No menu items!

அகற்றப்பட்ட பாஜக கொடிக் கம்பம் – அண்ணாமலை வீட்டருகே நடந்த போராட்டம்!

அகற்றப்பட்ட பாஜக கொடிக் கம்பம் – அண்ணாமலை வீட்டருகே நடந்த போராட்டம்!

பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக தமிழ்நாட்டு பாஜகவும் சர்ச்சைகளும் இருக்கின்றன. நாள்தோறும் ஒரு சர்ச்சை. நேற்று நள்ளிரவு முதல் இன்று விடியல் ஒரு கொடி கம்பம் பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் பாஜகவினர் அது குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டருகே அமைக்கப்பட்ட 50 அடி உயர கொடி கம்பம்தான் இன்று பாஜகவினர் கையில் எடுத்திருக்கும் பிரச்சினை.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பனையூர் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு இருக்கிறது. நண்பர்களின் உதவியுடன் வாடகை கட்டி அங்கு வசித்து வரும் அண்ணாமலையின் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில், சுமார் 50 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை பாஜகவினர் அமைத்திருக்கிறார்கள். அந்த கொடிக்கம்பத்தில் இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கொடிக்கம்பத்தை அமைக்க நெடுஞ்சாலைத் துறையிடம் பாஜகவினர் முறையாக அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. தாங்கள் வசிக்கும் பகுதியில் இத்தனை உயர கொடிக்கம்பம் அமைக்கப்படுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் என்பது மட்டுமல்ல அந்த கொடி கம்பத்துக்கு அருகே ஒரு மசூதி இருப்பதும் அவர்கள் எதிர்ப்புக்கு காரணம்.

கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டது. அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.

அனுமதி இல்லை, புகார்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஆகிய காரணங்களுக்காக கொடி கம்பத்தை அகற்ற அதிகாரிகள் முற்பட்டனர். இதை அறிந்த பாஜகவினர் அங்கு குவிந்தார்கள்.

கொடிக்கம்பத்தை அங்கிருந்து அகற்றக் கூடாது என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடியை அகற்றக் கோரி ஒரு தரப்பினரும், அதை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பனையூரில் உள்ள அண்ணாமலையின் வீட்டருகே நேற்று இரவு நேரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தாம்பரம் மாநகர கமிஷனர் உள்ளிட்ட போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.. பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடுகளும் ஏற்படவில்லை. பிறகு, போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்களிடமும் பேச்சுவார்த்தையை நடத்தினர். ஆனால், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதால், அதை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்கு பிறகு, கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக போலீசார் ஜேபிசி வாகனத்தை வரவழைத்தனர். இந்த வாகனத்தை பார்த்த்தும் ஆத்திரமடைந்த பாஜகவினர் அதன் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் போலீஸாருக்கும், பாஜ்கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட்து. இந்த கைகலப்பில் சிலர் காயமடைந்த நிலையில் பாஜகவினர் வைத்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டதற்கு அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே கொடி கம்பம் அகற்றப்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

பாஜகவின் பரபரப்பு அரசியலுக்கு பனையூர் கொடிக் கம்பம் உதவியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...