No menu items!

Wow Weekend OTT- யில் என்ன பார்க்கலாம்

Wow Weekend OTT- யில் என்ன பார்க்கலாம்

ஜான்சி – தமிழ்,தெலுங்கு (டிஸ்னி ஹாட்ஸ்டார்)

காட்டில் நடக்கும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் தன் நினைவை இழக்கிறார் மஹிதா. இந்த சம்பவத்துக்கு பிறகு ஜான்சி என்ற பெயரில் நகரில் வசிக்கும் அவளுக்கு அடிக்கடி தன் கடந்த காலத்தைப் பற்றிய சில நினைவுகள் கனவுகளாக வந்து போகின்றன. ஒரு கட்டத்தில் தனது கடந்த காலத்தை தேடிப் புறப்படுகிராள் அஞ்சலி. அப்போது அவள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவற்றை அவர் எப்படி சமாளித்தார் என்பதையும் சொல்லும் கதைதான் ஜான்சி.

மஹிதா, ஜான்சி என இரு குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் அஞ்சலி. ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கான இந்த வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் – தமிழ் (அமேசான் பிரைம்)

ராஜராஜ சோழன் மற்றும் சோழப் பேரரைசை அடிப்படையாகக் கொண்டு அமரர் கல்கி எழுதிய பிரம்மாண்ட நாவல் பொன்னியின் செல்வன். இக்கதை எழுதப்பட்ட காலத்தில் இருந்தே வெள்ளித்திரையில் இதை படமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படமாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முடியாமல் போன இப்படத்தை மணிரத்னம் தனது கனவுப் படமாகஉருவாக்கி கடந்த செப்டம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியிட்டார்.

உலகளாவிய அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இப்படம் இப்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. பலரும் படித்த கதைதான் என்றாலும் அதைப் படமாக்கிய விதத்தில், விஷூவல் ஆச்சரியத்தைக் கொட்டிய வகையில், ஒரு மெகா பிரம்மாண்டத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார், மணிரத்னம். அதேபோல் மக்கள் மனதில் பதிந்த வந்தியத் தேவன், அருள்மொழி வர்மன்,, ஆதித்த கரிகாலன், குந்தவை, நந்தினி போன்ற கதாபாத்திரங்களை கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திரங்களும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். திரையரங்குக்கு சென்று இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் வீட்டிலேயே இப்படத்தை பார்க்கும் வாய்ப்பை அமேசான் பிரைம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

காந்தி மர்டர் – இந்தி (ஜீ5)

மகாத்மா காந்தியின் படுகொலையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்களின் வரிசையில் லேட்டஸ்டாக இனைந்துள்ள படம்தான் காந்தி மர்டர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை, காந்தியின் படுகொலை என பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கரீம் டிரைடியா, பங்கஜ் ஷெகால் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தை தமிழிலும் பார்க்கலாம். வரலாற்றுப் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் இது.

All quiet on the western front – ஆங்கிலம் (நெட்பிளிக்ஸ்)

முதலாம் உலகப் போரை அடிப்படையாகக் கொண்ட படம்தான் All quiet on the western front. எரிக் மரியா ரெமார்க்யூ என்பற எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞனான பால் தனது நண்பர்களுடன் இணைந்து ராணுவத்தில் சேர்கிறான். அங்கு பதுங்கு குழிகளில் அவன் எதிர்கொள்ளும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நெப்பிளிக்ஸ் ஓடிடியில் இப்படம் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...