No menu items!

தனுஷ் –சாரா அலி கான் – என்ன நடக்கிறது?

தனுஷ் –சாரா அலி கான் – என்ன நடக்கிறது?

சிங்கிள் சிங்கமாக உலாவரும் தனுஷ் தான் நடித்தப் படங்களின் ப்ரமோஷன்களுக்கு மிக உற்சாகமாக கலந்து கொள்கிறாராம். ப்ரமோஷன் எந்த ஊரில் இருந்தாலும், சட்டென்று ப்ளைட் பிடித்து பட்டென்று ஐ யம் ப்ரசண்ட் என்கிறாராம்.

இதற்கு காரணம் தனிமைதான் என்கிறார்கள்.  ஒரு பக்கம் மனைவி தனியாக போய்விட, மறுபக்கம் அம்மா அப்பாவுடன் சேர்ந்திருப்பதில் சுதந்திரம் போய்விட, தனுஷ் தன்னை வேலைகளில் பரபரப்பாக வைத்து கொள்வதில் மும்முரம் காட்டி வருகிறாராம்.

இந்த விஷயம் ஒரு பக்கமிருந்தாலும், சமீபகாலமாக ‘அட்ராங்கி ரே’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த  பாலிவுட்டின் வாரிசு நடிகை சாரா அலிகானுடன் ரொம்பவே நட்புப் பாராட்டி வருகிறார் என்கிறது அவருக்கு  நெருக்கமான வட்டாரம்.

அட்ராங்கி ரே படத்தின்  வெளியீட்டுக்குப் பின்னரும் கூட இந்த ஜோடி ஒன்றாக வலம் வருகிறார்கள் என்றும் கிசுகிசுக்கிறார்கள். இதை நிரூபணம் செய்வது போல், சமீபத்தில் வெளியான ‘த க்ரே மேன்’ படத்தின் வெற்றியைக் கொண்டாட பாலிவுட்டின் ரிதேஷ் சித்வானி கொடுத்த நட்சத்திர விருந்தில் தனுஷ் சாரா அலிகானுடன் கைக்கோர்த்தபடி கலந்து கொண்டது  தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இன்ஸ்டாக்ராமிலும் சாரா தனுஷை புகழ்ந்து தள்ளுவதும் வைரலாகி வருகிறது. தனுஷும் இப்போது உற்சாகமாய் இருக்கிறார்.

தனிமைக்கு இனிமையாக வந்திருக்கிறது நட்பு என்கிறது தனுஷ் வட்டாரம்.

தேர்தலை கையிலெடுக்கும் ஷங்கர்!

’இந்தியன் – 2’ படம் பல காரணங்களால் நின்றுப் போக, பொருமையோடு இருந்தவர்  இனி இந்தியன் தாத்தா நடக்கவோ ஓடவோ வாய்ப்பில்லை என்று முடிவு செய்த பின்னரே தெலுங்குப் பக்கம்  ரைட் டர்ன் அடித்தார்.

அங்கு சிரஞ்சீவியின் வாரிசு ராம் சரண்  கமிட்டாக, ஆர்.சி15. என்ற பெயரில் படத்தை தொடங்கினார் ஷங்கர். பாலிவுட்டில் கவர்ச்சியில் திளைக்கும் கியாரா அத்வானியை கமிட் செய்த ஷங்கர், அஞ்சலி, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் என வழக்கம் போல் தனது படங்களில் நட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் ஃபார்மூலாவை இந்தப்படத்திலும் செயல்படுத்திவிட்டார்.

இதனால் பட்ஜெட் எகிறினாலும், ஷூட்டிங் படு ஜோராக நடந்து வருகிறது. ஹைதராபாத் ஷெட்யூலை முடித்த இப்படக்குழுவினர், அடுத்து செகந்தராபாத்தில் இருக்கும் விக்டோரியா மெம்மோரியல் ஹாலில் ஷூட் செய்து வருகின்றனர்.  இங்கு எடுக்கப்பட்டு வரும் காட்சி குறித்த விவரம் சென்னையில் கசிந்திருக்கிறது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தப்பட்ட காட்சியை மிக ரகசியமாக ஷூட் செய்து வருகிறார்களாம். இதில் ராம் சரணுடன் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்களாம்.

இதனால் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மீண்டும் ஊடகங்களின் ஒளி வட்டத்திற்குள் வந்திருக்கிறார். வழக்கமாக ஷங்கர் படங்களில் லஞ்சம் பற்றிய காட்சிப் பின்னணி அதிகமிருக்கும். இந்த முறை தேர்தலை கையில் எடுத்திருப்பதால் இது ஆளும் கட்சியை மறைமுகமாக தாக்கும் வகையில் இருக்குமா.. அப்படி இருந்தால் அவரது குறி மாநில அரசா இல்லை மத்திய அரசா என்று பரபரக்கிறது சினிமா வட்டாரம்.

ஸ்தம்பிக்கும் தெலுங்கு சினிமா!                        

தெலுங்கு சினிமாவில்  பரபரப்பாக படங்கள் தயாரிக்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் ஒரு குழுவாக  செயல்பட்டு வரும்  ஆக்டிவ் தெலுங்கு ஃப்லிம் ப்ரொடியூஸர்ஸ் கில்ட், ஆகஸ்ட் மாதத்திலிருந்து தெலுங்குப் பட ஷூட்டிங்களை ஒட்டுமொத்தமாக நிறுத்த போவதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பிறகு  ஒரு பக்கம் படத்தயாரிப்பு செலவுகள் கடுமையாக உயர்ந்து விட்டது. மறுபக்கம் பாக்ஸ் ஆபீஸ் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.  இதனால் தயாரிப்பாளர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கிறது என்கிறார்கள்.

இதையடுத்து, அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் ஷூட்டிங் வேலைகள் சுமூகமாக நடப்பதற்கான சூழல்களை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு சினிமாவில் வலுத்து வருகிறது

அந்த சூழலை உருவாக்கும் வரை தயாரிப்பாளர்கள் தாங்கள் எடுத்து வரும் படங்களின் ஷூட்டிங்கை தாமாக முன்வந்து நிறுத்தி வைக்கலாம் என்று முடிவாகி இருக்கிறதாம்.  அனைத்து படங்களின் ஷூட்டிங்கை நிறுத்திய பிறகு, அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவு செய்யலாம் என்பதில் தயாரிப்பாளர்கள் தரப்பு திவீரமாக இருக்கிறதாம்.

      தெலுங்கு சினிமாவின் பாதிப்பு தமிழ் சினிமாவிற்கும் அடுத்து வரலாம் என்பதால் இங்குள்ள தயாரிப்பாளர்கள் தரப்பு இப்பிரச்சினையை கூர்ந்து கவனித்து வருகிறது.

      தெலுங்கு சினிமா இப்பிரச்சினையில் நல்ல முடிவை எட்டுவதற்கு எவ்வளவு காலமானாலும் ஷூட்டிங்கை தொடர போவது இல்லை என்று உறுதியாக இருக்கும் பட்சத்தில், இது வெளிவரவிருக்கும் முக்கிய நட்சத்திரங்களின் படங்களையும் பாதிக்கும். ஹைதராபாத்தில் ஷூட் செய்ய திட்டமிட்ட விஜயின் ‘வாரிசு’, ரஜினியின் ‘ஜெயிலர்’ போன்ற படங்களின் ஷூட்டிங் தடைப்படுமா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...