No menu items!

Shriya saran ரீஎண்ட்ரி

Shriya saran ரீஎண்ட்ரி

கோலிவுட்டில் முன்பெல்லாம் வாய்ப்பு தேடும் நடிகைகள் போட்டோ ஷூட் வைத்து கவர்ச்சி போட்டோகளை எடுத்து, ஆல்பம் போட்டு, அதை கையிலெடுத்துகொண்டு ஒரு ரவுண்ட் அடிப்பார்கள். இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் நேரில் போய் பார்த்து தங்களது ஆல்பத்தை விரிப்பார்கள்.

அதிர்ஷ்டம் இருந்தால் அந்த முயற்சி க்ளிக் ஆகும். வாய்ப்புகள் கிடைக்கும்.

2000-களுக்குப் பிறகு இந்த கலாச்சாரமே இல்லாமல் போனது.

இடையில் காணாமல் போன இந்த கான்செப்ட் இப்போது டிஜிட்டல் வடிவில் கைக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

டாய்லெட்டுக்கு போனால் கூட அதற்கு முன்பு ஒரு க்ளிக் செய்து ’இப்போதுதான் நிம்மதி’ என்பது போன்ற கமெண்ட்களுடன் சமூக ஊடகங்களில் ஏற்றிவிடுவது ஒரு வியாதியைப் போல பெரும்பாலான நட்சத்திரங்களிடம் தொற்றிக் கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு இப்படிப்பட்ட ஜாக்பாட் ஸ்ரேயா அடித்திருக்கிறது.

திருமணமானதும் தனது ஃபாரின் கணவருடன் வெளியே செல்லும் தருணங்களையும், குழந்தையுடன் பிகினியில் கடலில் குளிப்பதையும் போட்டோக்களாகவும், வீடியோக்களாகவும் சமூக ஊடகங்களில் ஏற்றிய ஸ்ரேயாவுக்கு அதைப் பார்த்து இப்போது கைவசம் நான்குப் படங்கள்.

திருமணமான பின்பும், குழந்தைப் பெற்ற பின்பும் கூட இப்படி கச்சிதமாக இருக்கிறாரே என்ற அந்த கமெண்ட்கள்தான் புதிய பட வாய்ப்புகளுக்கும் ரீஎண்ட்ரிக்கும் காரணம் என்கிறது அவரது மேனேஜர் வட்டாரம். திருமணமானால் மார்கெட் போகும் என்ற விதியை மாற்றிய பெருமையும் இப்போது ஸ்ரேயாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

மீண்டும் ஓட்டமெடுக்கும் Sivakarthikeyan -ன் மாவீரன்

எத்தனை வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும், ஒரேயொரு ப்ளாப் படத்தை கொடுத்துவிட்டால் போதும் பிரம்மாண்டமான வெற்றிகள் எல்லாமே வரலாறு ஆகிவிடும்.

இந்த வகை சிக்கலில் மாட்டித் தவித்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

எல்லாமே நன்றாக போய் கொண்டிருந்த வேளையில்தான், தெலுங்கு மார்க்கெட்டை குறிவைத்து அங்கே ஹிட் கொடுத்த இயக்குநரை வைத்து தமிழ் மற்றும் தெலுங்குப் படமாக ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்.

படத்தில் நடித்த நட்சத்திரங்களில் பெரும்பாலானோர் தமிழ் நட்சத்திரங்கள். அதனால் தெலுங்கு சினிமாவில் இப்படம் எடுப்படாமலேயே போனது.

இங்கே இயக்குநர் கொஞ்சம் தெலுங்கு டச்சில் படத்தை கொடுத்ததால் எதிர்பார்த்த ஹிட் இல்லாமல் போனது.

இதன் பாதிப்பு சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ஷூட்டிங்கில் சுனாமியாக வந்து போயிருக்கிறது.

பரபரப்பாக தொடங்கிய ஷூட்டிங் படபடப்புடன் சில நாட்களிலேயே நின்று போனது.

