No menu items!

பென் ஸ்டோக்ஸ் – CSKக்கு பலமா? பலவீனமா?

பென் ஸ்டோக்ஸ் – CSKக்கு பலமா? பலவீனமா?

கொச்சியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், அஜிங்க்ய ரஹானே, ஜெமிசன் ஆகிய 3 நட்சத்திர வீரர்களை தட்டித் தூக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மேலும் சில வீரர்களை சென்னை அணி வாங்கியிருந்தாலும் இந்த மூவரின் வரவு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த ஏலத்துக்கு செல்லும்போது சிஎஸ்கே நிர்வாகிகள் மனதில் முக்கியமாக இருந்த விஷயங்கள் மூன்று. முதல் விஷயம் கேப்டன். இந்ந்த தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவருக்கு மாற்றாக ஒரு கேப்டனை ஏலத்தில் வாங்க வேண்டும் என்பது சிஎஸ்கே நிர்வாகிகளின் முதல் குறிக்கோளாக இருந்தது. அடுத்தது ஆல்ரவுண்டர். ஐபிஎல் போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வுபெற்ற நிலையில் அவருக்கு மாற்றாக ஒரு தலைசிறந்த வெளிநாட்டு ஆல்ரவுண்டர் சென்னை அணிக்கு தேவைப்பட்டார். மூன்றாவதாக போட்டியை சிறப்பாக முடிக்கும் திறன்பெற்ற ஒரு சிறந்த பினிஷர் தேவைப்பட்டார். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரே வீரராக பென் ஸ்டோக்ஸ் இருந்ததால், கடைசிவரை போராடி 16.25 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த ஏலத்தைப் பொறுத்தவரை சிஎஸ்கே அணி முதலில் டார்கெட் செய்தது மயங்க் அகர்வாலையும், சாம் கரணையும்தான். ஆனால் சிஎஸ்கே அணியின் வசம் 20 கோடி ரூபாய்தான் இருந்தது என்பதால் ஏலத்தில் கவனமாக காய் நகர்த்தியது. உலகத் தரம் வாய்ந்த ஒரு ஆல்ரவுண்டர் வேண்டும் ஆனால் 17 கோடிக்கு மேல் அவருக்காக ஒதுக்க முடியாது என்பதில் கவனமாக இருந்தது சிஎஸ்கே. முதலில் மயங்க் அகர்வாலின் பெயர் வர அவரை எடுக்க முயன்றது. ஆனால் அகர்வாலின் ரேட் எறிக்கொண்டே போக அவரை வாங்கும் முடிவை கைவிட்டது. 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கே அஜிங்க்ய ரஹானே கிடைக்க, சந்தோஷமாக வாங்கியது.

அடுத்து சாம் கரணுக்காக மோதிப் பார்த்தது. ஆனால் அவரது ரேட் 17 கோடி என்ற சிஎஸ்கேவின் டார்கெட்டை தாண்டிப் போனது. ஆனாலும் பதறாமல் காத்திருந்தது சிஎஸ்கே. இந்த நேரத்தில் மற்ற முக்கிய வீரர்களை வாங்கியதால் மும்பை, பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளின் கையிருப்பு குறைய பென் ஸ்டோக்ஸ் ஏலத்துக்கு வந்தார். அவருக்காக துண்டைப் போட்டது சிஎஸ்கே. மற்ற அணிகளால் ஓரளவுக்கு மேல் ஏலத்தொகையை ஏற்றமுடியாமல் போக, தங்கள் டார்கெட்டான 17 கோடி ரூபாய்க்குள் பென் ஸ்டோக்ஸை வாங்கியிருக்கிறது சிஎஸ்கே.

பென் ஸ்டோக்ஸைப் பொறுத்தவரை தோனியின் தலைமையில் ஆடுவது இது முதல் முறையல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக இருந்தார். இந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் தோனியின் தலைமையில் ஆடியிருக்கிறார். பல போட்டிகளில் தோனி – ஸ்டோக்ஸ் ஜோடி சிறப்பாக ஆடி அந்த அணிக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் இருப்பதால் தோனி மெல்ல மெல்ல தனது கேப்டன் பதவியை அவரிடம் ஒப்படைப்பார் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய மற்றொரு வீரரான அஜிங்க்ய ரஹானேவும் தோனியின் தலைமையில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆடியவர்தான்.

