No menu items!

ராஷ்மிகா மந்தானா: Wow 10

ராஷ்மிகா மந்தானா: Wow 10

விஜய்66 படத்தில் கமிட்டான வேகத்தில், தமிழ் சினிமா ப்ரியர்கள் மத்தியில் ராஷ்மிகா மந்தானா மீதான க்ரஷ் இப்போது எகிறிப் போயிருக்கிறது. ’கீதா கோவிந்தம்’ பார்த்தபோதே, ‘ராஷ்மிகா ஏன் தமிழ் சினிமாவிற்கு வரவில்லை’ என்று ஒரு முறையாவது யோசித்த ராஷ்மிகா ஆர்மிக்காக இதோ அவரைப் பற்றிய Wow 10 தகவல்கள்.

  1. ராஷ்மிகா மந்தானா என்றால் ‘ஒளிக்கதிர் எப்போதும்’ என்று பொருள். அதற்கேற்ற மாதிரி எப்போதும் ஜொலிக்கும் புன்னகையுடன் பார்ப்பவர்களை கிறங்கடிப்பது இவரது அடையாளம்.
  2. ராஷ்மிகாவின் வயது 26. ஆனால், இவர் செய்யும் சேட்டைகள் அனைத்துக்கும் 16 வயது. இந்த சேட்டைகளினால் ஷூட்டிங் ஸ்பாட் கலகலவென்று இருக்கும்.
  3. செல்லப்பிராணிகள் இவரது ஃபேவரிட். 4 வகையான உயர் ரக நாய்களை வளர்த்து வருகிறார். செல்ல நாய்களுடன் இருக்கும் இவரது புகைப்படங்கள் லைக்ஸ் அள்ளுகின்றன.
  4. ஸ்லிம்மாக இருந்தாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக அக்கறை காட்டுபவர் ராஷ்மிகா. Strengthening மற்றும் Aerobic உடற்பயிற்சிகளையும் தவறாமல் செய்பவர். முக்கியமாய் கால்கள் அழகான வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக கிக் பாக்ஸிங்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. அதே நேரம் ராஷ்மிகாவுக்கு டயட் என்றாலே அலர்ஜி.
  5. எவ்வளவு சாக்லேட்டுகள், புட்டிங்குகளை கொடுத்தாலும் ஒரே சமயத்தில் மொத்தத்தையும் காலி செய்துவிடுவார். அந்தளவிற்கு இனிப்பு ப்ரியர்.
  6. அட்டகாசமான டிரைவர். அவரது ஃபேவரிட் காரான ரேஞ்ச் ரோவரில் நாமும் சென்றால் சீட் பெல்ட் அணியாமல் போக முடியாது, காரணம் கார் தரையிலிருந்து அரை அடி உயரத்தில் பறக்கும். அத்தனை வேகம்.
  7. வல்லாரை சாப்பிடாமலேயே ஞாபக சக்தி அதிகம். ஒரு முறைப் பார்த்துவிட்டால் போதும், மூன்றாண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் போதுகூட அசத்தலாக அடையாளம் கண்டு கொள்வார். இதனால் இவரிடம் சேட்டைகள் பண்ணிவிட்டு எஸ்கேப் ஆகலாம் என யாராவது நினைத்தால் கிக் பாக்ஸிங் உதை நிச்சயம்.
  8. உலகத்தையே கைக்குள் வைத்திருக்கும் கூகுள், ராஷ்மிகாவின் கவர்ச்சியில் மயங்கி, ‘நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா 2020’ என்று பட்டம் கொடுத்து பாராட்டியிருக்கிறது.
  9. தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் தற்போதைக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார். இப்போதைக்கு 3 கோடி சம்பளமாம்.
  10. காதல் தோல்வியையும் தோற்றத்தையும் உடலையும் கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடியாக Irreplaceable என்று தனது கையில் டாட்டூ குத்தி அவர்களை சைலண்ட் ஆக்கிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...