No menu items!

இஸ்திரி போடாதிங்க! – காரணம் இதுதான்!

இஸ்திரி போடாதிங்க! – காரணம் இதுதான்!

நீங்கள் டிப் டாப்பாக உடை அணிய விரும்பும் நபரா? போட்டிருக்கும் உடை கொஞ்சம்கூட சுருங்கியிருக்கக் கூடாது என்பதற்காக தினசரி அதைப் பார்த்துப் பார்த்து இஸ்திரி போடுபவரா?

-உங்களைப் போன்ற மனிதர்களால்தான் இந்த உலகின் சுற்றுச்சூழல் கெட்டுப் போகிறது என்று ஒரு புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை வைப்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. council of scientific and industrial research (CSIR) அமைப்பைச் சார்ந்த இந்திய விஞ்ஞானிகள்தான் இந்த குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். சட்டை சுருங்காமல் இருக்க, அவற்றை அயர்ன் செய்யும் மனிதர்களால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. காலநிலை மாற்றத்துக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வாரம் ஒருநாள், அதாவது ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று அயர்ன் செய்யாமல் சுருங்கி இருக்கும் உடைகளை அணிந்து ஆபீசுக்கு வருவது என்று council of scientific and industrial research அமைப்பின் விஞ்ஞானிகள் முடிவு செய்திருக்கிறார்கள். இதன்படி அவர்கள் நடந்தும் வருகிறார்கள்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் முதல் பெண் பொது மேலாளரான கலைச்செல்வி, “மின்சாரத்தை சேமிக்கவும், கரியமில வாயு அதிக அளவில் வெளியேறுவதை கட்டுப்படுத்தவும் வாரம் ஒருநாள் அயர்ன் செய்யாத உடைகளை அணிந்து ஆபீசுக்கு வருவது என்று எங்கள் அமைப்பின் விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி திங்கள்கிழமைகளில் அயர்ன் செய்யாத உடைகளை அணிந்து ஆபீசுக்கு வருகின்றனர். உடைகளை அயர்ன் செய்ய அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. அதை தவிர்க்க சுருங்கிய ஆடைகளை அணிகிறோம்.

ஒவ்வொரு முறையும் நாம் உடைகளை அயர்ன் செய்யும்போது குறிப்பிட்ட அளவில் கரியமில வாயு வெளியேறுகிறது. இதனால் புவி வெப்பமயமாகிறது. சுருக்கம் நிறைந்த ஆடைகளை அணிவது பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் கொஞ்சம் அசிங்கமாக தெரியலாம். ஆனால் இந்த உலகின் நன்மைக்கும் உலகம் சூடாவதைத் தவிர்க்கவும் சுருக்கம் மிகவும் நல்லது. அதனால் அயர்ன் செய்யாத உடைகளை அணிந்து இந்த உலகில் ஏற்பட்டுள்ள சுருக்கத்தை சரிசெய்வோம்” என்கிறார்.

அயர்ன் செய்யாத உடைகளை அணிவதுடன் தங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

எல்லாம் தெரிஞ்ச விஞ்ஞானிகளே அயர்ன் பண்ண வேணாம்னு சொல்லிட்டாங்க. இந்த உலகத்துக்காக நாமளும் அதை முயற்சி செஞ்சுதான் பார்ப்போமே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...