No menu items!

பஞ்சாப்பை வெல்லுமா சிஎஸ்கே? என்ன செய்ய வேண்டும்?

பஞ்சாப்பை வெல்லுமா சிஎஸ்கே? என்ன செய்ய வேண்டும்?

ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டியில் நாளை (மே 5) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடவுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.

இந்த இரு அணிகளும் கடந்த 1-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இப்போட்டியில் சிஎஸ்கே அணி மிக எளிதாக வெற்றிபெறும் என்று கருதப்பட்ட நிலையில் அதிர்ச்சிகரமாக சிஎஸ்கே தோற்றது. இந்த சூழலில் நாளை நடக்கவுள்ள போட்டியில் மீண்டும் சிஎஸ்கே அணி பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெற சிஎஸ்கே அணி செய்யவேண்டிய விஷயங்கள்…

தேவை அதிரடியான தொடக்கம்:

இந்த ஐபிஎல்லில் மற்ற அணிகளெல்லாம் ப்ளே ஆஃப் சுற்றில் அதிரடியாக ரன்களைக் குவிக்க, சிஎஸ்கே அணியோ பழைய ஃபார்முலாபடி முதல் 6 ஓவர்களில் கொஞ்சம் நிதானமாகவே ஆடுகிறது. முதல் 10 ஓவர்களில் விக்கெட்டை காப்பற்றி, அடுத்த 10 ஓவர்களில் ரன்களைக் குவிப்பதுதான் சிஎஸ்கேவின் கேம் ப்ளானாக உள்ளது. மற்ற அணிகள் எல்லாம் 250 ரன்களைக் குவிக்க, சிஎஸ்கே அணி 200 ரன்களைக் கடக்கவே போராடுவதற்கு இதுதான் முக்கிய காரணம்.

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும், ருதுராஜும் களம் இறங்குகிறார்கள். இதில் ரஹானே கிட்டத்தட்ட டெஸ்ட் மேட்ச்சையே ஆடுகிறார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ், ஆரம்பத்தில் நிதானாமாக ஆடி கடைசியில் அதிரடி காட்டுகிறார். இந்த நிலை மாற, ரஹானேவை அணியில் இருந்து நீக்கிவிட்டு அதிரடியாக பேட்டிங் செய்யும் ரச்சின் ரவீந்திராவையோ அல்லது மொயின் அலியையோ தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும்.

பேட்டிங்கில் கவனம் தேவை:

இந்த ஐபிஎல்லைப் பொறுத்தவரை சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே ஆகிய இருவர் மீதுதான் அதிக சுமை இருக்கிறது. இந்த இரு வீர்ர்கள் மட்டுமே அதிக ரன்களைக் குவித்துள்ளனர். இந்த ஐபிஎல்லில் இதுவரை ருதுராஜ் கெய்க்வேட் 509 ரன்களையும், சிவம் துபே 350 ரன்களையும் குவித்துள்ளனர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் 200 ரன்களுக்கும் குறைவாகத்தான் அடித்திருக்கிறது. இது ருதுராஜ் மற்றும் சிவம் துபே மீதான சுமையை அதிகாமாக்குகிறது. இதைச் சரிசெய்ய டேரில் மிட்செல், தோனி, ஜடேஜா, மொயின் அலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை அதிரடி வேகத்தில் குவிக்க வேண்டும்.

பவர் ப்ளேவில் விக்கெட்கள்:

பவர் ப்ளே என்று சொல்லப்படும் முதல் 6 ஓவர்களில் சிஎஸ்கே அணி குறைந்த அளவிலேயே விக்கெட்களை எடுத்துள்ளது. இது எதிரணியினர் அதிக ரன்களைக் குவிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதைச் சரிசெய்ய பவர் ப்ளே நேரத்திலேயே குறைந்தபட்சம் 2 விக்கெட்களையாவது எடுக்க வேண்டும்.

செண்டிமெண்ட்கள் போதும்:

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை செண்டிமெண்டுக்காகவே சில வீர்ர்களுக்கு ஆதிக வாய்ப்புகளை கொடுக்கிறார்கள். ரஹானே, முகேஷ் சவுத்ரி என்று இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஜடேஜாகூட இந்த தொடரில் சொதப்பி வருகிறார். வெற்றி தேவையென்றால் இந்த செண்டிமெண்ட்களை தூக்கி வீச வேண்டும். சரியாக ஆடாத வீர்ர்களை தூக்கியடித்து ஹங்கர்கேகர், சிம்ரஞ்சித் சிங், ரச்சின் ரவீந்திரா என சாதிக்க துடிக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவேண்டும்.

இதையெல்லாம் செய்தால்தான் சிஎஸ்கே அணியால் பஞ்சாப் அணியை வெல்ல முடியும். இல்லாவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு குட்பை சொல்ல வேண்டியதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...