No menu items!

அர்ச்சனாவின் ’அவர்’

அர்ச்சனாவின் ’அவர்’

தேனி கண்ணன்


சின்னத்திரை நடிகை அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதிக பரபரப்பான சூழலுக்கு வந்து விட்டார். ஏற்கனவே ராஜா ராணி தொடரில் பயங்கரமான வில்லி வேடத்தில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார். இதில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பரிசையும் பெற்று விட்டதால்

பல நிகழ்ச்சிகளுக்கு அவர் கேட்கும் சம்பளமே தலையை சுற்ற வைக்கிறதாம். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தனது ஆண் நண்பருடன் சென்னைக்கு வெளியே புழலுக்கு அருகில் பெரிய பங்களா வீட்டில் வசித்து வந்தார். . இதை பற்றி வெளியே எதுவும் காட்டிக் கொள்ளாத அர்ச்சனா சமீபத்தில் ஒரு புகைப்பட நிகழ்ச்சியை நடத்திய நண்பரை ரசிகர்களுக்கு தனது ஹீரோ என்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இதன் மூலம் பல ஆண்டுகளாக அர்ச்சனா காதலித்து வந்தது யாரை என்ற உண்மை வெளியே தெரிந்திருக்கிறது.

அவர் பாரதி கண்ணம்மா தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் என்பது தெரிந்து பலருக்கும் வியப்பு. ஆனால் இந்த தொடரில் நடிக்கும் போதே இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்து அது காதலாகி விட்டது என்கிறார்கள். ஆனால் இதனை மறைத்து யார் காதலர் என்பதை வெளிக்காட்டாமல் இருந்தார் அர்ச்சனா. இப்போது அவரே அருண்குமாரை ஹீரோ என்று வர்ணித்து புகைப்படம் பதிவிட்டிருப்பதால் அதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். சிலர் அர்ச்சனாவுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் இது வெறும் நட்புதான் திருமணம் எல்லாம் இல்லை என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...