No menu items!

கங்கனா ரனவத் இயக்கும் ‘எமர்ஜென்சி’

கங்கனா ரனவத் இயக்கும் ‘எமர்ஜென்சி’

‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் அரசியலை மையமாகக் கொண்ட படத்தை இயக்குகிறார் பாலிவுட் நடிகை கaங்கனா ரனவத். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் நடந்த ‘எமர்ஜென்சி’யை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இப்படத்தை இயக்குவதுடன் அதில் முக்கிய வேடத்திலும் கங்கனா ரனவத் நடிக்கவுள்ளார். ‘மனிகர்னிகா – தி குயின் ஆஃப் ஜான்சி’ என்ற படத்துக்கு அடுத்ததாக கங்கனா ரனவத் இயக்கும் படம் இது.

‘எமர்ஜென்சி’ திரைப்படம் ஒரு வாழ்க்கை வரலாற்று படமல்ல என்றும், அரசியல் நிகழ்வுகளை மையமாகக் கொண்ட படம் என்றும் கங்கனா ரனவத் தெரிவித்துள்ளார். இப்படத்துக்கான திரைக்கதையை ரிதேஷ் ஷா எழுதுகிறார். இவர் ஏற்கெனவே ‘பிங்க்’, ‘கஹானி’ உள்ளிட்ட படங்களுக்கான திரைக்கதையை எழுதியுள்ளார்.

இந்தியில் பிஸியாகும் விஜய் சேதுபதி

’விக்ரம்’ படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த கையோடு, தனது இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

இந்தியில் வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.

இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் முடிவடைந்த நிலையில், கத்ரீனா கைஃப் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார். படத்தில் தமிழ் தொடர்புள்ள கதாபாத்திரங்களும் இடம்பெறுவதால்தான் கத்ரீனை கைஃப்பிற்கு தமிழ் பாடம் எடுத்திருக்கிறார்கள். கத்ரீனா கைஃப்பிற்கு தமிழ் டீச்சராக பாடமெடுத்தது பிரபல சின்னதிரை நடிகையும், டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான தீபா வெங்கட்.

மும்பையில் ஆரம்பித்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஒரு மாதம் வரை தொடரும் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப்புடன் சஞ்சய் கபூர், ராதிகா சரத்குமார் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

ஷங்கர் – ராம் சரண் தேஜா இணையும் ‘அதிகாரி’

ஷங்கர் முதல் முறையாக நேரடி தெலுங்குப் படமொன்றை இயக்குகிறார். இப்படத்தில் சீரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா கதாநாயகனாக நடிக்கிறார்.
பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஷூட்டிங் இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஷங்கருடன் இணையும் படமென்பதால், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் விழாவை பிரம்மாண்டமாக நடத்த வேண்டுமென ராம் சரண் விரும்புவதாக பேச்சு அடிப்படுகிறது. இப்படத்தில் ராம் சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், இதற்கு ‘அதிகாரி’ என்று பெயரிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...