No menu items!

5 மருத்துவர்களை பலி வாங்கிய கள்ளக் கடல்- கன்னியாகுமரி பயங்கரம்!

5 மருத்துவர்களை பலி வாங்கிய கள்ளக் கடல்- கன்னியாகுமரி பயங்கரம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு கள்ளக்கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காற்றின் போக்கு காரணமாக கடல் அலைகள் அளவுக்கு அதிகமாக ஆர்ப்பரிக்கும் என்றும். 2 மீட்டர் வரை அலைகளின் உயரம் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலைக்கு கள்ளக் கடல் என்று பெயரிடப்பட்டிருந்தது.

கள்ளக்கடல் என்றால் என்ன?

கடலோர வெள்ளம் என்று அழைக்கப்படும் கள்ளக்கடல், பொதுவாக இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் அலைகள் வீசுவதால் பருவமழைக்கு முந்தைய பருவத்தில் (ஏப்ரல்-மே ) நிகழ்கிறது. மலையாளத்தில் , கள்ளன் என்றால் திருடன் என்றும், கடல் என்றால் கடல் என்றும் பொருள்படும், எனவே இந்த சொல் “திருடனாக வரும் கடல்” என்பதைக் குறிக்கிறது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) 2012 இல் அதிகாரப்பூர்வமாக இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டது. கள்ளக்கடல் எந்தவித முன்னோடிகளோ அல்லது உள்ளூர் காற்றின் செயல்பாடுகளோ இல்லாமல் திடீரென நிகழ்கிறது, இது கடலோர மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளைப் பெறுவதற்கு சவாலாக உள்ளது. இருந்தாலும் கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS ) ஸ்வெல் சர்ஜ் முன்னறிவிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது, இது ஏழு நாட்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கையை வழங்குகிறது.

பயிற்சி மருத்துவர்கள்

வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதன் ஆபத்தை உணராத சிலர், கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுவதை வேடிக்கை பார்ப்பதற்காக பல இடங்களில் மக்கள் கடற்கரைக்கு சென்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு திருச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு முடித்து, பயிற்சி மருத்துவர்களாக இருக்கும் 8 பேர் நேற்று சென்றனர். கடலில் உள்ள ஆபத்தை அறியாமல் அவர்கள் கடல் அலையில் விளையாடினர். அப்போது ஒரு ராட்சத அலையில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதில், பயிற்சி மருத்துவர்களான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த சார்கவி (24), நெய்வேலியை சேர்ந்த காயத்ரி (25), சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் (25), ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரவின்ஷாம் (23), கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையை சேர்ந்த சார்வதர்ஷித் (24) ஆகிய 5 பேரையும் கடல் அலைஇழுத்துச் சென்றது. கரையில் இருந்த அவர்கலின் 3 நண்பர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்த மீனவர்களை உதவிக்கு அழைத்த அவர்கள், நண்பர்களை அலை இழுத்துச் சென்ற அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடலில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் 5 பேரும் மயங்கிய நிலையில் கடற்கரையில் ஒதுங்கினர். அங்கிருந்த மீனவர்கள், பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 5 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கள்ளக் கடல் காரணமாக பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த நிலையில் குமரி தவிர மற்ற கடற்கரை பகுதிகளில் போதிய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் கடற்கரையில் காவலுக்கு நின்ற காவல்காரர் தடுத்தும் மாணவர்கள் வேறு ஒரு வழியில் கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

தற்போது பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு, லெமூர் கடற்கரை நுழைவுவாயில் அடைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...