No menu items!

இந்தியன்-2 இவ்வளவு நீளமா?

இந்தியன்-2 இவ்வளவு நீளமா?

கமல் – ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ’இந்தியன் – 2’ திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஷூட் செய்தவை, விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஷூட் செய்தவை என அனைத்து காட்சிகளை எடுத்து பார்த்திருக்கிறாராம் ஷங்கர்.

ஒரு படம் இரண்டரை மணிநேரத்திற்கு மேல் போனாலே சோர்ந்துப் போகும் ரசிகர்களுக்கு, ’இந்தியன் – 2’ நீளம் மயக்கத்தை வரவழைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

விஷயம் என்னவென்றால் ஷங்கர் இதுவரை ஷூட் செய்த காட்சிகள் சுமார் 6 மணி நேரம் ஓடுவதாக கிசுகிசு அடிப்படுகிறது. அதாவது இரண்டு படங்களாக வெளியிடும் அளவிற்கு நீளமாக இருக்கிறதாம்.

இதனால், ’இந்தியன் – 2’ படத்தை இரண்டுப் பாகங்களாக வெளியிடலாமா என்று ஷங்கர் தரப்பு யோசித்து வருவதாக கூறுகிறார்கள்.

இந்த 6 மணிநேர சமாச்சாரம் உண்மையா இல்லையா என்று உறுதிப்படுத்த முடியாத போதிலும், அப்படியொரு சூழல் இருந்தால்  ‘இந்தியன் – 2’ மற்றும் ‘இந்தியன் – 3’ என்று  வெளியிட வேண்டிய  கட்டாயத்திற்கு  ஷங்கர் தள்ளப்படுவார் எனவும், மூன்றாம் பாகத்தின் வேலைகள் முடிந்த பின்பே படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட் பக்கம் பேச்சு அடிப்படுகிறது.


பாலிவுட் நடிகைகளை பதற வைக்கும் ஆசாமி!

’பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சி. கடந்த இரண்டு வாரங்களாக மன அழுத்தத்தில் இருந்தார் பூஜா ஹெக்டே. இதற்கு காரணம் முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக பூஜாவை ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். இதனால்தான் தற்கொலைக்கு முயன்றவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றி விட்டார்கள்.’

’ஆதிபுரூஷ்’ படத்தில் நடித்த கீர்த்தி சனோனுக்கும் பிரபாஸூக்கும் இடையே ப்ரேக் அப். இருவரும் காதலை முறித்து கொண்டார்கள்’

திபீகா படுகோன் பையில் கொகெய்ன் இருப்பதை மும்பை விமானநிலையத்தில் கண்டுப்பிடித்துவிட்டார்கள். இந்த பிரச்சினை வெளியே தெரியாமல் இருக்க எக்கச்சக்கமாக பணம் கொடுத்து சமாளித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தற்கொலை முயற்சி. பட வாய்ப்புகள் இல்லாததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றார்.’

இப்படி அடுக்கடுக்கான, பரபரப்பானவற்றை சமூக ஊடகம் ஒன்றில் பதிவிடுவதை ஒருவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அரபு அமீரகத்தில் இருப்பதாக கூறிக்கொள்ளும் இந்த நபர், சென்சார் போர்ட் உறுப்பினர் எனவும், தனக்கு பாலிவுட்டில் ஏராளமான தொடர்புகள் இருப்பதாகவும், அவர்கள் மூலம் உலகுக்கு தெரியாத ரகசியங்களை தொடர்ந்து வெளியிடுவதாகவும் அந்த நபர் கூறி வருகிறார்.

இந்த நபர் தொடர்ந்து இப்படியே எல்லோரையும் காயப்படுத்துவதோடு, நட்சத்திரங்களின் நற்பெயருக்கு வேட்டு வைப்பதால், இவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறத் பாலிவுட்.

பல நட்சத்திரங்கள் இவரை ப்ளாக் செய்துவிட்டு அவர்களது வேலைகளைப் பார்க்க கிளம்பிவிட்டார்கள். ஆனாலும் இவர் தனது ட்வீட்களை தொடர்ந்து பதிவேற்றி கொண்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பூஜா ஹெக்டே இந்த நபருக்கு  லீகல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.

இதேபோல் திரைப்பட நட்சத்திரங்கள்  தைரியமாக முன்வந்தால்தான் இது போன்ற போலி தகவல் ஆசாமிகளை கட்டுப்படுத்த முடியுமென நெட்டிசன்கள் கமெண்ட்களை அள்ளிவிட்டப்படி இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...