No menu items!

கமல், மணிரத்னம் இணையும் ‘தக் லைஃப்’: இராமநாதபுரம் பிண்டாரிகள் கதையா?

கமல், மணிரத்னம் இணையும் ‘தக் லைஃப்’: இராமநாதபுரம் பிண்டாரிகள் கதையா?

புவி

Thug life என்று ஆங்கிலத்தில் டைட்டில் அறிவித்ததற்கு ‘பிண்டாரிகள்’ என்று தமிழில் தலைப்பு அறிவித்திருந்தால் உலகநாயகன் வேறலெவல் தான்.

எவன் ஒருவன் பூஜ்யத்தில் தொடங்கி, தன்னை ஏதோவொன்றாக வளர்த்துக்கொள்கிறானோ அவனே ‘தக்’. இழப்பதற்கு எதுவுமில்லாத, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் வாழ்வை ‘தக் வாழ்க்கை’ என்று மேலை நாடுகளில் கூறுகிறார்கள்.

உண்மையில் இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது. இதற்கு அர்த்தம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால், ‘தக்’ என்ற சொல்லின் வேர், இந்தியாவில் உருது மொழியின் ‘தாக்’ என்பதில்தான் ஆரம்பிக்கிறது. தக் என்பதை உலகிற்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். தாக் என்ற வடசொல் ‘பின்விளைவை நினைத்துப் பார்க்காத, துணிவான, மோசடிக்காரனை’ குறிப்பது. 1800-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆங்கில மொழியில் ‘தக்’ வார்த்தை மெல்ல நுழைந்தது.

காரணம், இந்தியாவில் ஆங்கிலேயர் சந்தித்த விபரீத ‘தக்’ மனிதர்கள் அப்படி. ஆங்கிலேயர்களை விரட்டி விரட்டி ஓட விட்டவர்கள் தாக்குகள். 1800 ஆரம்பத்தில், இந்திய நெடுஞ்சாலைகளில், பல்லாயிரக்கணக்கான பயணிகளை, வெகு சாதாரணமாக கழுத்தை நெரித்து கொன்று, உடமைகளை கொள்ளையடித்த குற்றவாளி கும்பல் ஒன்று நடமாடியதாக நம்பப்பட்டது. இவர்கள் தக்குகள்தான் எனவும் ‘பிண்டாரிகள்’ எனவும் ஆங்கில அரசின் ஆவணங்கள் குறித்துள்ளன.

கொலை சம்பவத்தை பரம்பரை தொழில்முறையாகவே கொண்டவர்களின் வாழ்கை, ‘தக்’ என கருதப்பட்டது. ‘இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆஃப் தி ஹிஸ்டரி அண்ட் பிராக்டிஸஸ் ஆஃப் தக்ஸ் ‘Illustrations of the history and practices of the Thugs’, (1837) என்ற நூலில், ‘இந்தியாவில் ஏராளமான பரம்பரை தொழில்கள் உள்ளன. அதுபோலத்தான் கொலை செய்யும் ‘தக்’ குண்டரின் தொழிலும்’ என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

‘தக்’குகள், அழித்தொழிப்பின் தெய்வமான காளியை வணங்குபவர்கள் என்றும், ‘பிறவி குற்றவாளிகள்’ என்றும் சித்தரிக்கப்பட்டனர்.

‘தக்’குகளின் சிலீரிடும் கொலை வழக்கம் ஆங்கிலேயர்களை திகைப்பில் ஆழ்த்தியது. ‘இந்த கூட்டத்தை வேருடன் ஒழிக்கவேண்டும். இல்லையேல் இந்தியாவில் ‘கம்பெனி’யின் கொள்ளையை தொடரமுடியாது’ என 1830-ல் இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. உடனே, தக்குகளை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது ஆங்கிலேய அரசு/.

‘கூண்டோடு இவர்களை அழிக்கும்’ வேலையை முன்னின்று செய்தவர்கள், இந்தியாவின் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் ‘லார்ட் வில்லியம் பெண்டின்க்’ மற்றும் ‘கேப்டன் வில்லியம் ஸ்லீமன்’ ஆகியோர்தான். ஏறக்குறைய 4,000 தக் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சுமார் 2,000 பேருக்கு மரண தண்டனை. மற்றவர்களுக்கு தீவாந்தர ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. கேப்டன் ஸ்லீமன் இந்தியாவில் ‘தக்’குகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக’ லண்டனுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். பிலிப் மெடோஸ் டெய்லர் எழுதிய ‘ஒரு ‘தக்’கின் வாக்குமூலம்’ நூற்றாண்டின் மிக பிரபலமான நூல். (Confessions of a #Thug-1839)

‘தக்’ என்ற இந்திய வார்த்தை உலக வழக்கானது இப்படித்தான். ‘தக்’ என்ற அஞ்சா நெஞ்சர்கள். இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட்டதாக அறிவித்த 50 வருடங்கள் கழித்து ஆங்கிலேயர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தென்தமிழக மாவட்டங்களில் மிக முக்கியமான இராமநாதபுரம் மாவட்டத்தில் (ராம்நாட் ஜில்லா) பிண்டாரிகள் அசுர வளர்ச்சியில் இருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு அரும்பாடு படவேண்டியிருந்தது.

சரி கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு வருவோம்…

இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் முக்கால் வாசி மக்கள் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள். அதாவது கள்ளர், மறவர், அகமுடையார்கள், இவர்களின் வலிமையான நெஞ்சுருதி பழிபாவத்திற்கு அஞ்சாத செயல்களையும் அதை செய்பவர்களையும்  ஆங்கிலேயர்கள் பிண்டாரிகள் என்றும் ‘தக்’ என்றும் ஆவணப்படுத்தினர்.  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புவியல் தகவமைப்பு வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும் விவசாயம் செய்ய ஏற்ற புவியியல் தகவமைப்பு இல்லாததாலும் இவர்களது வாழ்வு பெரும்பாலும் வறுமை கோட்டிற்கு கீழாக இருப்பதால் குற்றம் சார்ந்த வாழ்க்கை என்பது இவர்களது வாழ்வின் பெரும்பங்காக உள்ளது.

ஆனால், படத்தில் கமல் பெயர் சக்திவேல் நாயக்கர் என்று உள்ளது. இதுவும் சர்ச்சையாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...