No menu items!

28 பந்துகளில் 75 ரன்கள் – யார் இந்த அபிஷேக் சர்மா?

28 பந்துகளில் 75 ரன்கள் – யார் இந்த அபிஷேக் சர்மா?

இந்த ஐபிஎல் தொடரில் சூப்பர் ஹீரோவாக மாறிவருகிறார் அபிஷேக் சர்மா. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து பின்னி எடுக்கிறார் அபிஷேக். இந்த கூட்டணியின் அதிரடியால் முதல் 10 ஓவர்களுக்குள் மிகச் சாதாரணமாக 100 ரன்களை எட்டுவது சன்ரைசர்ஸ் அணிக்கு வழக்கமாகி உள்ளது.

மே 8-ம் தேதி நடந்த போட்டியில்கூட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 9.4 ஓவர்களில் 167 ரன்களை ஊதித் தள்ளியிருக்கிறது ஹெட் – அபிஷேக் ஜோடி. இந்த போட்டியில் அபிஷேக் 28 பந்துகளில் 75 ரன்களைக் குவிக்க, அவர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அபீஷேக் சர்மாவைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்காக சில தகவல்கள்.

முதல் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்கவிட்ட யுவராஜ் சிங்கின் சிஷ்யர்தான் இந்த அபிஷேக் சர்மா. கிரிக்கெட் உலகில் தான் கற்ற பாடங்கள் பலவற்றையும் அபிஷேக் சர்மாவுக்கு கற்றுத் தந்திருக்கிறார் யுவராஜ் சிங். அதனால்தான் லக்னோ போட்டிக்கு பின்னர் தனது அதிரடி இன்னிங்ஸுக்கு யுவராஜ் சிங்கும் ஒரு காரணம் என்று அபிஷேக் சர்மா கூறியிருக்கிறார். சிக்சர் அடிப்பதில் குருநாதர் 8 அடி பாய்ந்தால், சிஹ்யர் அபிஷேக் 16 அடி பாய்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் 2000-ம் ஆண்டில் அபிஷேக் சர்மா பிறந்தார். அவரது அப்பா ராஜ்குமாரும் ஒரு கிரிக்கெட் வீர்ர்தான். இந்திய அணிக்காக ஆட ஒரு காலத்தில் ஆசைப்பட்ட அவர் இந்தியாவில் வடக்கு மண்டல அணிக்காக மட்டும் சில போட்டிகளில் ஆடியுள்ளார். அப்போது இருந்த கடும் போட்டியால் அவரால் இந்திய அணிக்குள் இடம்பிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ராஜ்குமார், பின்னர் சொந்த ஊருக்கு வந்து இளம் கிரிக்கெட் வீர்ர்களுக்கு பயிற்சி கொடுத்தார். அந்த வகையில் அபிஷேக் சர்மாவின் முதல் பயிற்சியாளர் என்று ராஜ்குமாரைச் சொல்ல்லாம்.

16 வயதுக்கு உட்பட்ட பஞ்சாப் அணியின் கேப்டனாக அபிஷேக் சர்மா இருந்தபோதுதான் அந்த அணி விஜய் மெர்ச்சண்ட் கோப்பையை வென்றது. இந்த தொடரில் 12 போட்டிகளில் ஆடிய அபிஷேக் சர்மா, மொத்தம் 1,200 ரன்களைக் குவித்தார். பின்னர் 2016-ம் ஆண்டில் நடந்த ஆசிய இளையோர் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அபிஷேக் சர்மா, அதில் இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்தார்.

ஐபிஎல்லில் முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காகத்தான் அபிஷேக் சர்மா ஆடியுள்ளார். 2018-ல் நடந்த ஏலத்தில் டெல்லி அணி அவரை 55 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தனது முதல் போட்டியிலேயே 19 பந்துகளில் 46 ரன்களை அவர் குவித்துள்ளார்.

2019-ம் ஆண்டில் அதே 55 லட்ச ரூபாய்க்கு அபிஷேக் சர்மாவை வாங்கிய சன்ரைசர்ஸ் அணி, பின்னர் 2022-ம் ஆண்டில் 6.50 கோடி ரூபாய் கொடுத்து அவரை தக்கவைத்தது.

இந்த ஐபிஎல் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்புதான் அபிஷேக் சர்மாவின் முன்னாள் காதலியான தான்யா சிங் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் சூரத் நகர போலீஸார் அபிஷேக் சர்மாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...