No menu items!

விராத் கோலி Vs கவுதம் கம்பீர் – சண்டை ஏன்?

விராத் கோலி Vs கவுதம் கம்பீர் – சண்டை ஏன்?

ஆர்.சி.பி. என்று செல்லமாய் அழைக்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ்க்கும்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் நேற்று லக்னோ மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடந்தது.

குறைந்த ரன்களே எடுக்கப்பட்ட அந்தப் போட்டியில் ஆர்.சி.பி வெற்றிப் பெற்றது.

ஆனால் அது செய்தி அல்ல.

விராத் கோலியும் கவுதம் கம்பீரும் போட்ட சண்டைதான் தலைப்பு செய்தி.

கிட்டத்தட்ட கைகலப்புதான். அருகிலிருந்த மற்ற ஆட்டக்காரர்கள் தடுக்காவிட்டால் இருவரும் ஸ்கூல் பையன்கள் போல் மைதானத்தில் கட்டிப் புரண்டு சண்டை போட்டிருப்பார்கள்.

இந்தியாவின் இரண்டு மூத்த, முக்கியமான வீரர்கள் மைதானத்தில் இது போன்று ஆக்ரோஷமாக மோதிக் கொண்டது இதுதான் முதல் முறை.

என்ன நடந்தது?

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய ஆர்.சி.பி.அணி 20 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்தது. அடுத்து லக்னோ அணி பேட்டிங் செய்ய வந்தது.  குறைந்த ரன்கள்தானே எளிதில் எடுத்துவிடலாம் என்று ஆட வந்த லக்னோவுக்கு அடித்து ஆட முடியவில்லை. 108 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றுப் போனது.

ஆட்டம் நடந்துக் கொண்டிருந்தபோது ஆப்கானிஸ்தான் ஆட்டக்காரர் நவீன் உல் ஹக்குக்கும் விராத் கோலிக்கும்  இடையே சண்டை வந்தது.

இருவரும் பிட்ச் அருகே காரசாரமாக பேசிக் கொண்டார்கள். அவர்களை லக்னோ பேட்ஸ்மேன் அமித் மிஸ்ராதான் விலக்கி விட்டார்.

எதற்காக சண்டை என்பது இப்போது வரை வெளிவரவில்லை.

நவீன் உல் ஹக் ஆப்கானிஸ்தான் ஆட்டக்காரர்.  23 வயது. அவரை ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்து லக்னோ அணி. இவர்தான் பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளி.

போட்டியில் ஆர்.சி.பி. வெற்றிப் பெற்றதும் ஆர்.சி.பி. ஆட்டக்காரர்களின் கொண்டாட்டம் இந்த முறை மிக அதிகமாக இருந்தது.

சில நாட்களுக்கு முன் பெங்களூரில் நடந்த போட்டியில் ஆர்.சி.பியை லக்னோ அணி வென்றது. இப்போது பழிக்குப் பழி வாங்கியிருக்கிறது.

ஆட்டம் முடிந்ததும் ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டிருக்க நவீன் மட்டும் விராத்துடன் கை கொடுக்க மறுத்திருக்கிறார்.

மீண்டும் அங்கு சண்டை உருவாகியது. இந்த சண்டைக்குள் லக்னோ அணியின் வழி காட்டி என்ற பொறுப்பில் இருக்கும் கவுதம் கம்பீரு நுழைந்தார். விராத் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவர் வாக்குவாதமும் முற்றிய நிலையில் இரு அணி ஆட்டக்காரர்களும் இருவரையும் விலக்கிவிட்டார். விலக்கிவிடாவிட்டால் நிச்சயம் கைகலப்பில் முடிந்திருக்கும்.

ஏன் இருவருக்கும் இத்தனை கோபம். இருவரும் இந்திய அணியில் ஒன்றாய் விளையாடியவர்கள். என்ன காரணம்?

பெங்களூருவில் நடந்த போட்டியின்போது ஆர்.சி.பி தோற்றதும் லக்னோ அணியினர் ஆர்.சி.பி.அணியினரை அதிகமாக கிண்டல் செய்துவிட்டார்கள். அதற்கு பழிவாங்கும் விதமாகதான் இந்த முறை ஆர்சிபி வென்றது மிக அதிக அளவில் கொண்டாடி பழி தீர்க்க முற்பட்டனர். இது காம்பீருக்குப் பிடிக்கவில்லை என்பதால் வாக்கு வாதமாய் மாறியிருக்கிறது.

இல்லை, இல்லை.. இருவருக்கும் ஏற்கனவே பகை இருந்தது. அது இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்ற கருத்தும் எழுந்துள்ளது. 2014-15ல் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் காப்டனாக இருந்தபோது காம்பீருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அப்போதிருந்தே இருவருக்கும் சண்டை என்று கூறுகிறார்கள்.

இருவருக்கும் 100 சதவீத ஆட்டக் கட்டினத்தை அபராதமாக விதித்திருக்கிறது ஐபிஎல் நிர்வாகம். நவீனுக்கு 50 சதவீத அபராதம்.

இந்திய அணியில் இருக்கும் உள் அரசியலை இந்த சண்டை வெளிப்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...