ரஜினி நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியாக தயாராக இருக்கிறது. இந்த நேரத்தில்தான் ரஜினி இமயமலை பயணத்தை மேற்கொ்ண்டார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமயமலைக்கு சென்ற ரஜினி தான் வழக்கமாக செல்லும் பலவேறு இடங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அங்கிருந்த ஒரு துறவி அவர் நடித்த படங்களின் நிலை பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஜினி , வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்களுக்கு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
வேட்டையன் படத்தைப் பொறுத்தவரைக்கும் இது மெலோட்ராமா என்று சொல்லக்கூடிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருக்கும். இயக்குனர் த.செ.ஞானவேல் திரைக்கதையில் நம்பிக்கை வைத்துதான் ரஜினியே இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். கதையில் வரும் பல காட்சிகளுக்கு உடல்நிலையை பொருட்படுத்தாது நடித்துக் கொடுத்தார். குறிப்பாக பண்டிச்சேரியில் நடந்த சண்டைக் காட்சியில் ரஜினி ரிஸ்க் எடுத்து நடித்தது பலரையும் வியக்க வைத்தது. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் வேட்டையன் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
இதே போல லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் 10ம் தேதி தொடங்க இருப்பதையும் ரஜினியே வெளியிட்டதால் படக்குழுவினர் உஷார் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ரஜினியின் படம் தொடங்குவதற்கு முன்பே ரஜினி ரசிகர்களுக்கும் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் குழுவினர்களுக்கும் பனிப்போர் தொடங்கியிஒருந்தது.
லியோ படத்தின் வெற்றி விழாவில் பருந்து காகம் கதைக்கு பதில் சொல்வதாக நினைத்து இயக்குனர் ரத்னகுமார் பருந்து எவ்வளவு உயரமாக பறந்தாலும் கீழே வந்துதான் ஆக வேண்டும் என்று பேசியது ரஜினி ரசிகர்களுக்கு ஏகத்துக்கும் வெறி ஏற்றியிருந்தது. இதனால் அப்போதே இணையத்தில் ரஜினி ரசிகர்கள் ரதனகுமார் பேச்சுக்கு எதிரான பதிவை போட்டு வந்தனர். லோகேஷ் லியோ படத்தில் நடந்திருந்த தவறுகளை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இதுவும் ஒருபக்கம் இஅவர் தலைவர் படங்களை எப்படி எடுக்கப் போகிறாரோ என்கிற பதட்டத்தை ரஜினி ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான் கூலி படத்தின் படப்பிடிப்பு ஜுன் 10 தேதி தொடங்க இருக்கிறது. இந்த படக்குழுவில் ரதனகுமார் இருக்கிறாரா 😕 இல்லையா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. நாம் விசாரித்த வகையில் லோகேஷ் கனகராஜின் பல யோசனைகளுக்கு ரதனகுமார்தான் எடுத்து கொடுத்து காட்சிகளை மெருகேற்றுவார் என்கிறார்கள். மேலும் வசனத்தையும் அவரே எழுதியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் லியோ படத்தின் சில காட்சிகளை ரதனகுமார் இயக்கியதுதான் விஜய்க்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனாலும் அவரை லோகேஷ் விட்டுக்கொடுக்காமல் வைத்திருந்தார் என்கிறார்கள். அதனால் கூலி படத்திலும் ரத்னகுமார் தொடர்ந்து பணியாற்றுவார் என்கிறார்கள்.