No menu items!

காருக்குள் கசமுசா முயற்சி – சில்மிஷ டிஜிபிக்கு ஜெயில்

காருக்குள் கசமுசா முயற்சி – சில்மிஷ டிஜிபிக்கு ஜெயில்

2020 மார்ச் மாதம் கொரோனா நம்மை ஆக்கிரமித்த காலக்கட்டத்தில் ஒரு முகத்தை தினமும் தொலைக்காட்சியில் பார்ப்போம். கொரோனா பாதிப்பு எங்கெல்லாம் என்ற விவரங்களை தருவார். அவர் அப்போது தமிழ்நாட்டு சுகாதாரத் துறை செயலராக இருந்த பீலா ராஜேஷ் ஐஏஎஸ். இவரது கணவர் ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ்தான் இப்போது மற்றொரு பெண் அதிகாரியிடம் சில்மிஷ அத்துமீறல்களை செய்து, மாட்டி இன்று மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.

என்ன நடந்தது? இதுதான் நடந்தது என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

அப்போது அதிமுக ஆட்சி. தமிழ்நாட்டின் சிறப்பு டிஜிபியாக அதிகாரத்துடன் இருந்தவர் ராஜேஷ்தாஸ் ஐபிஎஸ். அவரது அதிகாரம் மட்டுமில்லாமல் அவரது மனைவி பீலா ராஜேஷ் ஐஏஎஸ் அதிகாரி. இரட்டை அதிகாரம் கொடி கட்டிப் பறந்துக் கொண்டிருந்த நேரம்.

2021 பிப்ரவரி மாதம் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். அப்போது அவரது பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடுவதற்கா சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் செல்கிறார். பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டுவிட்டு திரும்பி வரும்போது பெரம்பலூரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி அவர் கவனத்துக்கு வருகிறார்.

அவரை தன்னுடைய காரில் ஏறச் சொல்லுகிறார். அலுவல் சம்பந்தமான விஷயங்களை பேச வேண்டும் என்று கூறுகிறார். அந்தப் பெண் அதிகாரியும் மூத்த அதிகாரி அழைக்கிறார் என்று காரில் ஏறிக் கொள்கிறார். தன்னுடைய காரை பின்னால் வரச் சொல்லுகிறார். இருவரும் காரின் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்ளுகிறார்கள். கார் மெல்ல நகர்கிறது. அலுவலைத் தவிர மற்றவற்றை பேச ஆரம்பிக்கிறார் ராஜேஷ்தாஸ். பேசும் போது பெண் அதிகாரியைத் தொட்டு தொட்டு பேசுகிறார். அதுவே பெண் அதிகாரிக்குப் பிடிக்கவில்லை.

காரை ஓரமாக நிறுத்தச் சொல்லுகிறார். முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கிறது, வெளியே நில் என்று டிரைவரை தள்ளி நிற்கச் சொல்லுகிறார்.

டிரைவர் இறங்கியதும் உன் குரல் நன்றாக இருக்கிறது ஏதாவது பாடு என்கிறார். தர்மசங்கடமாய் உணர்ந்த பெண் அதிகாரி மறுக்க அவரது கைகளை பிடிக்கிறார், உடல் பாகங்களை தொட முயற்சிக்கிறார். உடனே பெண் அதிகாரி சட்டென்று கீழிறங்கி தன்னுடைய காருக்கு ஓடிச் செல்கிறார்.

பிரச்சினை அத்துடன் நிற்கவில்லை.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குறித்து புகார் கொடுக்க காரில் சென்னை கிளம்புகிறார். இதைக் கேள்விப்பட்ட ராஜேஷ் தாஸ் அவரைத் தொடர்புக் கொள்கிறார். கெஞ்சிகிறார். ஆனால் பெண் அதிகாரி மசியவில்லை. கார் பயணம் தொடர்கிறது.

அடுத்த முயற்சியில் இறங்குகிறார் ராஜேஷ்தாஸ். பெண் அதிகாரியின் காரை தடுக்க முயல்கிறார். இதற்காக செங்கல்பட்டு எல்லை அம்மாவட்ட எஸ்.பி.யின் காவலர் படையுடன் வந்து பெண் அதிகாரியின் கார் தடுக்கப்படுகிறது.

சிறப்பு டிஜிபி பேசுகிறார் என்று பெண் அதிகாரியுடன் போன் கொடுக்கப்படுகிறது. ஆனால் பெண் அதிகாரி பேச மறுக்கிறார். பெண் அதிகாரியின் கார் சாவி பிடுங்கப்படுகிறது.

இந்தக் களேபரங்கள் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் காவல் துறையினர் குவிப்புடன் நடக்கிறது.

இத்தனை மிரட்டலுக்கு அஞ்சாமல் அந்தப் பெண் அதிகாரி சென்னை சென்று டிஜிபியை சந்தித்து புகார் அளிக்கிறார்.

அதன் பின் விசாரணைகள், வழக்குகள் என நீண்டு இப்போது முதல் முடிவுக்கு வந்திருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது.

ராஜேஸ் தாசுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. பெண் அதிகாரியை செஙகல்பட்டில் தடுத்த எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலதிகாரி இட்ட கட்டளையை நான் நிறைவேற்றினேன் என்பது அவர் வாதம். அதனால் அபராதத்துடன் தப்பித்திருக்கிறார்.

மிக அதிகாரமிக்க பதவியில் இருந்தவரின் சின்னத்தனமான சில்மிஷங்களை எதிர்த்து நின்று வென்று காட்டிய பெண் அதிகாரிக்கு சபாஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...