வதறியாமல் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளான். இந்த சம்பவத்தை பார்க்கையில் இதுவே காரணமாக தெரிகிறது

வாவ் தமிழா: பருமனாக இருப்பவர்கள் “குறிப்பாக மாணவர்கள்” தங்கள் உடலை குறித்த விமர்சனங்களை எப்படி கையாள வேண்டும்?

ஆனந்த் : பருமனாக இருப்பதற்கு பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன, தவறான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின்மை. இந்த இரண்டு காரணங்களைத் தாண்டி உடல் ரீதியான பிரச்சினைகளினால் கூட உடல் பருமன் அதிகரிக்கக் கூடும். அப்படி இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும். இந்த பொதுவான காரணங்களால் பருமனாக இருப்பவர்கள், கேலி விமர்சனங்களை சந்திக்கும் போது பாசிடிவாக அணுக வேண்டும். இது தங்களால் சரி செய்யப்பட முடியும் பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தங்களது உணவு பழக்கம் மற்றும் சீரான உடற் பயிற்சியில் ஈடுபட்டு அதை சரி செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்”

வாவ் தமிழா: இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு பள்ளி தரப்பிலும் பெற்றோர் தரப்பிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

ஆனந்த் : பெற்றோரும் ஆசிரியர்களும், இது போன்ற செயலில் ஈடுபடும் சிறுவர்களை கண்டிக்கலாம். ஆனால் இது போன்ற சம்பவங்களை முற்றிலும் நம்மால் தடுக்க இயலாது. குறை கூறுவது மனித இயல்புதான். அந்த அணுகுமுறையை அறிந்து நாம் செயல்பட வேண்டும். தனக்கு இருக்கும் நிறைகள் மீது கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுதல் அவசியம்.

தாழ்வு மனப்பான்மை இருந்தால் நல்ல நண்பர்கள், வழிகாட்டி அல்லது ஒரு மனநல ஆலோசகரை சந்தித்து இது குறித்து நாம் ஆலோசனை பெறலாம். அவர் இதிலிருந்து விடுபட கண்டிப்பாக உதவி செய்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...