No menu items!

சமந்தா ஹெல்த் லேட்டஸ்ட்

சமந்தா ஹெல்த் லேட்டஸ்ட்

‘ஊ சொல்றீயா மாமா..’ என பரபரப்பை உண்டாக்கிய சமந்தா கடந்த சில நாட்களாக சைலண்டாகி இருக்கிறார்.

ஆரம்பத்தில் அவரது உடல்நிலை சரியில்லை அதனால்தான் சமந்தா சமூக ஊடகங்களில் கூட தலைகாட்டாமல் இருக்கிறார். இல்லையென்றால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வீடியோக்களை அப்லோட் செய்திருப்பார் என்று முணுமுணுத்தன சில வெப்சைட்கள்.

இதனால் கடுப்பான சமந்தா தரப்பு, தவறான தகவல்களைப் பரப்பினால் அந்த வெப்சைட்கள் மீதும் யூட்யூப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விட்டது.

இதனால் சமந்தா பற்றிய செய்திகள் கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டன.

ஆனால் சருமப்பிரச்சினையால் சமந்தா பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் எங்கும் வெளியே வராமல் இருக்கிறார். வீடியோக்களையும் அப்லோட் செய்யாமல் இருக்கிறார் என்ற பேச்சு மீண்டும் கிளம்பியிருக்கிறது.

இது குறித்து விசாரித்தால், சமந்தா கடந்த வாரம் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார் என்கிறார்கள்.

அமெரிக்காவில் இரண்டு வாரங்கள் சிகிச்சை எடுக்க பரிந்துரை செய்திருக்கிறதாம் அங்குள்ள மருத்துவர் குழு. சருமப் பிரச்சினைக்கான சிகிச்சைகளுக்காக சமந்தா அமெரிக்காவில் இரண்டு தங்குகிறார். அடுத்த வாரம் இந்தியா வரவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இங்கு வந்த பிறகு வழக்கம் போல கமிட் செய்த படங்களின் ஷூட்டிங்கில் சமந்தா கலந்து கொள்வார் என்று அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் தரப்பிற்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

ராஷ்மிகா ஆட்டம் போட்டதால் வந்த பிரச்சினை

‘வாரிசு’ படத்தில் விஜய் – ராஷ்மிகா சம்பந்தப்பட்ட டாக்கி போர்ஷன்களை எல்லாம் எடுத்துமுடித்து விட்டார்கள்.

மீதி இருப்பது இரண்டு பாடல். இரண்டு சண்டைக்காட்சிகள் மட்டுமே.

இதற்கிடையில் பாடலா என்று பதறிப்போய் உட்கார்ந்து இருக்கிறார் ராஷ்மிகா இதற்கு காரணம் எதிர்பாராமல் ராஷ்மிகாவைப் படுத்தி எடுக்கும் முட்டி வலி. கொஞ்ச நாட்களாகவே முட்டி வலியால் ராஷ்மிகா அவதிப்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் டாக்டரை போய் பார்த்த ராஷ்மிகாவுக்கு டாக்டர் அடித்த கமெண்ட் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது..

’உங்க உடம்பு வெயிட்டை எல்லாம் இப்படி முட்டியினால தாங்கிகிட்டு ஆடினதால வந்த பிரச்சினைதான் இது’’ என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட ராஷ்மிகா, ’நானே லாலி பாப் மாதிரி இருக்கேன். இந்த வெயிட்டுக்கு முட்டி வலியா’ என்று ஷாக் ஆகியிருக்கிறார்.

26 வயது ஆகும் போதே முட்டி வலியா என்று சோர்ந்து போன ராஷ்மிகாவுக்கு ’வாரிசு’ படத்தின் பாடல்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் உடனடி சிகிச்சை பெற்றே ஆக வேண்டிய சூழ்நிலை. உருவாகி இருக்கிறது.

நானே வருவேன் Vs பொன்னியின் செல்வன்

’பொன்னியின் செல்வன்’ பற்றி ஊரே பேசும் அளவிற்கு ஏகப்பட்ட ப்ரமோஷன். அப்படத்தில் நடித்த நட்சத்திரங்களின் பேட்டி, ஷூட்டிங் ஸ்பாட்டில் க்ளிக்கிய செல்ஃபிக்கள். ஆடை எப்படி அணிந்தேன் என்ற கவர்ச்சிகரமான விளக்கங்கள். இப்படி பிஎஸ் பற்றிய ப்ரமோஷன் உச்சத்தில் இருக்கிறது.

ஆனால் இப்படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்குகிறது தனுஷூம், செல்வராகவனும் மீண்டும் இணைந்திருக்கும் ‘நானே வருவேன்’.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்தால் அது ஒரு ஹாட் ப்ராஜெக்ட் ஆக மாறிவிடும். இந்த முறையும் அப்படிதான். ஆனால் ப்ரமோஷன் விஷயத்தில் தனுஷூம், செல்வராகவனும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ட்ரெய்லர் இல்லை. ஆடியோ ஃபங்க்‌ஷன் இல்லை.

ஆனாலும் இப்படத்திற்கு 750 திரையரங்குகள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’பொன்னியின் செல்வன்’ படம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியாக வேண்டும். வார இறுதி நாட்களில் ஒட்டுமொத்த கலெக்‌ஷனையும் அள்ள வேண்டுமென்பதுதான் பிஎஸ் டீமின் திட்டம்.

ஆனால் இப்போது தனுஷ் – செல்வராகவனின் ‘நானே வருவேன்’ வருவதால் ’பிஎஸ்’ கல்லா கட்டுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும் என்கிறார்கள்.

இந்நிலையில் ’நானே வருவேன்’ படத்தை அதிகாலை திரையிட அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது.

அதனால் சனிக்கிழமை போட்டியில் வெல்லப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...