No menu items!

நிக்கோலய் சச்தேவ் யாரு தெரியுமா?

நிக்கோலய் சச்தேவ் யாரு தெரியுமா?

நிக்கோலய் சச்தேவ், மார்ச் 1-ம் தேதிதான் இப்படியொரு பெயரைச் சொன்னார். வரலட்சுமி சரத்குமார். இன்னும் சில வாரங்களில் இவர் வரலட்சுமியின் கரம்பிடித்து கணவராக இருக்கிறார்.

வரலட்சுமியின் அம்மா சாயா தேவி, அப்பா சரத்குமார், சித்தி ராதிகா உட்பட குடும்பத்தினர் எல்லோருமே வரலட்சுமியின் நிச்சயத்தார்த்தில் ஆஜராகி இருந்தனர். மும்பையில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டில் வைத்து நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

வரலட்சுமியும், விஷாலும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற கிசுகிசு ரொம்ப நாட்களாகவே கோலிவுட்டில் சுற்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று வரலட்சுமியும், விஷாலும் சொன்ன பிறகும் கூட அந்த கிசுகிசு அடங்கவில்லை. விஷாலுக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கல்யாணம் என்றதும்தான் அந்த பஞ்சாயத்து ஓய்ந்தது. விஷாலுக்கு நடைபெற்ற நிச்சயத்தார்த்தம், திருமணம் வரை தொடரவில்லை.

இப்படியொரு சூழலில் வயது எகிறிக்கொண்டே போக போகதான், அம்மா சாயாதேவி களத்தில் இறங்கியிருக்கிறார். ’ஒண்ணு நீ மாப்பிள்ளைப் பாரு. யாருன்னாலும் சொல்லு. இல்லைன்னா நான் வரன் தேடுறேன்’ என்று கோபத்தில் கொந்தளிக்க அடங்கிப் போயிருக்கிறார் வரலட்சுமி.

யாருமே எதிர்பார்க்காத வகையில் மும்பைவாசியான நிக்கோலய் சச்தேவை தனது மாப்பிள்ளை என்று கைக்காட்டியிருக்கிறார் வரலட்சுமி.

யார் இந்த நிக்கோலய் சச்தேவ்?

மும்பையில் விலையுயர்ந்த ஓவியங்களை விற்பனை செய்யும் ஆர்ட் கேலரியை நடத்தி வருகிறார் நிக்கோலய் சச்தேவ்.

இவருக்கும் வயது 40-க்கும் மேல். ஏற்கனவே திருமணம் ஆனவர். டீன் ஏஜ்ஜில் ஒரு மகள் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு காதல் மனைவிக்கு இவருக்கும் இடையே உரசல் ஏற்பட அது விரிசலாகி விவாகரத்தில் முடிந்திருக்கிறது.

இவரது முன்னாள் மனைவி பெயர் கவிதா. இவர் மாடல். அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வாங்கியிருக்கிறார் கவிதா. காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், கருத்து வேறுபாடு அதிகமானதால் நிக்கோலயை விட்டு பிரிந்திருக்கிறார்.

மகள் கோசா. இவர் எடை தூக்கும் விளையாட்டில் கில்லாடி. பவர் லிஃப்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை அள்ளிக் கொண்டிருக்கிறார்.

நிக்கோலய் சச்தேவ் நடத்து ஆர்ட் கேலரியை அவரது அப்பா அருண் சச்தேவ் தொடங்கினார். மும்பையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஆர்ட் கேலரிக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் அடிக்கடி வந்து போவது உண்டு. இதனால நிக்கோலய்க்கு பாலிவுட் நட்சத்திரங்களின் பழக்கம் அதிகமிருக்கிறது.

உடல் முழுக்க டாட்டூ. முறுக்கேற்றிய உடற்கட்டு. நீண்ட கூந்தல் என நிக்கோலய் சச்தேவ் நச்சென்று இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...