No menu items!

அவசரமாய் கிளம்பிய அஸ்வின் – அம்மாவுக்கு என்னாச்சு?

அவசரமாய் கிளம்பிய அஸ்வின் – அம்மாவுக்கு என்னாச்சு?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நேற்று 500-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆனால் அந்த சாதனையை அவரால் கொண்டாட முடியவில்லை. அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டில் இருந்து தகவல் வர, அடுத்த சில மணிநேரங்களிலேயே அணியில் இருந்து வெளியேறி வீட்டுக்கு புறப்பட்டார் அஸ்வின்.

இந்தியாவுக்கு ஏற்பட்ட சிக்கல்

அஸ்வினின் திடீர் வெளியேற்றத்தால் இந்தியாவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டது. கிரிக்கெட் விதிகளின்படி ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு, அவரால் ஆட முடியாமல் போனால் மட்டுமே மாற்று வீரரை களம் இறக்க முடியும். அப்படி மாற்று வீர்ர் களம் இறங்கினாலும் அவர் பேட்டிங் செய்யவோ வந்து வீசவோ முடியாது. பீல்டிங் மட்டும்தான் செய்ய முடியும்.

அஸ்வின் விஷயத்தைப் பொறுத்தவரை, அவர் காயத்தால் வெளியேறவில்லை என்பதால் மாற்று வீரரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எதிரணி கேப்டனான பென் ஸ்டோக்ஸ் சம்மதித்தால் மட்டுமே இந்தியாவால் மாற்று வீரரை பீல்டிங் செய்ய களம் இறக்க முடியும். இல்லாவிட்டால் இந்திய அணி 10 வீர்ர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆடவேண்டி வரும்.

விட்டுக்கொடுத்த பென் ஸ்டோக்ஸ்

இந்த சூழலில் அஸ்வினின் நிலைமையைப் பற்றி பென் ஸ்டோக்ஸிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அவரும் பெருந்தன்மையாக இந்தியா மாற்று வீர்ரை பீல்டிங்கில் பயன்படுத்த சம்மதித்துள்ளார். இந்தியாவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. அஸ்வினும் கொஞ்சம் மன திருப்தியுடன் அம்மாவைப் பார்க்க கிலம்பியுள்ளார்.

அஸ்வின் அம்மாவின் தியாகம்:

அஸ்வினை ஒரு சிறந்த கிரிக்கெட் வீர்ராக உருவாக்கியதில் அவரது அம்மா சித்ராவுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. சிறுவயதில் அஸ்வினுக்காக காலை 4 மணிக்கெல்லாம் எழும் அஸ்வினின் அம்மா, அவருக்கு தேவையான உணவை சமைத்துக்கொண்டு, அஸ்வினை கிரிக்கெட் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் செல்வார். அங்கு அவரது பயிற்சி முடியும்வரை காத்திருந்து, பின்னர் அங்கிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்வார். அவரை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து வேலைகளை பார்ப்பார். பின்னர் மீண்டும் மாலையில் அதேபோல் பள்ளிக்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு பயிற்சி மையத்துக்கு போவார். பயிற்சி முடியும்வரை காத்திருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.

குருவாக மாறிய அம்மா

வேகப்பந்து வீச்சாளராக இருந்த அஸ்வின், ஒரு சுழற்பந்து வீச்சாளராக மாறவும் சித்ராதான் காரணமாக இருந்திருக்கிறார். ஒரு முறை அஸ்வினின் பயிற்சியாளர் அவர் சுழற்பந்து வீச்சாளரானால் நல்லது என்று என்று அஸ்வின் அம்மாவிடம் சொல்ல, அதை அஸ்வினிடம் சொல்லி, அவர் சுழற்பந்து வீச்சாளாராக வற்புறுத்தி இருக்கிறார். அவரது வற்புறுத்தல்தான் அஸ்வின் இன்று வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளராக உதவியுள்ளது. அதனால் தம் அம்மா மீது பாசம் வைத்த்துடன், அவரை ஒரு குருவாகவும் அஸ்வின் பார்த்துவந்தார்.

டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதனை படைத்துள்ள நிலையில், அவரது அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது அவருக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் இருந்து அவர் விரைவில் மீண்டு வரவும், அஸ்வினின் அம்மா குணமடையவும் பிசிசிஐ தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...