No menu items!

காலை இழந்த மதுரை ஜூடோ வீரர் – மின்வாரியம் காரணமா?

காலை இழந்த மதுரை ஜூடோ வீரர் – மின்வாரியம் காரணமா?

மதுரையில் மின்வாரிய ஊழியர்களின் அஜாக்கிரதையால் இளம் ஜூடோ வீரர் விக்னேஸ்வர் இடது கணுக்காலை இழந்துள்ளார். விக்னேஸ்வரன் இழந்தது அவரது காலை மட்டுமல்ல, அவரது ஐபிஎஸ் கனவையும் இழந்திருக்கிறார். விக்னேஸ்வரனுக்கு நடந்த சம்பவம் மிக சோகமானது.

சிறுவயது முதலே ஜூடோவை தனது உயிர் மூச்சாக கொண்டவர் விக்னேஷ்வரன். ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் தனியார் இன்ஜினியரிங் காலேஜில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அரசு தேர்வை வென்று ஐபிஎஸ் ஆகிய வேண்டும் என்றும் கனவோடு இருந்தார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஜூடோ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தினமும் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்படி பயிற்சிக்காக செல்லும் போதுதான் சற்றும் எதிர்பாராத அந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

நடந்தது என்ன?

நேற்று முன்தினம் (ஜூலை 26) மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் விக்னேஸ்வரன் ஆகஸ்ட் மாதம் 5,6 ஆம் நடைபெறும் நேஷனல் லெவல் ஜூடோ விளையாட்டு போட்டி பயிற்சியை மேற்கொள்வதற்காக சென்று கொண்டிருக்கும்போது, கோச்சடை அருகே மின்கம்பம் ஒன்று பழுதாகி இருந்திருக்கிறது. பழுதான மின்கம்பத்தை மின்சார வாரிய ஊழியர்கள் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆப்ரேட்டரின் கவனக்குறைவால் மின்கம்பம் தவறி விழுந்து அவரின் கணுக்கால் பழத்த சேதமடைந்தது.

இந்த பெரிய விபத்தால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் என்று நிம்மதி கொள்வதா இல்லை ஜூடோ விளையாட்டை தன் வாழ்க்கையாக கொண்ட அவரால் இனி ஜூடோ விளையாட்டை மேற்கொள்ள முடியாது என்று வருத்தம் கொள்வதா?

விக்னேஷ்வரனின் தாய்படும் வேதனையை வார்த்தைகளால் அடக்க முடியாது. இந்த செய்தி கேட்டவுடன் அவரின் தாய் படும் துயரத்தை நினைத்தால் மனதை பதரவைக்கிறது. ”நான்தான் பிறக்கும் போதே மாற்றுத் திறனாளி. என் பிள்ளை இப்படி விபத்தில் மாற்றுத் திரனாளியாக மாறுவன் என்று நினைத்து கூட பாரத்தது இல்லை” என்று அவரின் தாய் சொல்லி அழுகும்பொது என்ன சொல்லி ஆறுதல் தேற்றுவது.

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று விக்னேஷ்வரனும் அங்கு சுற்றி இருந்தவர்களும் கூறுகின்றனர். விகேஷ்வரனுக்கு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

‘தமிழ் நாடு அரசு என் மகனுக்கு அரசு வேலையை ஏற்படுத்தி தரவேண்டும்’ என்று மிகுந்த வேதனைவுடன் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார் அவரது தாய். ஆனால், அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவரமுடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.

இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் தவிர்ப்பதற்கு கவனமாக செயல்பட வேண்டியது யார்?

பொதுமக்களா? இல்லை அரசாங்கமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...