No menu items!

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

குஷி ( Kushi – தெலுங்கு) – நெட்பிளிக்ஸ்

சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது.

நாத்திகவாதியின் மகன் விஜய் தேவரகொண்டாவும், ஆத்திகவாதியின் மகள் சமந்தாவும் காதலிக்கிறார்கள். ஜாதகத்தால் அவர்களின் திருமண விஷயத்தில் பெற்றோருக்குள் சண்டை ஏற்பட, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு அவர்களின் உறவில் விரிசல் ஏற்படுகிறது. இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த பிரிவைக் கடந்து அவர்கள் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் இப்படத்தின் கதை.

உணர்ச்சிபூர்வமான காதல் கதையை விரும்புபவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.


கிங் ஆஃப் கொத்தா (King of Kotha – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்

நியூடெல்லி, லேலம், ஏர்போர்ட் உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் படம் ‘கிங் ஆஃப் கொத்தா’.

நம் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மாரி’ படத்தின் சாயல் ‘கிங் ஆஃப் கொத்தா’வில் ஆங்காங்கே தெரிகிறது. ‘கொத்தா’ நகரில் எல்லோருக்கும் பிடித்த தாதாவாக இருக்கிறார் துல்கர் சல்மான். இடைப்பட்ட நேரத்தில் காதலியும், நண்பனும் அவரை ஏமாற்ற நொறுங்கிப் போகிறார். இதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான துல்கர், ஒரு கட்டத்தில் அம்மாவின் கட்டாயத்தால் ஊரை விட்டு செல்கிறார்.

துல்கர் ஊரை விட்டுச் சென்றபின், அவரது நண்பரின் கைக்குள் கொத்தா நகரம் செல்கிறது. ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் போதைப் பழக்கத்துக்கு அடிமைப்படுத்தி, ஊரையே அடிமையாக வைத்துக்கொள்கிறார் அந்த நண்பர். இந்த சூழலில் கொத்தாவை அவரிடம் இருந்து மீட்க, துல்கரை மீண்டும் கொத்தாவுக்கு வரவழைக்கிறார்கள் போலீஸார். கொத்தாவை அவர் மீட்டாரா என்பதுதான் கதை.

ஜோஷியைப் போலவே தன்னாலும் விறுவிறுப்பாக கதை சொல்ல முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் அவர் மகன் அபிலாஷ் ஜோஷி.


ஹாஸ்டல் ஹுடுகாரு பெகாகிடாரே (Hostel Hudugaru Bekagiddare – கன்னடம்) – ஜீ5

அறிமுக இயக்குநரான நிதின் கிருஷ்ணமூர்த்தி, புதுமுக நடிகர்களை வைத்து எடுத்திருக்கும் படம் ஹாஸ்டல் ஹுடுகாரு பெகாகிடாரே.

ஹாஸ்டல் வார்டன் ஒருவர், தற்கொலை செய்துகொள்கிறார். அப்படி தற்கொலை செய்துகொள்ளும்போது அதற்கு காரணம் என்று சில மாணவர்களின் பெயரை எழுதிவைக்கிறார். அப்படி அவரால் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள், அந்த உடலை மறைக்க எடுக்கும் முயற்சிகளை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள்.

தமிழில் மொழிமாற்றம் செய்திருந்தால் இப்படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.


லக்கிமேன் (தமிழ்) – அமேசான் ப்ரைம்

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, ரேச்சல் ரெபாக்கா, வீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள லக்கிமேன் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

அதிர்ஷ்டமில்லாதவர் என்று கூறி சிறு வயதில் இருந்தே எல்லோராலும் ஒதுக்கப்படுபவர் யோகிபாபு. ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு சீட்டுக் கம்பெனியின் குலுக்கலில் கார் பரிசாகக் கிடைக்கிறது. கார் வந்த்தும் அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக பல மாற்றங்கள் நடக்கின்றன. எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருக்கும்போது அவரது கார் திருடுபோகிறது.

கார் திரும்பக் கிடைதத்தா? யோகியின் வாழ்க்கை பழையபடி மகிழ்ச்சியாக இருந்ததா என்பதுதான் இப்படத்தின் கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...