சென்னை அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டரில் நிலையாக நின்று ஆடக்கூடிய, அனுபவம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மேனை தேடிவந்தது. அந்த வகையில் முதலில் சிஎஸ்கே டார்கெட் செய்தது மயங்க் அகர்வாலைத்தான். ஆனால் அவரது ஏலத்தொகை கோடிக்கணக்கில் எகிற, அந்த எண்ணத்தை கைவிட்டது. அடுத்ததாக ரஹானேவின் பெயர் அறிவிக்கப்பட, அவரை வாங்க யாரும் முன்வரவில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்ட சிஎஸ்கே நிர்வாகம் அவரது அடிப்படை விலையான 50 லட்ச ரூபாயைக் கொடுத்து அவரை சல்லிசாக அள்ளியது.

அவரைப்போலத்தான் நியூஸிலாந்து வீரர் ஜெமிசனும். டி20 சர்வதேச போட்டிகள் பலவற்றில் சிறப்பாக பந்துவீசி நியூஸிலாந்து அணிக்கு வெற்றிகளை குவித்தவர் ஜெமிசன். ஆனால சமீப காலமாக அவர் காயத்தால் அவதிப்பட, ஜெமிசனால் ஐபிஎல் தொடருக்குள் மீண்டுவர முடியுமா என்ற சந்தேகத்தில் பலரும் அவரை வாங்க மறுத்தனர். ஆனால் சிஎஸ்கேவின் பயிற்சியாளரான பிளம்மிங், தற்போது ஜெமிசன் தேறி வருவதாகவும், ஐபிஎல்லுக்குள் பழைய ஆற்றலை அவர் பெற்றுவிடுவார் என்றும் டிப்ஸ் கொடுக்க 1 கோடி ரூபாய் என்ற அவரது அடிப்படை விலையை கொடுத்து சல்லிசாக அள்ளியது.

இந்த 3 வீரர்களைத் தவிர இந்த ஏலத்தில் சென்னை அணி வாங்கியதில் கவனிக்கப்பட வேண்டிய வீரர் நிஷாந்த் சிந்து. ஹரியானாஅவைச் சேர்ந்த 19 வயது இளம் வீரரான சித்து, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியா ஜெயிக்க முக்கிய காரணமாக இருந்தவர். எதிர்காலத்துக்காக அவரை சிஎஸ்கே அணி வாங்கி இருக்கிறது.

எல்லாம் சரி இந்த வீரர்களை வைத்து சிஎஸ்கே அணியால் ஐபிஎல்லை வெல்ல முடியுமா? பென் ஸ்டோக்ஸின் வருகை மட்டும் சென்னை அணியை தூக்கி விடுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருக்கிறது.

சிஎஸ்கேவைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சை அடிப்படைப்படையாக கொண்ட மொலின் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் பல காலமாகவே வேகப்பந்து வீச்சை அடிப்படையாக கொண்ட ஆல்ரவுண்டர்களுக்குதான் பஞ்சம் இருந்தது. பிராவோ அந்த இடத்தை கொஞ்சம் நிரப்பினாலும் அவரால் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் பென் ஸ்டோக்ஸால் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் பெரிய அளவில் சாதிக்க முடியும். தொடக்க ஆட்டக்காரராகவும், பினிஷராகவும் இரண்டு இடங்களிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும்

2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஜெயிக்க முக்கிய காரணம் தோனி. அதுபோல் 2019-ல் நடந்த உலகக் கோப்பையில் தனிநபராக போராடி இங்கிலாந்துக்கு கோப்பையை வென்று கொடுத்தவர் பென் ஸ்டோக்ஸ். கடைசிவரை போராடும் குணம் கொண்ட இந்த 2 வீரர்களும் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிரைனாக இருக்கிறார்கள். இந்த 2 மாச்டர் பிரையினும் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது மற்ற வீரர்களுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். இது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பலம் என்றும் கிறிஸ் கெயில் கூறுகிறார்.

அதேநேரத்தில் ஒரு உறையில் இரு கத்திகள் இருப்பது பொருந்தாது. 2 மாஸ்டர் பிரெயின்களான தோனியும், பென் ஸ்டோக்ஸும் ஒரே அணியில் இருப்பது முடிவுகளை எடுப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அணி பலவீனமாகும் என்று மற்றொரு பிரிவினர் கூறுகிறார்கல். ஸ்டோக்ஸின் வருகை சிஎஸ்கேவுக்கு பலமா பலவீனமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...