No menu items!

ஐபிஎல் டைரி: தோனி ஹேர் ஸ்டைல் To மும்பை இந்தியன்ஸ் பூஜை!

ஐபிஎல் டைரி: தோனி ஹேர் ஸ்டைல் To மும்பை இந்தியன்ஸ் பூஜை!

ரசிகர்களை கவர்ந்த தோனியின் ஹேர்ஸ்டைல்

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவாரா மாட்டாரா என்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தல தோனி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிபெறும் சிஎஸ்கே வீர்ர்களுடன் இணைந்து நேற்று அவர் தனது பயிற்சிகளைத் தொடங்கிவிட்டார். இந்த பயிற்சியில் தோனி ஒவ்வொரு ஷாட்களை அடிக்கும்போதும் விசிலடித்தும், கரகோஷம் எழுப்பியும் சென்னை ரசிகர்கள் சேப்பாக்கத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த பயிற்சியின்போது சிஎஸ்கே வீர்ர்களை அதிகம் கவர்ந்த விஷயம் தோனியின் ஹேர்ஸ்டைல். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது தனது ஹேர்ஸ்டைல் எப்படி இருந்ததோ, அதே ஸ்டைலை இப்போது மீண்டும் கொண்டுவந்திருக்கிறார் தல தோனி.

“எந்த ஹேர்ஸ்டைலுடன் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினாரோ அதே ஸ்டைலுடன் இந்த ஆண்டில் கிரிக்கெட்டுக்கு விடை கொடுக்கப் போகிறார் தோனி. அப்படியே அதே பழைய ஹேர்ஸ்டைலுடன் உலகக் கோப்பையை தூக்கியதுபோல் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கப்போகிறார்” என்று ரசிகர்கள் பேசுவதையும் மைதானத்தில் கேட்க முடிந்தது.

சூர்யகுமாருக்கு பதில் ஷிவாலிக்

காயத்தால் ஐபிஎல்லுக்கு லீவ் போடும் வீர்ர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவும் சேர்ந்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான அவருக்கு, 2 மாதங்களுக்கு முன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்துக்கு சிகிச்சை பெற்ற சூர்யகுமார் யாதவ், இப்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சூர்யகுமாரின் காயம் குணமாகி, அவர் முழு உடல் தகுதி பெற இன்னும் 2 வாரங்களாவது ஆகும் என்று தேசிய கிரிக்கெட் அகடாமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 2 ஆட்டங்களில் அவர் ஆடுவது சந்தேகம் என்று கருதப்படுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடக்கவுள்ள போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் 2 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் ஆடாதபட்சத்தில் அவருக்கு பதிலாக ஷிவாலிக் சர்மா என்ற புதிய வீரரை களம் இறக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் நடத்திய பூஜை

தங்கள் அணியை வலிமைப்படுத்தும் விதமாக குஜராத் டைட்டன்ஸில் இருந்து ஹர்த்திக் பாண்டியாவை அழைத்து வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். அத்துடன் ஹர்த்திக்குக்கு கேப்டன் பதவியையும் வழங்கியது. ஆனால் அது அணியை வலிமைப்படுத்துவதற்கு பதில் பிளவுபடுத்தி இருக்கிறது.

கேப்டன் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து அணி விவகாரங்களில் நாட்டமின்றி இருக்கிறார் ரோஹித் சர்மா. டி20 உலகக் கோப்பையை காரணம் காட்டி ஐபிஎல் தொடரின் பாதியில் அவர் அணியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் பும்ராவுக்கும் இந்த நகர்வு எரிச்சலைக் கொடுத்துள்ளது.

இப்படி அணி பிளவுபட்டிருக்கும் சூழலில் ஒரு சிறிய பூஜையுடன் இந்த ஐபிஎல்லுக்கான பயிற்சியை தொடங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. கேப்டன் ஹர்த்திக் பாண்டியா இந்த பூஜையை முன்னின்று நடத்தியுள்ளார். இந்த பூஜையாவது மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஒற்றுமையை கொண்டுவருமா என்று பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...