No menu items!

டெவன் கான்வேக்கு காயம் – சிக்கலில் சிஎஸ்கே

டெவன் கான்வேக்கு காயம் – சிக்கலில் சிஎஸ்கே

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன. மார்ச் 22-ம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடவுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடிபோல் தாக்கியுள்ளது ஒரு செய்தி. சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவன் கான்வே காயத்தால் அடுத்த 2 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆடமாட்டார் என்பதுதான் அந்த செய்தி.

அதிக ரன்களை குவித்த வீர்ர்:

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றதில் டெவன் கான்வாய்க்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 16 போட்டிகளிலும் ஆடிய டெவன் கான்வே மொத்தம் 672 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் 2023 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

டெவன் கான்வேயும், ருதுராஜ் கெய்க்வாட்டும் சிறந்த தொடக்க ஜோடியாக இருந்ததால் புதியதாக எந்த தொடக்க ஆட்டக்காரரையும் இந்த ஐபிஎல் தொடரின் ஏலத்தில் வாங்க சிஎஸ்கே ஆணி ஆர்வம் காட்டவில்லை.

அறுவை சிகிச்சை தேவை:

இந்த சூழலில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து அணிகளிடையே நடந்த டி20 கிரிக்கெட் போட்டியின்போது டெவன் கான்வேயின் இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரமாகியும் காயம் ஆறாததைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில், கான்வாய் அந்த விரலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதும், அதன் பிறகு சுமார் 8 வாரங்கள் போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் ஓய்வெடுக்க வேண்டியதும் கட்டாயம் என்று தெரியவந்துள்ளது.

8 வாரம் ஓய்வு என்றால், வரும் மே மாதம் முதல் வாரம் வரை அவரால் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட முடியாது. இதனால் சிஎஸ்கே அனி புதிய தொடக்க ஆட்டக்காரரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

கான்வேக்கு மாற்று யார்?

டெவன் கான்வேய் காயமடைந்ததை தொடர்ந்து அவருக்கு மாற்றாக ஒரு வீர்ரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. இப்போதைக்கு அந்த இடத்துக்கு நியூஸிலாந்து வீர்ரான ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த உலக்க் கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக ரச்சின் ரவீந்திரா இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் 1.80 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ரச்சின் ரவீந்திராவை வாங்கியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...