No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

தண்டட்டி (தமிழ்) – அமேசான் ப்ரைம்

அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யா இயக்கத்தில் பசுபதி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்த ‘தண்டட்டி’ திரைப்படம், இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

கிடாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ரோகிணி திடீரென காணாமல் போகிறார். விவகாரமான அந்த ஊருக்குச் செல்ல மற்ற போலீஸ்காரர்கள் மறுக்க, புதிதாக அந்த ஸ்டேஷனுக்கு மாற்றலாகிச் சென்ற பசுபதி அந்த பணியை ஏற்கிறார். ரோகிணியை கண்டுபிடிக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் இறந்து போகிறார். ரோகிணியின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருக்க, அவரது 4 மகள்களும் மகனும் அவர் காதில் மாட்டியிருக்கும் தண்டட்டியை கைப்பற்ற தனித்தனியாகத் திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் திடீரென தண்டட்டி காணாமல் போகிறது. அதைத் திருடியது யார்? போலீஸ்கார்ரான பசுபதி அதைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.

நகைச்சுவை சார்ந்த கிராமத்து கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.


janaki jaane (ஜானகி ஜானே – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்

பல ஆண்டுகளுக்குப் பிறகு நவ்யா நாயர் நாயகியாக நடித்துள்ள மலையாளப் படம் ‘ஜானகி ஜானே’ இப்போது டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்பட்த்தில் நவ்யா நாயருடன் சாய்ஜு குருப், ஷரப்புதீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இருட்டைக் கண்டால் பயப்படும் மனநோய் உள்ள பெண்ணாக நவ்யா நாயர் நடித்துள்ளார். அவருடைய இந்த பயத்தால் ஒரு திருமண நிகழ்ச்சியின்போது கரண்ட் கட்டாக பயத்தில் தனது கணவர் என்று நினைத்து பக்கத்தில் இருக்கும் ஒரு அரசியல்வாதியை கட்டிப் பிடிக்கிறார். அந்த நேரத்தில் கரண்ட் வர, எல்லோரும் அரசியல்வாதிக்கும், நவ்யா நாயருக்கும் இடையே உறவு இருப்பதாக சந்தேகிக்கிறார்கள். இதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஆரம்பத்தில் காமெடியாக தொடங்கும் இப்படம் போகப் போக சீரியஸ் மோடில் செல்கிறது. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம் இது.


காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் (தமிழ்) – ஜீ5

முத்தையாவின் இயக்கத்தில் ஆர்யா, பிரபு, சித்தி இதானி நடித்துள்ள ‘காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ திரைப்படம் இப்போது ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.

நாயகி சித்தி இதானியை திருமணம் செய்து அவரது சொத்துகளை கைப்பற்ற முறை மாமன்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த சூழலில் சிறையில் இருக்கும் ஆர்யாவைப் பார்க்க போகிறார் சித்தி இதானி. அவர் தனது அத்தை மகள் என்று தெரிந்துகொள்கிறார் ஆர்யா. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்க, முறை மாமன்கள் எதிர்க்கிறார்கள். இதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

கிராமத்து ஆக்‌ஷன் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படமாக இது இருக்கும்.


அர்னால்ட் (ஆங்கில டாக்குசீரியல்) – நெட்பிளிக்ஸ்

நம் ஊருக்கு ரஜினிகாந்த் எப்படியோ, ஹாலிவுட்டில் அர்னால்ட் அப்படி. ஹாலிவுட்டின் நம்பர் ஒன் ஆக்‌ஷன் ஹீரோவான அர்னால்டின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய ஆவணப் படத் தொடரை வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ்.

ஆணழகனாக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தது, சினிமாவில் படைத்த சாதனைகள், அரசியல் பயணம் என்று அர்னால்டின் வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்களை அவர் மூலமாக இந்த டாக்குமெண்டரி தொடர் சொல்கிறது.

இதைப் பார்க்கும்போது, நம்ம ஊர் நாயகர்களை வைத்து இதேபோன்ற தொடர்கள் வந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...