No menu items!

கேஜிஎஃப் பின்னணியில் மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன்!

கேஜிஎஃப் பின்னணியில் மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன்!

‘பொல்லாதவன்’. ‘ஆடுகளம்’, வட சென்னை’, ‘அசுரன்’ இந்த நான்குப் படங்களின் இயக்குநர் வெற்றிமாறன். கதாநாயகன் தனுஷ். அடுத்து தனுஷ் தயாரித்த ‘விசாரணை’ படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்.

இப்படி தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி இணைந்த படங்கள் விருதுகளையும், நல்ல விமர்சனங்களையும் அள்ளிக்குவித்திருக்கின்றன.

இந்த சூழலில் வெற்றிமாறன் – தனுஷ் மீண்டும் இணைய இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

கன்னட சினிமாவை இந்தியா முழுவதிலும் திரும்பிப் பார்க்க வைத்த கேஜிஎஃப் திரைப்படங்களுக்குப் பிறகு, அந்த தங்க சுரங்கம் இப்போது பரபரப்பான களமாகி இருக்கிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இப்போது ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதைப் போலவே தங்க சுரங்கத்தின் பின்னணியில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி அடுத்தப் பட வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.

தனுஷூக்கும், வெற்றிமாறனுக்கும் அடுத்தடுத்து பல கமிட்மெண்ட்கள் இருப்பதால், இந்தப் படம் எப்போது முடிவாகும் என்பது தெரியவில்லை. ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.


அட்லீயின் ’ஜவான்’ கமல் படத்தின் உல்டாவா?

நடிக்க வந்து பல வருடங்கள் ஆன பின்பு, திருமணமும் முடிந்த பின்பே நயன்தாரா பாலிவுட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

முதல் படமே, மிக சுலபமாக பாலிவுட்டில் தனக்கென மார்க்கெட்டை உருவாக்க உதவும் வகையில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் ‘ஜவான்’ வாய்ப்பு கிடைத்திருப்பதால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா.

’ஜவான்’ வருகிற ஜூன் 2-ம் தேதி ரிலீஸ் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சு அடிப்படுகிறது. ஆனால் நயன்தாரா மும்பையில் யாஷ் ராஜ் ஸ்டூடியோவுக்கு போய் டப்பிங் பேசி வருகிறார்.

நயன்தாரா டப்பிங் பேசிய சூழலில் இப்போது ஒரு புதிய பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

பழைய படங்களை தேடிப்பிடித்து, அவற்றை அப்படியே புத்தம் புதிதாக இன்றைக்குள்ள ட்ரெண்ட்டில் எடுப்பதில் கில்லாடி என பெயர் பெற்ற அட்லீ, இந்த முறை கமல்ஹாசன் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்தினால் ஈர்க்கப்பட்டு ‘ஜவான்’ திரைக்கதையை வடிவமைத்து இருக்கிறார் என்று கிசுகிசு உலா வர ஆரம்பித்திருக்கிறது.

1985-ல் வெளியான க்ரைம் த்ரில்லர் ‘ஒரு கைதியின் டைரி’. இப்படத்தை பாரதிராஜா இயக்கி இருக்கிறார். இதன் திரைக்கதையை பாரதிராஜாவுடன் சேர்ந்து கே . பாக்யராஜ் எழுதியிருக்கிறார்.


சமந்தா, தமன்னா, பூஜா ஹெக்டேவை ஓரங்கட்டிய ராஷ்மிகா!

சுள்ளென்று வெயில் வெளுத்துவாங்க, திடீரென வருண பகவான் எண்ட்ரீ கொடுக்க வானிலை நிலவரம் கலவரமாகி இருக்கிறது.

இதேபோல் சமூக ஊடகத்தில் ஃபாலோயர்களின் அலம்பல்களால் அங்கும் ஏகப்பட்ட மாற்றங்கள். இப்போது யாருக்கு ஃபாலோயர்கள் அதிகம் என்பதில் கடும்போட்டி நிலவுகிறது

சமந்தா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால் பூஜா ஹெக்டே என சமூக ஊடகத்தில் பொழுதைக் கழிக்கும் நடிகைகளின் பட்டியல் இன்று நீண்டு கொண்டே போகிறது. இதில் சமந்தா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால் இவர்கள் மூவரும் அடிக்கடி ஏதாவது ஒரு ரீல் அல்லது புகைப்படங்களை ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு ஃபாலோயர்கள் அதிகம் இருந்தனர்.

ஆனால் இப்போது நிலைமை தலைக்கீழ். சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே ‘நேஷனல் க்ரஷ்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிக மந்தானாவுக்கு எக்கச்சக்க மவுசு.

சமூக ஊடகத்தில் குறிப்பாக இன்ஸ்டாக்ராமில் சமந்தாவுக்கு 26 மில்லியன் இருக்கிறார்கள். இவருக்கு அடுத்து காஜல் அகர்வாலுக்கு 25 மில்லியன் ஃபாலோயர்களும், பூஜா ஹெக்டேவுக்கு 23 மில்லியன் ஃபாலோயர்களும் இருக்கிறார்கள். ரகுல் ப்ரீத்சிங், ஷ்ருதி, தமன்னா என இவர்களுக்கு முறையே 23 மில்லியன், 22 மில்லியன், 20 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

இந்த நடிகைகளுடன் ஒப்பிடும் போது லேட்டாக எண்ட்ரீ கொடுத்த ராஷ்மிகா மந்தானாவுக்கு இப்போது 38 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். ’புஷ்பா’ படத்திற்கு பிறகு ஹிந்திக்குப் போன ராஷ்மிகா அங்கே ஃப்ளாப்கள் கொடுத்தாலும் கூட இவருக்கு மவுசு எகிறிக்கொண்டே போகிறது.

இதே வேகத்தில் போனால், புஷ்பா 2 ரிலீஸூக்கு பிறகு ராஷ்மிகாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 மில்லியனை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே பாலிவுட்டில் கொடிக்கட்டிப் பறக்கும் திபீகா படுகோன், ஆலியா பட் என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்களையும் ராஷ்மிகா ஓரங்கட்டி விடுவார் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...