கதை, காட்சிகளில் சில மாற்றங்களை வையுங்கள் என்று எஸ்.கே. கேட்டதாகவும் ஆனால் இயக்குநர் மடோன் அஸ்வின் உங்கள் விருப்பப்படி மாற்றமுடியாது. அப்படி செய்தால் என் ஸ்கிரிப்ட் கான்செப்ட் மாறிவிடும் என நாசூக்காக தவிர்த்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

இதனால் எஸ்.கே அப்செட் ஆக ஷூட்டிங் பேக்கப்பில் முடிந்திருக்கிறது.

இந்த செய்தி வெளியாக ஆரம்பித்ததுமே, தயாரிப்பாளர் தரப்பில் சமரச முயற்சிகள் நடந்ததாக சொல்கிறார்கள்.

’மாவீரன்’ ஷூட்டிங்கில் ப்ரேக் ஏற்பட காரணம் சென்னை மழைதான். அதனால் மழை கொஞ்சம் செட்டிலானதும் ஷூட்டிங்கை தொடங்குவோம் என்பது போன்ற தகவல் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிவந்தது.

இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்பொழுது மீண்டும் மாவீரன் ஷூட்டிங் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வர ஒரு முக்கியப்புள்ளி தலையிட்டதுதான் காரணம் என்கிறது கோலிவுட் பட்சி.

சீனா, தாய்லாந்துக்குப் பறக்கும் Pushpa – 2

தமிழ் சினிமா வட்டாரத்திலும் கூட அதிகம் பேசப்படும் படமாக ‘புஷ்பா -2’ முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பார்க்கிற பிரபலங்கள் கூட புஷ்பாவைப் பற்றி பேசாமல் நகர்வதில்லை.

இப்போது லேட்டஸ்ட்டாக உலாவரும் தகவல். புஷ்பா-2 படத்தின் போட்டோ ஷூட்டை நடத்திவிட்டார்களாம். இதில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிக மந்தானா இருவருக்குமான ஷூட் முடிவடைந்திருக்கிறதாம்.

இந்த போட்டோ ஷூட் படங்களை இப்போது வெளியிடும் எண்ணமில்லையாம். பொங்கல் கொண்டாட்டத்தின் போதுதான் வெளியிடப் போகிறார்கள். இரண்டு மாதம் கழித்து வெளியிடும் புகைப்படங்களுக்கு இவ்வளவு மெனக்கெடலா என்று இங்கே முணுமுணுப்பு கேட்கிறது.

அடுத்து புஷ்பா-2 படத்திற்கு ஷங்கர் பட த்தைப் போலவே ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறதாம்.

அதாவது படத்தின் பட்ஜெட் இவ்வளவுதான் என்று முதலிலேயே தீர்மானிக்க வேண்டாம். படத்திற்கு எதிர்பார்பும் பிஸினெஸ்ஸூம் இருப்பதால் தேவையான அனைத்தையும் கொடுத்து இயக்குநர் சுகுமாரை முழுவீச்சில் இறக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

கடந்த முறையே பேங்காக்கில் இருக்கும் காடுகளில் ஷூட் செய்ய சுகுமார் திட்டமிட்டு இருந்தார். கோவிட் காரணமாக அது நடக்கவில்லை. அதனால் இந்த முறை சீனா மற்றும் தாய்லாந்தில் இருக்கும் காடுகளில் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை ஷூட் செய்ய இருக்கிறார்கள்.

ஆனால் முதல் ஷெட்யூலை ஹைதராபாத் ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் ஆரம்பிப்பதா இல்லை பேங்காக்கில் ஆரம்பிப்பதா என்று யோசனையில் இருக்கிறது புஷ்பா -2 யூனிட்.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். மற்றும் புஷ்பா படங்களுக்குப் பிறகு கோலிவுட்டில் தெலுங்குப் படங்களைப் பற்றிய பேச்சு அதிகம் அடிப்பட ஆரம்பித்திருக்கிறது. கோலிவுட் படங்களைப் பற்றிய டோலிவுட்டின் பிரமிப்புகள் இப்பொழுது நேரெதிர் உல்டாவாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...