No menu items!

World cup diary ; என்ன சாப்பிடுகிறார்கள் ஆட்டக்காரர்கள்?

World cup diary ; என்ன சாப்பிடுகிறார்கள் ஆட்டக்காரர்கள்?

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு ஒரு முக்கியமான விஷயம். சாதாரண மனிதர்களுக்கே சத்தான உணவு முக்கியம் எனும்போது விளையாட்டு வீர்ர்களுக்கு அது எந்த அளவுக்கு முக்கியமான விஷயம் என்பதை சொல்லத் தேவையில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முழு ஆற்றலுடன் ஆடவேண்டிய இந்திய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீர்ர்கள் தங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வோம்…

 “கிரிக்கெட் வீர்ர்களைப் பொறுத்தவரை வேக வைத்த அல்லது கிரில் (Grill) செய்யப்பட்ட கோழி, மீன் ஆகியவற்றைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள்” என்கிறார் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் எக்சிகியூட்டிவ் செஃப்பாக இருக்கும் அனுஷ்மான் பாலி. இந்த உலகக் கோப்பையில் சென்னையில் நடக்கும் போட்டிகளில் ஆடும் வீர்ர்களுக்கு பெரும்பாலும் லீலா பேலஸ் ஹோட்டலில்தான் உணவு தயாராகிறது.

ஐபிஎல் தொடர்களின்போது கிரிக்கெட் வீர்ர்கள் பெரும்பாலும் செஃப்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு தங்களுக்கு வேண்டிய உணவுகளை கேட்டு வாங்குவார்கள். ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அப்படி இல்லை. வீர்ர்கள் யாரும் ஹோட்டல் ஊழியர்களுடன் நேரடியாக பேச அனுமதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு அணிகளின் டயட்டீஷியன்கள்தான் தங்கள் வீர்ர்களுக்கு என்ன உணவு வேண்டும் என்பதைப் பற்றி ஹோட்டல் நிர்வாகத்திடம் பேசுகிறார்கள். அவர்கள் சொன்னபடி வீர்ர்களுக்கான உணவு தயாராகி வருகிறது.

“ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணி வீர்ர்களைப் பொறுத்தவரை காய்காறிகளை அதிகமாக தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். காய்கறிகளுடன் மீன், கோழி இறைச்சி போன்ற கொழுப்பு குறைந்த இறைச்சிகளை வேகவைத்தோ அல்லது வதக்கியோ தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக இருப்பதால் நியூஸிலாந்து அணி வீர்ர்களின் உணவில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுதானிய தோசை, இட்லி போன்றவை அவர்களின் சாப்பாட்டு மெனுவில் இடம்பெறுகின்றன” என்கிறார் அனுஷ்மான் பாலி.

 “இந்தியா, பாகிஸ்தான் வீர்ர்களின் உணவுமுறை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. பாகிஸ்தான் வீர்ர்கள் கிரில் செய்யப்பட்ட அசைவ உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள். சிக்கன் குருமா, சிக்கன் மகானி ஆகியவற்றை அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். மற்றபடி இரு அணி வீர்ர்களுக்கும் அரிசி சாதம்தான் பிடித்த உணவாக இருக்கிறது. இந்திய வீர்ர்களுக்கான உணவில் இந்த முறை கேழ்வரகு தோசை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது” என்கிறார் அனுஷ்மான்.

வீர்ர்கள் ஆதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளைப் பற்றி கேட்டால், “ஐபிஎல் போட்டிகளின்போதே பல வீர்ர்களுக்கு நாங்கள் உணவுகளை சமைத்துக் கொடுத்துள்ளோம். அதனால் ஒவ்வொரு வீர்ருக்கும் எது பிடிக்கும், எது பிடிக்காது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.  விராட் கோலியை பொறுத்தவரை சைவ உணவே அவரது முக்கிய தேர்வாக உள்ளது. அவர் அசைவத்தை முற்றிலுமாக தவிர்க்கிறார். வேகவைத்த காய்கறிகள், சோயா போன்றவை அவரது முக்கிய தேர்வாக உள்ளன. அவரது உணவில் பால் சார்ந்த பொருட்களை அதிகம் சேர்க்கிறோம். நியூஸிலாந்து வீரட் டெவான் கான்வாய்க்கு இந்திய உணவுகள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பரோடாவை அவர் விரும்பிச் சாப்பிடுவார். அதுபோல் காலை உணவுக்கு அவர் தோசையை தேர்ந்தெடுப்பார்.” என்கிறார் அனுஷ்மான்.

டெவான் கான்வாய் மற்றும் விராட் கோலிக்காக பார்த்துப் பார்த்து உணவைச் சமைக்கும் ஓட்டல் செஃப்கள் ஹர்த்திக் பாண்டியா, ரோஹித் சர்மா ஆகியோரைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. தங்களுக்கான உணவைச் சமைக்க, தங்களுடன் அவர்கள் தனி செஃப்களை அழைத்து வருவதே அதற்கு காரணம்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது வீர்ர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் மது தடை செய்யப்பட்டுள்ளதாம். தங்கள் ஆணி வெற்றிகளை பெறும்போது மட்டும் விருந்தில் மது அருந்த அவர்களுக்கு அனுமதி உண்டு என்று சொல்லப்படுகிறது.

ஒருவேளை இந்த தண்ணிப் பார்ட்டிக்காகத்தான் இந்திய வீர்ர்கள் அதிகம் ஜெயிக்கிறார்களோ?.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...