No menu items!

weekend ott – என்ன படம் பார்க்கலாம்?

weekend ott – என்ன படம் பார்க்கலாம்?

செங்களம் (தமிழ் வெப் சீரிஸ்) – ஜீ5

ஜீ5 ஓடிடி தளத்தில் புதிதாக வெளியாகியிருக்கும் தமிழ் வெப் சீரிஸ் செங்களம். கலையரசன், வாணி போஜன், வேல ராமமூர்த்தி, பகவதி பெருமாள், பிரேம், டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப் தொடரை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களை இயக்கியவர்.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைப் பிடிக்க நடக்கும் போட்டியை அடிப்படையாக வைத்து இந்த தொடரை எடுத்துள்ளனர். இதில் வரும் பல காட்சிகள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நிகழ்ந்த சில அரசியல் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. அரசியல் சார்ந்த கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற வீக் எண்ட் டிரீட் இது.


புருஷ பிரேதம் (மலையாளம்) – சோனி லைவ்

ஒரு அனாதை பிணத்தை வைத்துக்கொண்டு காமெடியும் க்ரைமும் சேர்ந்து சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ள படம்தான் புருஷ பிரேதம்.

ஆற்றில் ஒரு ஆணின் உடல் மிதந்து வருகிறது. போலீஸார் அதைக் கைப்பற்றி மார்ச்சுவரியில் வைக்கிறார்கள். ஆனால் சில நெருக்கடிகளால் 7 நாட்களுக்கு பதில் 3 நாட்களிலேயே அந்த உடலை புதைத்துவிடுகிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த உடல் தன் கணவருடையது என்று சொல்லி ஒரு பெண் வருகிறார். ஆனால் போலீஸார் உடலைப் புதைத்த இடத்தை மறந்துவிடுகிறார்கள்.

உடலுக்கு சொந்தம் கொண்டாடும் பெண் கோர்ட்டில் உடலை ஒப்படைக்கக் கோரி ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ மனு போடுகிறார். சம்பந்தப்பட்ட போலீஸார் சஸ்பெண்ட் ஆகிறார்கள். வேலை மீண்டும் கிடைக்க உடலை தேடுகிறார்கள். இப்படி செல்லும் கதையில் கொஞ்சம் டார்க் காமெடியையும் க்ளைமேக்ஸில் கொஞ்சம் ட்விஸ்டையும் தூவிக் கொடுத்திருக்கிறார்கள்.

மலையாள சினிமா ரசிகர்கள் மிஸ் செய்யக்கூடாத படம் இது.


பாஹிரா (தமிழ்) – சன் நெக்ஸ்ட்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, நாசர், ரம்யா நம்பீசன், அமீரா தஸ்தூர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாஹிரா, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

சிவப்பு ரோஜாக்கள், மன்மதன், நான் அவனில்லை டைப் படங்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அடித்து ஜூஸாக்கி, அதை ஒரு டம்ளரில் எடுத்ததுபோல் இருக்கிறது படம். ஆண்களை ஏமாற்றும் பெண்களை கரடி பொம்மையை வைத்துக்கொண்டு ஒருவர் தொடர்ச்சியாக கொலை செய்கிறார். மறுபுறம் பிரபுதேவா பல பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார். அந்த கொலைகாரன் யார். அவனுக்கும் பிரபுதேவாவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதை.

பலவீனமான கதையைக் கொண்ட இப்படத்தில் பிரபுதேவாதான் ஒரே ஆறுதல்.


caught out crime corruption cricket (ஆங்கிலம்) – நெட்பிளிக்ஸ்

நாடெங்கும் ஐபிஎல் ஜுரத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க, இதே கிரிக்கெட் உலகில் நடந்த பெட்டிங் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் எடுக்கப்பட்ட caught out crime corruption cricket என்ற டாக்குமெண்டரி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை 2000-ம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டு. அந்த ஆண்டுவரை கிரிக்கெட்டை ஜெண்டில்மேன்களின் ஆட்டம் என்று எல்லோரும் சொல்லி வந்தனர். ஆனால் 2000-ல் வெளியான மேட்ச் பிக்ஸிங் விவகாரம் பல கிரிக்கெட் வீரர்களின் முகத்திரையைக் கிழித்தது.

அசாருதீன், அஜய் ஜடேஜா, ஹன்சி குரோனி, மனோஜ் பிரபாகர் என பல கிரிக்கெட் பிரபலங்கள் இந்த புயலில் சிக்கி காணாமல் போனார்கள். அப்போது என்ன நடந்தது என்பதைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறது இந்த டாக்குமெண்டரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...