No menu items!

விஜய்66: ராஷ்மிகாவை டிக் செய்த விஜய்!

விஜய்66: ராஷ்மிகாவை டிக் செய்த விஜய்!

பீஸ்ட்’ ட்ரெய்லர் ஹாட் டாபிக்காவும், ட்வீட்களாகவும், ட்ரோல்களாகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, தனது அடுத்தப் பட பூஜையுடன் களத்தில் இறங்கி விட்டார் விஜய்.

தற்போதைக்கு #vijay66 என்ற தற்காலிக பெயருடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜயுடன் ஜோடி சேர்கிறார் ராஷ்மிகா மந்தானா.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் பேனரில் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் சிரிஷ் இப்படத்தை தயாரிக்கிறார்கள். கொடுத்த பணத்திற்கு தரமாக இசையமைக்கும் தமன், இரக்கம் பார்க்காமல் வெட்டியெறிந்து படத்தை விறுவிறுப்பாக்கும் எடிட்டர் கே.எல். ப்ரவீன், சொன்னதை படம் பிடிக்கும் கார்த்திக் பழனி என்ற பலமான கூட்டணியுடன் படத்தை இயக்குகிறார் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் வம்சி படிபள்ளி.

முன்னா, பிருந்தாவனம், யெவடு, உப்பிரி, மஹர்ஷி படங்களை இயக்கியிருக்கும் வம்சி, முதல் முறையாக விஜயுடன் கைக்கோர்த்திருக்கிறார். இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நுழைகிறார்.

இந்தப் படத்திற்கு ஹீரோயினாக ராஷ்மிகாவை பரிந்துரை செய்தது விஜய்தான் என்கிறார்கள். தனது முந்தையப் படங்களிலேயே ராஷ்மிகாவை ஒகே செய்திருக்கிறார் விஜய். ஆனால் ’புஷ்பா’ டீம் ராஷ்மிகாவை கமிட் செய்துவிட்டது. இதனால் முன்பே தமிழுக்கு வந்திருக்க வேண்டிய ராஷ்மிகா கொஞ்சம் லேட்டாக இங்கே அறிமுகமாகிறார்.

தெலுங்கு நட்சத்திரங்கள் தமிழில் கால் பதிக்க விரும்புவதைப் போலவே, நம்மூர் நட்சத்திரங்களும் தெலுங்கில் தங்களது பிஸினெஸை விரிவுப்படுத்த விரும்புகிறார்கள்.

தமிழ், மலையாளத்தில் விஜய்க்கு பிஸினெஸ் ரொம்பவே ஸ்ட்ராங்.

இப்பொழுது தெலுங்கில் களமிறங்க, விஜய்66 நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதால் ராஷ்மிகாவிற்கு கேட்ட சம்பளத்துடன் ஓகே பண்ணிவிட்டார்கள்.

விஜய்66 படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டாலும், முக்கியமான காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் இருக்கும் ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு வருகிறது என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...